பிரபஞ்சத்தையும் என்னையும் படைத்தவன் யார்? நான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்;? (எனது படைப்பின் இலக்குதான் என்ன?
மொழிபெயர்க்கப்பட்ட விடயங்கள்
- Tiếng Việt - Vietnamese
- ไทย - Thai
- العربية - Arabic
- অসমীয়া - Assamese
- ગુજરાતી - Unnamed
- فارسی دری - Unnamed
- Wikang Tagalog - Tagalog
- English - English
- Èdè Yorùbá - Yoruba
- සිංහල - Sinhala
- Кыргызча - Кyrgyz
- 中文 - Chinese
- Kinyarwanda - Kinyarwanda
- español - Spanish
- Русский - Russian
- azərbaycanca - Azerbaijani
- Shqip - Albanian
- Bahasa Indonesia - Indonesian
- Deutsch - German
- čeština - Czech
- български - Bulgarian
- magyar - Hungarian
- हिन्दी - Hindi
- svenska - Swedish
- বাংলা - Bengali
- فارسی - Persian
- Kurdî - Kurdish
- bosanski - Bosnian
- తెలుగు - Telugu
- اردو - Urdu
- پښتو - Pashto
- Nederlands - Dutch
- português - Portuguese
- ქართული - Georgian
- Akan - Akan
- Türkçe - Turkish
- ພາສາລາວ - Unnamed
- Ўзбек - Uzbek
- മലയാളം - Malayalam
- polski - Polish
- Српски - Serbian
- Lingala - Unnamed
- አማርኛ - Amharic
பிரிவுகள்
Full Description
பிரபஞ்சத்தையும் என்னையும் படைத்தவன் யார்? நான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்;? (எனது படைப்பின் இலக்குதான் என்ன?
நான் சரியான பாதையில் தானா பயணித்துக்கொண்டிருக்கிறேன் ?
எமது அறிவுக்கண்கள் முழுமையாக அறிந்திராத மிகப்பிரமாண்ட படைப்புகளான வானங்கள்,பூமி மற்றும் அதில் உள்ளவற்றையெல்லாம் படைத்தவன் யார்?
வானத்திலும் பூமியிலும் செயற்படும் மிகவும் நுணுக்கமானதும், துல்லியமானதுமான ஒழுங்கை அமைத்தவன் யார்?
மனிதனைப் படைத்து அவனுக்கு செவிப்புலனையும், பார்வையையும், பகுத்தறிவையும் வழங்கி, அறிவு ஞானங்களை பெற்றுக்கொள்ளவும், உண்மைகளை புரிந்து கொள்ளவும் தகுதிமிக்கவனாக ஆக்கியவன் யார்?
உமது உடல் உறுப்புக்களில் துல்லியமான கைவினைத்திறனை உருவாக்கி, உமது உருவத்தை எவ்வித முன்மாதிரியுமின்றி அழகாக்கி வடிவமைத்தவன் யார்?
பல் வேறு வித்தியாசங்களுடனும்.பன்முகத் தன்மையுடனும் படைக்கப்பட்டுள்ள,எண்ணிலடங்காத உயிரினங்கள் குறித்து நீ சிந்தித்தத்ததுண்டா?
மேலும் இம்மாபெரும் பிரபஞ்சமானது அதன் விதிகளுக்கமைவாக பல ஆண்டுகளாக மிகவும் துல்லியமான கட்டுக்கோப்புடன் இயங்குவதற்கு எவ்வாறு ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது? என்பது பற்றி சிந்தித்ததுண்டா?
இவ்வுலகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது ஆளக்கூடிய முறைமைகளை (வாழ்வு,மரணம், உயிரிணங்களின் இனப்பெருக்கம்,இரவு பகல்,பருவகால மாற்றங்கள் போன்றவை) வகுத்தவன்-நிருவியவன்- யார்?
இப்பிரபஞ்சம் தன்னைத்தானே படைத்துக்கொண்டதுவா? அல்லது இல்லாமையிலிருந்து வந்தா? அல்லது எதேச்சையாக உருவானதா? இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :﴿أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ (٣٥) "எப்பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டனரா? அல்லது அவர்களே படைக்கின்றவர்களா?أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضَ بَلْ لَا يُوقِنُونَ﴾ அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை.(( அத்தூர் : 35-36)
நாமே எம்மைப்டைத்துக் கொள்ளவில்லையெனில், இல்லாமையிலிருந்து, எதேச்சையாக நாம் வந்தோம் என்பதும் அசாத்தியமானது எனில், எவ்வித சந்தேகத்திற்குமிடமில்லாது வல்லமையும் மகத்துவமிக்க இப்பிரபஞ்சத்ததை படைத்த ஒருவன் உள்ளான் என்பதை இது உறுதிப்படுத்துகிறதல்லவா? இப்பிரபஞ்சம் தன்னை தானே சிருஷ்டித்துக்கொண்டது! அல்லது இல்லாமையிலிருந்து வந்தது! அல்லது எதேச்சையாக தோன்றியது என்பது போன்ற கருத்துக்கள் யாவும் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ள முடியாத அசாத்தியமான வாதங்களாகும்.
புரிதல்,பகுத்தறிவு, ஆன்மா,உணர்வுகள்,பாசம் போன்ற மனிதன் தனது புறக்கண்களால் காணாத விடயங்களை நம்புவது ஏன்? அவைகளின் பிரதிபளிப்புகளை –விளைவுகளை தனது புறக்கண்களால் அவன் காண்பதால் அல்லவா! அவ்வாறாயின் இந்த மிகப்பிரமாண்டமான பிரபஞ்சத்தை படைத்தவனின் பிரதிபளிப்புகளான –விளைவுகளான- உயிரிணங்களையும்,அவனின் நேர்த்தியான கைவினைகளையும்,அவனின் அளப்பரிய கருணையையும் காணும் மனிதன் அவனின் இருப்பை எப்படி ஏற்றுக்கொகொள்ளாது இருக்க முடியும்? ஏற்றுக்கொள்வது அறிவுடைமையல்லவா!
இந்த வீடு எவரும் நிர்மாணிக்காமலே உருவானது! அல்லது இந்த வீட்டை இல்லாமை என்பது உருவாக்கியது என்று கூறினால் பகுத்தறிவுள்ள எவறும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அல்லவா! அதே போன்று இம்மாபெரும் பிரபஞ்சம், படைப்பாளன் இன்றி உருவானது என்று கூறுவோரை எப்படித்தான் சிலர் நம்புகிறார்களோ தெரியவில்லை! அதே போன்று இம்மாபெரும் பிரபஞ்சத்தின் நேர்த்தியான ஒழுங்கு தற்செயலாக உருவானது என்று கூறப்படுவதை ஒரு பகுத்தறிவுள்ள ஒருவர்,எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இவை நாம் சிந்திக்க வேண்டிய வினாக்கள்!
இவை அனைத்தும், நம்மை ஒரே முடிவின்பால் தான் இட்டுச்செல்லுகிறது. அதாவது இந்த பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் மாபெரும் சக்திவாய்ந்த ஒர் இறைவன் இருக்கிறான், அவன் ஒருவன் மாத்திரமே வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன், அவனைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் செல்லுபடியவற்றவை.(அசத்தியமானவை ) அவைகள் வணங்குவதற்கான எத்தகைய தகுதியுமற்றவை! என்ற ஆழமான நம்பிக்கையை தருகிறது!
மாபெரும் சிருஷ்டிகர்த்தா எனும் இரட்சகன்
இந்தப்பிரபஞ்சத்தைப் படைத்த ஒர் இறைவன் உள்ளான். அவன்தான் இப்பிரபஞ்சத்தின் உரிமையாளனும் நிர்வகிப்பாளனுமாவான். அவனே இங்குள்ள உயிரினங்களுக்கு தேவையான அத்துனை வாழ்வாதாரங்களை வழங்குபவன். உயிர் கொடுப்பவன் மரணிக்கச்செய்பவன். இப்பூமியை படைத்து அதனை உயிரினங்கள் வாழ்வதற்கு பொருத்தமானதாகவும், இசைவானதாகவும் ஆக்கினான்.மேலும் வானங்களையும் அதிலுள்ள மிகவும் பிரமாண்டமான அம்சங்களையும் சிருஷ்டித்தான்.அத்துடன் சூரியன்,சந்திரன் ,இரவு பகல் போன்றவைகளுக்கான நுனுக்கமான,சீரிய இயக்க ஒழுங்கொன்றை ஏற்படுத்தியிருப்பது அவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் எடுத்துக் காட்டுகிறது.
அவன்தான் எமக்கு காற்றை வசப்படுத்தித் தந்தவன் அதின்றி எம்மால் உயிர் வாழ முடியாது.அவன்தான் எமக்குப் மழையைப் பொழியச் செய்து கடல்களையும்,நதிகளையும் வசப்படுத்தித்தந்தான். தாயின் வயிற்றில் நாம் கருவாக மிகவும் பலயீனமானவர்களாக இருந்த போது எமக்கு ஊட்டச்த்தை தந்து நம்மை வளர்த்து பாதுகாத்து, நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம் நரம்புகளில் இரத்தத்தை ஒடச்செய்பவனும் அவனே !
படைத்து, பரிபாளித்து வாழ்க்கை வசதிகளை தருகின்ற அந்த இறைவன் அவன்தான் உயர்வும் கண்ணியமும் தூய்மையும் நிறைந்த அல்லாஹ்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான்:﴿إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ﴾ " நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; அது வெகு தீவிரமாகவே அதைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டவையாக படைத்தான். (படைத்தலும்) படைப்பினங்களும் (அவற்றின்) ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா?அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்து, பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்".(அல் அஃராப் : 54)
அல்லாஹ்வே, இந்த பிரபஞ்சம் முழுவதிலும் நாம் கண்களால் காணும் மற்றும் காணாத அனைத்தினதும் சிருஷ்டி கர்த்தாவும் இறைவனும் ஆவான்.அவனைத் தவிரவுள்ள அனைத்தும் அவனின் படைப்புகளாகும்.அவன் ஒருவன் மாத்திரமே வணங்கி வழிபட வணக்கங்கங்களை செலுத்த தகுதிபெற்றவன். அவனுடன் இணைத்து எவரையும் வணங்குதல் கூடாது. அவனின் ஆட்சியி லோ, படைத்தலிலோ, நிர்வாகத்திலோ மற்றும் வணக்கத்திலோ அவனுக்கு இணையான எவரும் கிடையாது.
ஒரு வாதத்திற்கு நாம் படைத்து பரிபாலிக்கும் இரட்சகனான அல்லாஹ்வுடன் வேறுகடவுளர்கள் உள்ளார்கள் என்று வைத்துக்கொண்டால், இப்பிரபஞ்சத்தின் இயக்க ஒழுங்கு சீர்குழைந்து விடும்! ஒரே நேரத்தில் இப்பிரபஞ்சத்தின் விவகாரங்களை திட்டமிடும் இரு கடவுளர்கள் இருப்பது பொருத்தமாக ஒரு போதும் அமையாது. அங்கே சீர்கேடும், குழப்பமும் உருவாகிவிடும். இது குறித்து உண்மையான இறைவனாகிய அல்லாஹ் ,இவ்வாறு பிரஸ்தாபிக்கிறான்.{لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا} (வானம் பூமி ஆகிய) இவ்விரண்டிலும்; அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள்கள் இருந்திருப்பின் அவையிரண்டும் சீர் குழைந்திருக்கும்) (22)(அல் அன்பியா : 22)
படைத்து பரிபாலித்து இரட்சிக்கும் இறைவனின் பண்புகள்;
இரட்கனான அல்லாஹ்விற்கு கணக்கிடமுடியாத அளவிற்கு அழகிய திருநாமங்கள் உண்டு. அதே போன்று அவனின் பரிபூரணத்தன்மையையும் மகிமையையும் எடுத்துக்காட்டும் அதிகமான உயர் பண்புகளும் அவனுக்குண்டு. அல்காலிக் (சிருஷ்டிகர்த்தா) அல்லாஹ் (,தன் கருத்து வணக்கத்திற்கு தகுதியான ,இணை துணையற்ற ஒரே ,றைவன்.) அல் ஹய்யு (நித்திய ஜீவன்) அல்கய்யூம் (நிர்வகிப்பவன்) அர்ராஸிக் (வாழ்வாதாரத்தை வழங்குபவன்) அல்கரீம் (மிகப்பெரும் கொடையாளன்) போன்றன அவனுக்கே உரித்தான சில பெயர்களாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் :﴿اللَّهُ لا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ﴾ 'அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்ழி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இதி(ணு)னிஹி யஃலமு மாபய்ன அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹீ இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ழ வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்' பொருள் :(உண்மையாக) வணங்கப்படத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவமானவன். (4)(ஸூறதுல் பகரா : 255)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (١) (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.اللَّهُ الصَّمَدُ (٢) (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (٣) "அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவருக்கும்) பிறக்கவுமில்லை".وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ﴾ அவனுக்கு நிகராக எவருமில்லை(இஃலாஸ் : 1- 4).
வணங்கி வழிபடக்கூடிய இறைவன் நிறைவான பண்புகளைப் பெற்றுள்ளான்.
இறைவனாக ஏற்று வழிபடத்தகுதியானவன் என்பது அவன் பெற்றிருக்கும் பண்புகளில் ஒன்றாகும்.எனவே அவன் தவிரவுள்ள அத்துனை உயிரினங்கள் மற்றும் படைப்புகள் யாவும் சிருஷ்டிக்கப்பட்டவை என்பதுடன் பணிகள் சுமத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் செயல்படுபவைகளாகும்;.
அல் ஹய்யுல் கய்யூம்; என்பது அவனின் பண்புகளில் உள்ளவையாகும். இதன் கருத்து உயிரோடிருப்பவன் நிலையானவன் நிர்வகிப்பவன் என்பதாகும். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கு அல்லாஹ்தான் உயிர்கொடுத்து, அவற்றை இல்லாமையிலிருந்து படைத்தான்.எனவே அவன்தான் அதன் இருப்பிற்கும்; வாழ்வாதாரத்திற்கும்,தேவைக்கும் பொறுப்பாளனாவான்.ஆகவே இறைவன் என்றும் உயிரோடு இருப்பவன் அவன் மரணிப்பதில்லை அழிவென்பதே அவனுக்குக் கிடையாது அது சாத்தியமற்றது. அவன் நிலையானவன் அவன் ஒரு போது தூங்ககுவதுமில்லை.மாறாக சிறுதூக்கமோ பெரும் தூக்கமோ அவனை பீடிப்பதில்லை இவ்வகை அற்பமான குறைகளைவிட்டும் அவன் தூய்மையானவன்.
அவனின் பண்புகளுள்; (அல் அலீம்) யாவற்றையும் அறிந்தவன் என்பதும் ஒன்றாகும். அதாவது வானம் பூமியில் உள்ள எந்த ஒன்றும் அவனுக்கு மறைந்தவை அல்ல என்பது இதன் அர்த்தமாகும்.
அஸ்ஸமீஉல் பஸீர் (நன்கு செவிமடுப்பவன் பார்ப்பவன்) என்பது அவனின் பண்புகளில் உள்ளவையாகும்.எல்லாவகையான ஓசையையும் செவிமடுப்பவன் எல்லாப்படைப்புகளை பார்ப்பவன் என்பது இதன் கருத்தாகும்.உள்ளத்தில் ஊசாட்டங்களையும் இதயங்கள் தன்னுள் புதைத்து மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் அறிகிறான். வானம் பூமியில் உள்ள எந்த ஒன்றும் அவனுக்கு மறைந்தவை அல்ல.
அல்கதீர் என்பது (மிகவும் சக்தியுள்ளவன் -வல்லமைமிக்கோன்- ) அவனின் பண்புகளில் ஒன்றாகும். எனவே அவனை இயலாமல் செய்கிற எந்த ஒன்றும் இப்பிரபஞ்சத்தில் கிடையாது.அவனின் நாட்டத்தை எவறாலும் புறந்தள்ளவோ நிராகரிக்கவோ முடியாது.நாடியதை அவன் செய்து முடிப்பான்.நாடியாதை கொடுக்காது தடுத்துக்கொள்வான்.எந்தக் காரியத்தையும் முற்படுபடுத்துவான்; பிற்படுத்துபவான் அதில் அவனுக்கே உரித்தான ஆழமான ஞானமும் நுட்பமும் பொதிந்திருக்கும்.
படைத்து,போசித்து திட்டமிடுபவன் என்பது அவனின் பண்புகளில் சிலதாகும். அவனே சிருஷ்டிகளை படைத்து அவற்றை திட்டமிட்டு நிர்வகிக்கிறான்.படைப்புகள் அனைத்தும் அவனின் அதிகாரத்திற்கும் ஆளுகைக்குக் கீழுமே உள்ளன.
அவனின் பண்புகளில், நிர்க்கதிக்குள்ளானவரின்-தேவையுடையோரின் பிரார்த்தனைக்கு பதிலளித்தல்; துன்பப்படுபவர்களுக்கு நிவாரணம் அளித்தல்; மற்றும் பேரிடரை நீக்குதல் போன்றன உள்ளன. உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவை கடும் துயர் அல்லது நெருக்கடி போன்றவற்றில் வீழ்ந்து விட்டால் நிர்கதியினால் அவனிடமே புகழிடம் தேடி ஓதுங்குகின்றன.
வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருத்தல் வேண்டும்.ஏனெனில் அவன் மாத்திரமே வணக்கத்திற்கு முழுமையான தகுதிபடைத்தவன்.அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்கப்படும் அனைத்தும் அசத்தியக் கடவுள்களாகும். அவை அனைத்தும் மரணத்திற்கும் அழிவிற்கும் உட்படக்கூடியவையே!
அல்லாஹ்வின் வல்லமை மற்றும் மகத்துவத்தை புரிந்து கொள்ள அவன் எமக்கு பகுத்தறிவை தந்துள்ளான். நல்லதை விரும்பி தீயதை விரும்பாமல் இருக்கும் இயல்பை எம்மில் அவன் விதைத்துள்ளான். அந்த இயல்பு அகிலங்களின் அதிபதி அல்லாஹ்விடம் அடைக்களம் தேடிச்சென்றுவிட்டால் அது அமைதிபெறுகிறது. அந்த வகையில் அந்த இயல்பு அவன் பூரணமானவன் குறையற்றவன் என்பதை காட்டுகின்றது.
ஆகவே ஒரு பகுத்தறிவு படைத்த புத்தியுள்ளவன் எல்லாப்பண்புகளாளும் நிறைவான எவ்விதக் குறைகளுமற்ற ஒருவனை வணங்குவதே அவனுக்குப் தகுதியான விடயமாகும். ஆகவே மனிதன்; குறைகளுடைய அவனைவிட தகுதியில் குறைந்த ஒன்றை எப்படி வணங்கிட முடியும?
இந்த அடிப்படையில் கடவுள் என்பவன் மனிதனாகவோ அல்லது சிலையாகவோ அல்லது மரமாகவோ அல்லது மிருகமாகவோ ,இருக்க முடியாது!
இறைவன் -அல்லாஹ் வானங்களுக்கு மேலால் அர்ஷிற்கு அப்பால் உள்ளான்.தனது படைப்புகளை விட்டும் அவன் வேறுபட்டவன்;, தனித்துவமானவன். அவனின் மெய்நிலையில் படைப்புகளின் பண்புகள் எதுவும் கிடையாது. அதே போன்று படைப்புகளில் அவனின் மெய்நிலைப்பண்புகள் ஏதும் கிடையாது. அவன் எந்தப்படைப்பினுள்ளும் சங்கமிப்பதோ, இறங்குவதோ பிரதிபளிப்பதோ கிடையாது, இவ்வாறான தன்னிகரற்ற இறைவனையே இஸ்லாம் கடவுளாக வழிபட வழிகாட்டுகிறது.
இஸ்லாத்தில் இறைவனுக்கு ஒப்பான- எதுவும் கிடையாது. அவன் நன்கு செவிமடுப்பவனும் யாவற்றையும் பார்ப்பவனுமாவான். அவனுக்கு நிகராக எவரும் கிடையாது. அவன் படைப்பினங்களிலிருந்து தேவையற்றவன் மற்றும் தன்னிறைவானாவன். அவன் தூங்கவோ சாப்பிடவோ மாட்டான்.அவன் மகத்தானவன் அவனுக்கு மனைவியோ மக்களோ கிடையாது. சிருஷ்டிகர்த்தாவுக்கென மகத்தான பண்புகள் உண்டு. அவன் ஒரு போதும் தேவை அல்லது குறை போன்ற பண்புகளை கொண்டவனாக இருக்க மாட்டான்.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறினான்.﴿يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ (٧٣) மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதைசெவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள் என) அழைக்கிறீர்களோ அவை அனைத்தும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஈ ஒன்று அவற்றினுடைய ஒரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (அவர்கள் தெய்வங்கள் என) அழைக்கும் அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்கள் என) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே!مَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ﴾ அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்த வில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான்.(அல் ஹஜ் : 73-74)
மகத்துவம் நிறைந்த சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ் -இறைவன்- எம்மைப்படைத்தது ஏன்? அவன் எம்மிடமிருந்து எதனை விரும்புகிறான்?
ஞானமும் முக்காலம் பற்றிய அறிவும் குறைவின்றி நிறைவாகப் பெற்ற அல்லாஹ் இந்த உயிரினங்களை எவ்வித இலக்கின்றி படைத்திருப்பான்? அல்லது வீணாக படைத்தான்? என்பதை பகுத்தறிவு கூட ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.
இவ்வளவு நுணுக்கமாகவும்; கச்சிதமாகவும் -செம்மையாகவும்- நம்மைப் படைத்து, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் நமக்குக் வசப்படுத்தித் தந்தோனாகிய அல்லாஹ்-இறைவன்- எந்த நோக்கமும் இல்லாமல் நம்மைப் படைத்துள்ளான்! அல்லது நம்மை ஆட்கொள்ளும் மிக முக்கியமான கேள்விகளான ஏன் நாம் இங்கே வந்தோம்? இறந்த பிறகு எமது நிலை என்ன? நமது படைப்பின் நோக்கம் யாது? போன்ற வினாக்களுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டுவிட்டான் என்பதை எமது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளுமா?
அநியாயக்காரனுக்கு- தண்டனையோ, நல்லவருக்கு வெகுமதியோ கிடையாது என்பதை பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளுமா?
அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்;﴿أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ﴾ ''"நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.)".(முஃமினூன் : 115)
மாறாக அல்லாஹ் இப்பிரபஞ்சத்தின் எமது இருப்புக்கான இலக்கை எமக்கு அறிமுகப்படுத்திதருவதற்காக இறைத்தூதர்களை அனுப்பி, நாம் அவனை எப்படி வணங்குவது, அவனை நெருங்குவதற்கான வழிமுறை யாது?அவன் எம்மிடம் எதை விரும்புகிறான்? அவனின் திருப்தியை பெரும் வழி முறை யாது? மரணத்தின் பின்னரான எமது நிலை குறித்த விடயங்களையெல்லாம் அவர்களினூடாக காட்டித்தந்தான்.
வணங்கி வழிபடுபவதற்கும்,வணக்கங்களை செலுத்துவதற்கும் தகுதியான ஒருவன் அல்லாஹ் மாத்திரமே என்பதை எமக்கு அறியத்தரவும் அவனை எப்படி வணங்க வேண்டும் என்ற வழிமுறைகளை கற்றுத்தரவுமே அல்லாஹ் அவனது தூதர்களை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்தான். அவர்கள் எமக்கு அவனின் கட்டளைகளையும்,(தவிர்ந்து நடக்க வேண்டிய தடைசெய்யப்பட்ட) தடுக்கப்பட்ட விடயங்களையும் எமக்கு எத்திவைத்தார்கள்.மேலும் அவர்கள் சிறந்த பண்பாடுகளையும் உயர் பெருமானங்களையும் எமக்கு போதித்தார்கள் அவற்றை நாம் எமது வாழ்வில் பின்பற்றி ஒழுகினால் பாக்கியங்களும் அருள்வளமும் நிறைந்ததாக எமது வாழ்வு ஜோலித்திடும்.
அல்லாஹ்,(நூஹ், இப்ராஹீம், மூஸா,ஈஸா )போன்ற அதிகமான தூதர்களை மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கில் அனுப்பி வைத்தான். அவர்களின் உண்மைத் தன்மையையும் உறுதிப்படுத்தவும், அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர்கள் என்பதை நிரூபிக்கவும் அத்தாட்சிகள்,மற்றும் அற்புதங்களை வழங்கி அவர்களுக்கு உதவிசெய்தான். இத்தூதர்களுள் இறுதியாக வந்தவராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உள்ளார்கள்.
இறைவனால் அனுப்பப்பட்ட அத்தூதர்கள் இந்த வாழ்க்கை தற்காலிகமானது இது ஒரு சோதனை என்பதையும்,உண்மையானதும் நிலையான வாழ்வும் மரணத்தின் பின் உள்ளது என்பதை மிகத்தெளிவாக எமக்கு அறிவித்துள்ளார்கள்.
மேலும் இறைத்தூதர்கள் அனைவரையும் விசுவாசித்து இணையில்லாத அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபட்ட முஃமின்களுக்கு- இறைவிசுவாசிகளுக்கு- சுவர்க்கம் உண்டு எனவும் அல்லாஹ்வுடன் பிறகடவுள்களை வணங்கியவர்கள் அல்லது அல்லாஹ்வை இறைவனாக ஏற்பதை புறக்கணித்தோர் அல்லது அல்லாஹ்வின் தூதர்களில் எவரையாவது ஏற்காதோர் ஆகிய அனைவருக்கும் அல்லாஹ் நரகத்தை சித்தப்படுத்தியுள்ளான் என்பதையும் அத்தூதர்கள் எமக்கு போதித்துள்ளார்கள்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்;﴿يَا بَنِي آدَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِنْكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي فَمَنِ اتَّقَى وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (٣٥) ஆதமுடைய மக்களே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என் வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள்.وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ﴾ (எனினும்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.(அல் அஃராப் : 36)
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறினான்;﴿يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (٢١) "மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்பிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்.(அவ்வாறு செய்வதனால் மட்டுமே)நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்".الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ (٢٢) அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகிறான். ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள்.وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (٢٣) "நமது அடியார் (முஹம்மத்) மீது நாம் இறக்கிய வேதத்தில் நீங்கள் சந்தேகத்திலிருந்தால் அது போன்றதோர் அத்தியாயத்தைக் கொண்டுவாருங்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதற்காக ) அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொள்ளுங்கள்" (23).فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ (٢٤) அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால், உங்களால் ஒரு போதும் செய்யவே முடியாது. ஆக, தீய மனிதர்களும் கற்களும் எரிபொருட்களாக இருக்கின்ற அந்த நகரத்தை அஞ்சிக்கொள்ளுங்கள். அது நிராகரிப்பாளர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது". (24)وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ﴾ (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கு (சொர்க்கத்தில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீர் நற்செய்தி கூறுவீராக. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும் போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டுக்)கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரேவிதமாகத் தோன்றக்கூடியவற்றையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்.) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். மேலும், அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்பகரா: 21-25)
பல தூதர்கள் அனுப்பப்பட்டது ஏன்;?
அல்லாஹ் தனது தூதர்களை எல்லா சமூகங்களுக்கும் தேசங்களுக்கும் அனுப்பி வைத்தான்.தனது ஏவல்களையும், விலக்கல்களையும்; அந்த சமுதாயத்தவருக்கு எத்திவைத்து தன்னை மாத்திரமே இறைவனாக ஏற்று வணங்க வேண்டும் என்பதின் பால் அழைப்புவிடுக்கவும் அவர்களை அனுப்பி வைத்தான். எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்வை மாத்திரம் வழிபடுவதே அவர்கள் அனைவரது பிரச்சாரத்தின் குறிக்கோளாக இருந்தது. ஒரு சமுதாயம் தனது தூதர் கொண்டுவந்த ஏகத்துவம் தொடர்பான கட்டளைகளை கைவிட்டு அல்லது அவற்றை அலங்கோலப்படுத்தும் போதெல்லாம், அவர்களை சீர்படுத்தி அம்மக்களை திரும்பவும் சீரான வழியில் செலுத்தவும் அல்லாஹ்வை மாத்திரம் கடவுளாக ஏற்று அவனுக்கு கீழ்படிந்து நடக்கவும் வழிகாட்ட இன்னுமொரு தூதரை அல்லாஹ் நியமிக்கிறான்.
இவ்வாறு அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கு தூதர்களை அனுப்பும் நிலையை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அவர்களை இறுதித்தூதராக அனுப்பி முடிவுக்குக் கொண்டுவந்தான். நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமைவரையில் தோன்றும் மனித சமூகத்திற்கான நிரந்தரமானதும் பரிபூரணமானதுமான மார்க்கத்தை கொண்டுவந்துள்ளார்கள். இம்மார்க்கம் முழுமைத்துவம் பெற்றதாகவும் இதற்கு முன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட இறைசட்டங்களை மாற்றக்கூடியதாகவும் உள்ளது. அதுமாத்திரமின்றி மறுமை வரையில்- இவ்வுலகம் அழிவுரும் வரையில் இம்மார்க்கம் நிலைத்திருக்கும் என்பதையும் அல்லாஹ் உத்தரவாதப்படுத்தியுள்ளான்.
இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரையும் விசுவாசிக்காத -ஈமான் கொள்ளாத - வரையில் ஒருவர் இறைவிசுவாசியாக –முஃமினான ஆகிவிட மாட்டார்.
அல்லாஹ்வே இறைத்தூதர்களை அனுப்பி அவர்களுக்கு கட்டுப்படுமாறு மனிதர்களுக்கு பணித்துள்ளான்.எனவே யார் அவர்களில் ஒருவரை நிராகரிக்கிறாரோ, அவர் அவர்கள் அனைவரையும் நிராகரித்ததற்கு சமமானவராக மாறிவிடுகிறார். அல்லாஹ்வின் இறைவெளிப்பாடான வஹியை நிராகரிப்பது மிகப்பெரும் பாவமாகும்; இப்பாவத்திற்கு ஈடாக எதுவும் கிடையாது. அத்துடன் ஒருவர் சுவர்க்கம் செல்ல அனைத்து நபிமார்களையும் விசுவாசிப்பது - ஈமான் கொள்வது மிக முக்கிய விடயமாகும்.
இன்றைய காலத்தில் வாழும் ஒவ்வொருவரும் அல்லாஹ்வையும், இறைத் தூதர்களையும் நம்பிக்கை கொள்வதும், இறுதி நாளை நம்புவதும் கடமையாகும். இது தூதர்களில்-இறுதியானவரும் நிரந்தர அற்புதம்- அல்குர்ஆன் வழங்கப்பட்ட ; முத்திரை நபி முஹம்மது நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களை நம்பி பின்பற்றுவதன் மூலமே சாத்தியமாகும். இப்புனித அல்குர்ஆனை இப்பூமி முழுமையாக அழிக்கப்படும் காலம் வரையில் அல்லாஹ் பாதுகாப்பதாக பொறுப்பேற்றுள்ளான்.
அல்லாஹ் தனது பொதுமறையான அல்குர்ஆனில் யார் அவனின் தூதர்களில் ஒருவரை நிராகரிக்கிறானோ அவன் அல்லாஹ்வை நிராகரித்து அவனின் வஹியை –வேதவெளிப்பாட்டை பொய்பித்தவர் எனக் குறிப்பிடுகிறான். இது குறித்து அல்லாஹ் பின்வருமறு பிரஸ்தாபிக்கிறான்.﴿إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَنْ يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا (١٥٠) (நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்து,அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் மத்தியில் பாரபட்சம் காட்ட விரும்பி, தூதர்களில் சிலரை நம்பிக்கை கொள்வோம் மற்றும் சிலரை நிராகரிப்போம் என்று கூறி (நிராகரிப்பு நம்பிக்கை ஆகிய )இவற்றுக்கு மத்தியில் ஒரு பாதையை எடுத்துக்கொள்ள நாடுகிறாரோأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا﴾ அவர்கள் தான் உண்மையில் நிராகரிப்பவர்கள். நாம் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்.அந்நிஸா : 150-151
இதனால் அல்லாஹ் கட்டளையிட்டதிற்கிணங்க முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் -அனைத்து தீர்க்கதரிசிகளையும்,அவர்களுக்கு இறக்கியருளப்பட்;ட முன்னைய வேதங்களையும் ஈமான் கொள்கிறோம். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.﴿آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ﴾ (இத்தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நமபிக்கைகொண்டுள்ளார். (அவ்வாறே) முஃமின்களும் (விசுவாசிக்கின்றனர். இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொண்டுள்ளனர். நாம் இறை தூதர்களில் எவருக்கிடையிலும் வேற்றுமை பாராட்ட மாட்டோம். (என்றும்) இன்னும் நாங்கள் செவியேற்றோம்; (உன் கட்டளைகளுக்கு) கட்டுப்பட்டோம் எங்கள் இரட்சகனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமே தான் என்றும் கூறுகிறார்கள்அல்பகரா: 285
அல்குர்ஆன் என்றால் என்ன?
புனித அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையும், அவனின் வேத வெளிப்பாடுமாகும். அதனை தனது இறுதித்தூதரான முஹம்மதிற்கு இறக்கியருளினான்.இது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தின்- நபித்துவத்தின் உண்மை நிலையை உறுதிப்படுத்தும் மிகப் பெரும் அற்புதமாகும். அல்குர்ஆன் உள்ளடக்கியுள்ள சட்டதிட்டங்கள் யாவும் யதார்த்தமானதாகவும், அது கூறும் வரலாற்றுச் சம்பவங்கள் மிகவும் நம்பகமானதாகவும்; காணப்படுகிறது.இம்மாபெரும் இறைமறையை பொய்ப்பித்தோரிடம் அல்லாஹ் அதிலுள்ள ஒரு அத்தியாயத்தைப் போன்ற ஒன்றை கொண்டுவருமாறு சவால்விடுத்தான்,என்றாலும் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை.காரணம் அல்குர்ஆன் மனிதனோடு தொடர்பான இம்மை மறுமை வாழ்வு குறித்த ஆழமான விடயங்களையும், கட்டாயம் ஈமான் கொள்ள வேண்டிய இறை விசுவாசம் தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.அதே போன்று மனிதன் தனக்கும் தனது தனது ஆன்மாவுக்கு மத்தியிலும், அல்லது தனது இரட்சகனுக்கும் தனக்கும் மத்தியிலும்,அல்லது தனக்கும் ஏனைய உயிரினங்கள் மத்தியிலும் கடைப்பிடித்து நடக்க வேண்டிய ஏவல்கள்-கட்டளைகள்- தவிர்ந்து நடக்க வேண்டிய விடயங்கள் அனைத்தையும் -மிகத்தரமான உயரிய மொழி நடையில்- உள்ளடக்கியுள்ளது.மேலும் இந்நூலானது-அல்குர்ஆன் -மனித ஆக்கம் அல்ல இறை ஆக்கம் என்பதை நிரூபிக்கக்கூடிய அறிவியல் மற்றும் பகுத்தறிவுரீதியான அதிகமான ஆதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்பது ஏகத்துவத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதும் வணக்கத்தின் மூலம் அடிபணிவதும்,அவனின் ஷரிஆவை –சட்டதிட்டங்களை முழுத் திருப்தியுடன் ஏற்று நடப்பதும் அவன் அல்லாத வணங்கப்படக்கூடிய அனைத்தையும் நிராகரிப்பதுமாகும்.
அல்லாஹ் தூதர்களை இணையே இல்லாத அவனை மாத்திரம் வணங்குவதின் பால் அழைப்பு விடுத்தல் அவனல்லாத வணங்கப்படும் அனைத்தையும் நிராகரிகரித்தல் என்ற ஒரே தூதுச்செய்தியுடன் அனுப்பி வைத்தான்.
இஸ்லாம், அனைத்து நபிமார்களினதும் மார்க்கமாகும். அவர்களின் அடிப்படை பிரச்சாரம் -அழைப்பு- அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும் என்ற ஒரே ஒலி நாதமாக இருந்தது, அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டதிட்டங்கள் வித்தியாசமானதாகவும் இருந்தன. இந்த வகையில் நபிமார்கள் அனைவரும் கொண்டுவந்த உண்மையான –சரியான மார்க்கத்தை பின்பற்றி ஒழுகும் ஒரே சமூகமாக இன்று முஸ்லிம்கள் மாத்திரமே உள்ளனர். இன்றைய காலத்தில் இஸ்லாம் ஒன்றே உண்மையான தூதாகும். ஏனெனில் அதுவே மனிதர்களின் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ்விடமிருந்து வந்த இறுதித்தூதுமாகும்.மூஸாவையும் ஈஸாவையும் அனுப்பிய இறைவன்தான் இறுதித்தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரக்ளையும் தூதராக அனுப்பினான். இஸ்லாமிய சட்டதிட்டங்கள் யாவும் அதற்கு முன்னுள்ள சட்டங்களை மாற்றியமைத்துவிட்டது.
மக்கள் இன்று ஏற்று வழிபடும் -இஸ்லாம் தவிர்ந்த- ஒவ்வொரு மதமும் ஒன்றில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதாக உள்ளது. அல்லது இறைவானால் இறக்கியருளப்பட்ட மார்க்கமாக இருந்து மனிதக்கரங்களின் திருவிடையால்களினால் மூடநம்பிக்ககைள் பரம்பரை கட்டுகதைகள் மனித சிந்தனைகள் ஆகியவற்றின் கலவையாக காணப்படுகிறது.
ஆனால் முஸ்லிம்களின் மார்க்கத்தைப் பொறுத்த வரை அது எவ்வித மாற்றத்திற்கு உட்படாத தொளிவான ஒரு மார்க்கமாக திகழ்கிறது. அவர்களின் வழிபாடுகள் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே ஒப்புவிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றி ,தங்களின் செல்வத்தின் ஒரு பகுதியை ஸகாத்தாக வழங்குவதோடு ரமழான் மாதத்தில் நோன்பும் நோற்கின்றனர். அவர்களின் சட்டயாப்புக்குறித்து சிந்தித்துப் பாரும்! அதுதான். எல்லா தேசங்களில் காணப்படுகின்ற ஒரே நூலான அல்குர்ஆன் ஆகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு அவனது உலகப்பொதுமறையில் பிரஸ்தாபிக்கிறான்.﴿ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗاۚ فَمَنِ ٱضۡطُرَّ فِي مَخۡمَصَةٍ غَيۡرَ مُتَجَانِفٖ لِّإِثۡمٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ﴾ இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன், ஆகவே, எவர் பாவத்தின்பால் சாயாதவராக, பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப் பட்டவைகளைப் புசித்து) விட்டால்- (அது குற்றமாகாது). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.(ஸூரா அல்மாஇதா : 3).
அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் :﴿قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (٨٤) (நபியே!) கூறுவீராக: ''அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஹ்கூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவற்றையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம்.''وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ﴾ மேலும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எடுத்து நடக்க விரும்புகிறாரோ அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப் படமாட்டாது, அவன் மறுமையில் நஷ்டவாளர்களுள் உள்ளவராவார்"(ஆல இம்ரான் :84-84).
எனவே இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். அது மனித இயல்பூக்கத்துடனும்,பகுத்தறிவுடனும் இயைந்து செல்கிறது.சீரான உள்ளங்கள் இதனை அங்கிகரித்து ஏற்றுக்கொள்கிறது. இதனை மாபெரும் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ் தனது சிரேஷ்ட படைப்புகளுக்காக வகுத்தரிளினான். இது மனிதர்கள் அனைவருக்கும் இம்மை மறுமையில் மகிழ்ச்சியையும், பாக்கியங்களையும் பெற்றுத்தரவல்ல உன்னத மார்க்கமாகும். இம்மார்க்கம் இனத்தால், நிறத்தால் எவரையும் வித்தியாசப்படுத்துவதில்லை.மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்பது இதன் அடிப்படையாகும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதர் மேற்கொள்ளும் நல்லறங்களின் அடிப்படையிலேதான் வித்தியாசப்படுத்தப்படுகிறார்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்;(مَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَلَنُحۡيِيَنَّهُۥ حَيَوٰةٗ طَيِّبَةٗۖ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ) ஆணோ அல்லது பெண்னோ நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறம் புரிந்தால் அவருக்கு நல்வாழ்வு அளிப்போம்.அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.(அன்நஹ்ல் : 97)
இஸ்லாம் சுபீட்சத்திற்கான வழியாகும்.
இஸ்லாம் அனைத்து தீர்க்கதரிசிகளின் மார்க்கம் அது மட்டுமல்லாது உலக மாந்தர் அனைவருக்குமான அல்லாஹ்வின் மார்க்கமாகும் இது அரபுகளுக்கு மாத்திரமான மார்க்கம் அல்ல.
இவ்வுலகில் யதார்த்தமான சுபீட்ஷத்திற்கும்,மறுமையில் நிரந்தர இன்பத்திற்குமான மார்க்கமாகும்.
ஆன்மா மற்றும உடலியல் தேவைகள் மனித இனத்தின் அனைத்து வகையான பிரச்சினைகள் அனைத்திற்கு தீர்வு கூறும் ஒரே மார்க்கம் . இஸ்லாம் ஆகும்.﴿قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلا يَضِلُّ وَلا يَشْقَى (123) ''நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான்.وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى﴾ எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.(தாஹா : 123-124)
இஸ்லாத்தினுள் நுழைவதினால் -இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதினால் நான் பெறும் நன்மைகள் என்ன?
இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொள்வதினதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள் சில பின்வருமாறு :
அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட அடிமையாக இருப்பதன் மூலம்; அவனுக்கு இவ்வுலகில் மரியாதையும்,(கௌரவம்) வெற்றியும்; கிடைக்கிறது. இல்லா விட்டால் அவன் மனோ இச்சைக்கும், ஷைத்தானுக்கும்,ஆசைகளுக்கும் கட்டுப்பட்ட அடியானாக மாறிவிடுகிறான்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதன் மூலம் அவனுக்கு மறுமையில் வெற்றி கிடைக்கிறது. அல்லாஹ்வின் அருளும் அவனை சூழ்ந்து கொள்கிறது. அந்த நபரை அல்லாஹ் சுவர்க்கத்தினுள் நுழைவிக்கிறான்.அவனுக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் நித்திய பேரின்பமும் கிடைப்பதுடன் நரக வேதனையிலிந்தும் தப்பித்து விடுகிறான்.(காப்பாற்றப்படுகிறார்)
ஒரு முஃமினைப் -இறைவிசுவாசியைப்- பொறுத்தவரை மறுமையில் அவன் நபிமார்களுடனும் , உயிர்தியாகிகளுடனும், சான்றோர்களுடனும் இருப்பான். இது எவ்வளவு அழகிய தோழமை. ஆனால் யார் அல்லாஹ்வை நம்பவில்லையோ அவன் கொடுங்கோலர்களுடனும், தீயவர்களுடனும், குற்றவாளிகளுடனும், குழப்பவாதிகளுடனும் இருப்பான்.
அல்லாஹ் யாரை சொர்க்கத்தில் அனுமதிக்கிறானோ; அவர்கள் மரணம், நோய், வலி, முதுமை, சோகம் எதுவுமின்றி நித்திய பேரின்பத்தில் வாழ்வார்கள், மேலும் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அவன் அவர்களுக்கு வழங்குவான், மேலும் நரகத்தில் நுழைபவர்கள் நிரந்தரமான, முடிவில்லா வேதனையில் இருப்பார்கள்.
சுவர்க்கத்தில் கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத, எந்த மனிதனின் சிந்தையிலும் தோன்றியிராத இன்பங்கள் காணக்கிடைக்கும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்;﴿مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ﴾ "ஆணோ பெண்னோ நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறம் புரிந்தால் அவருக்கு நல்வாழ்வு அளிப்போம் அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லறங்களுக்காக அவர்களது கூலியை அவர்களுக்கு வழங்குவோம்".(அன்நஹ்ல் : 97)மேலும் அல்லாஹ் கூறினான்:﴿فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ﴾ எனவே அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது. (அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்.ஸூறதுஸ் ஸஜ்தா வசனம் 17
இஸ்லாத்தை புறக்கனிப்பதினால்; -ஏற்காததினால்; -எனக்கு ஏற்படும் இழப்பு என்ன?
ஒருவர் இஸ்லாத்தை ஏற்காததினால் மிகப்பெரும் அறிவான அல்லாஹ் பற்றிய அறிவை இழந்திடுவான். அத்துடன் அல்லாஹ்வை விசுவாசிப்பதினால் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் இவ்வுலகத்தின் நிம்மதி மற்றும் பாதுகாப்பையும்;, மறுமையின் நித்திய பேரின்பத்தையும் இழந்துவிடுவார்.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாது இருப்பதினால், அல்லாஹ் மனித சமூகத்திற்கு இறக்கியருளியிருக்கும் அல்குர்ஆன் அறிந்து அம்மாபெரும் வேதத்தை விசுவசாம் கொள்ளும் பாக்கியத்தை இழந்து நிற்பார்.
மேலும் கண்ணியமிகு தீர்க்கதரிசிகளை நம்பும் -பாக்கியம் கிடைக்காது அதே போல் மறுமையில் அவர்களுடன் சுவர்க்க பூஞ்சோலையில் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தையும் இழந்து நிற்பதுடன் ,ஷைத்தான்களுடனும்,குற்றவாளிகளுடனும், கொடுங்கோளர்களுடனும் இருப்பார்.அவரின் தங்குமிடமும், சுற்றுப்புறமும் மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
இது குறித்து அல்லாஹ் அவனின் பொது மறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.﴿قُلْ إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ (15) எவர்கள் மறுமை நாளில் தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டனரோ அவர்களே நஷ்டவாளர்களாவர்.அறிந்து கொள்ளுங்கள்: இதுவே தெளிவான நஷ்டமாகும்.என நபியே நீர் கூறுவீராக (15)لَهُمْ مِنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ذَلِكَ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ يَا عِبَادِ فَاتَّقُونِ﴾ அவர்கள் மீது நெருப்புக்குடைகள் மேலிருந்தும், கீழிருந்தும் மூடியிருக்கும். இத்தகைய முடிவைக் குறித்துதான் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகின்றான். எனவே, என் அடியார்களே! என்னை அஞ்சுங்கள்.(அஸ்ஸுமர் : 15-16).
எனவே யார் மறுமையில் விமோசனம் பெற விருமபுகிறாரொ அவர் இஸ்லாத்தினுள் நுழைந்து நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பின்பற்றுவது அவிசியமாகும்.
அல்லாஹ்வை மாத்திரம் ரப்பாக எஜமானாக ஏற்று விசுவாசித்து, அவனை வணங்கி வழிபடுவதில் அவனுக்கு நிகராக எவரையும் , இணையாக்காது இருந்த முஸ்லிம்கள் தவிர்ந்த எவறுக்கும் மறுமையில் விமோசனம் கிடைக்காது என்பதில் எல்லா தீர்க்கதரிசிகளும், இறைத்தூதர்களும் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்ட உண்மைகளுள் ஒன்றாகும். ஆகவே இறைத்தூதர்களை ஏற்று விசுவாசித்து அவர்களை நம்பிப் பின்பற்றியோர் மாத்திரமே சுவர்க்கம் நுழைவதோடு நரகிலிருந்தும் காப்பாற்றப்படுவர்.
இந்த அடிப்படையில் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தோர் அவர்களை நம்பி அவர்களின் போதனைகளை பின்பற்றி நடந்திருந்தால் அவர்கள் முஸ்லிம்கள் மற்றும் சிறந்த இறைவிசுவாசிகளுமாவர். என்றாலும் நபி மூஸா அலை அவர்களின் மரணத்தின் பின் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஈஸா அலைஹிஸ்ஸாம் அவர்களை மூஸா நபியை பின்பற்றியோர் ஏற்று பின்பற்ற வேண்டும்.அவ்வாறு ஈஸா நபியை யார் விசுவாசித்தார்களோ -நம்பினார்களோ-அவர்களே சிறந்த முஸ்லிம்களாவர். அவர்களில் யார் ஈஸாவை நபியாக ஏற்றுக்கொள்ளாது தான் மூஸாவின் மார்க்த்தில்தான் தொடர்ந்தும் இருப்பேன் என்று கூறினால் அவர் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபியை ஈமான் கொள்ளாது மறுத்ததினால், அவர் ஓரு–முஃமினாக கருதப்படமாட்டார்.அதன் பின் அல்லாஹ் தூதர்களில் இறுதியானவராக முஹம்மதை அனுப்பி வைத்தான் எனவே உலக மாந்தர் அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டு அவரின் போதனைகளை பின்பற்றி ஓழுகுவது கடமையாகும். காரணம் இந்தப் பிரபஞ்சத்தின் உரிமையாளனான அல்லாஹ் மூஸாவையும்,ஈஸாவையும் தூதராக அனுப்பினான். அவனே தூதர்களின் இறுதியானவராக முஹம்மதையும் தூதராக அனுப்பி வைத்தான்.எனவே யார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை ஏற்றுக்கொள்ளாது, தான் நபிமார்களான மூஸா அல்லது ஈஸா போன்றோரது மார்க்கத்திலோதான் இருப்பேன் என்று கூறினால் அவர் ஒரு இறைவிசுவாசியாக –முஸ்லிமாக கருதப்படமாட்டார்.
அதேபோன்று ஒருவர் தான் முஸ்லிம்களை கௌரவப்படுத்துவதாக –மதிப்பதாக கூறுவது, அல்லது ஏழைகளுக்கு தர்மம் மற்றும் உதவிகளைப்புரிவது ஒரு போதும் மறுமையில் விமோசனம் கிடைக்க வழியாக அமையாது. இந்த நற்காரியங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள அவர் அல்லாஹ்வையும் அவனின் வேதங்களையும் தூதர்களையும் இறுதி நாளையும் நம்பி ஏற்றுக்கொண்டவராக இருப்பது அவசியமாகும். இணைவைத்தல்,அல்லாஹ்வை உண்மையான இறைவானக ஏற்றுக்கொள்ளாமை, அல்லாஹ் இறக்கியருளிய வேத வெளிப்பாடுகளை மறுத்தல், அவனின் இறுதித்தூதரான முஹம்மதை புறக்கணித்தல் போன்ற செயல்களை விடவும் மிகப்பெரும் குற்றச் செயல் ஒன்று கிடையாது!
ஆகவே, யூதர்கள்,கிறிஸ்தவர்கள் மற்றும் இவர்கள் அல்லாதோர் எவரும் அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதை செவிமடுத்து,அவர்களை தூதராக நம்புவதையும் , இஸ்லாத்தினுள் நுழைவதையும் புறக்கணித்தால் அவர்கள் நிரந்தர நரகத்தில் இருப்பார்கள். இந்த தீர்ப்பானது எந்த ஒரு மனிதனின் தீர்ப்பு அல்ல. மாறாக அல்லாஹ்வின் தீர்ப்பாகும். இது குறித்து அல்லாஹ் தனது உலகப் பொதுமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.﴿إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۚ أُولَـٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّة﴾ 'வேதத்தையுடையவர்களிலும், இணைவைப்பாளர்களிலும் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இவர்கள்தாம் படைப்பினங்களில் மிகக் கெட்டவர்கள்.'".(அல் பய்யினா:6)
ஆகவே இறைவனிடமிருந்து மனித குலத்திற்கான கடைசி இறைச் செய்தி இறக்கியருளப்பட்டுவிட்டதினால், இஸ்லாத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறைச் செய்தியைக் கேட்கும் ஒவ்வொரு மனிதனும் அதை நம்பி, அதன் சட்டதிட்டங்களை பின்பற்றி, அவர்களின் ஏவல் -கட்டளை- மற்றும் விலக்கலில் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். யார் இந்த கடைசி இறை செய்தியை பற்றி கேள்விப்பட்டு அதை நிராகரிக்கிறாரோ, அவரிடமிருந்து அல்லாஹ்; எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.மறுமையில் அவனுக்கு நிச்சயம் தண்டனை வழங்குவான்.
இதற்கு அல்லாஹ்வின் பின்வரும் சில கூற்றுகள் ஆதாரமாக அமைந்துள்ளன . அவைகளில் :﴿وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ﴾ "'யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகிறானோ அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப்படமாட்டாது. அவன் மறுமையில் நஷ்டவாளர்களில் உள்ளவனாவான்'".(ஆல இம்ரான் : 85).
மேலும் அல்லாஹ் கூறினான்.﴿قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ﴾ (நபியே! அவர்களிடம்) வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம். எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்! என்று நீங்கள் கூறிவிடுங்கள்.(ஆல இம்ரான் : 64).
நான் ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு என்னிடம் அவசியம் இருக்க வேண்டிய விடயங்கள் என்ன?
இஸ்லாத்தினுள் நுழைந்து ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு பின்வரும் ஆறு அடிப்படைகளை நம்புதல் வேண்டும்.
முதலில் அல்லாஹ்வை நம்பவேண்டும். இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாவும் திட்டமிடுபவனும் உரிமையாளனும் வாழ்வாதாரங்களை வழங்குபவனும் அவனே என்றும், அவனைப்போன்ற எதுவுமில்லை என்றும், அவனுக்கு மனைவியோ மக்களோ கிடையாது என்றும் அவன் ஒருவன் மாத்திரமே வணக்கத்திற்கும் வழிபாட்டிட்கும் தகுதியானவன் என்றும் உறுதியாக நம்புதல் வேண்டும், அவனை அல்லாத ஒருவனை அவனுக்கு நிகராக வைத்து வணங்குதல் கூடாது. அத்துடன் அவனைத் தவிர்த்து வணங்கப்படுபவகைள் அனைத்தும் அசத்தியமானவை என்று ஆழமாக நம்புதல் வேண்டும்.
இரண்டாவது : -மலக்குமார்களை –வானவர்கள் அல்லாஹ்வின் அடியார்கள் என்று நம்ப வேண்டும்.அவர்களை அல்லாஹ் ஒளியால் படைத்தான் அவர்களுக்கு சில பணிகளை ஒப்படைத்துள்ளான். அப்பணிகளுள் தனது தீர்கதரிசிகளுக்கு இறைவெளிப்பாட்டை –வஹியை- கொண்டு சேர்க்கும் பணியும் ஒன்றாகும்.
மூன்றாவது : தனது தீர்கதரிசிகளுக்கு அல்லாஹ் இறக்கியயருளிய (திரிவுபடுத்த முன்னுள்ள தவ்ராத், இன்ஜீல்) போன்ற அனைத்து வேதங்களுடன் இறுதி வேதமான அல்குர்ஆனையும் நம்ப வேண்டும்.
நான்காவது : அல்லாஹ்வின் தூதர்களான நூஹ், இப்ராஹீம் ,மூஸா, ஈஸாவுடன் இறுதித்தூதரான முஹம்மத் போன்ற அனைத்து நபிமார்களையும் நம்புதல் வேண்டும். அவர்கள் அனைவரும் மனிதர்கள் அவர்களை இறைவெளிப்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தி, அவர்கள் இறைவனின் தூதர்கள் என்ற உண்மையை காட்டக்கூடிய அத்தாட்சிகளையும், அற்புதங்களையும் அவர்களுக்கு வழங்கினான்.
ஐந்தாவது: மறுமை நாளை நம்புதல் வேண்டும். அந்நாளில்தான் அல்லாஹ்; ஆரம்பமாக இருந்தோரையும் பின்வந்தோரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி அவர்களை விசாரணை செய்து அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ்வை நம்பிய முஃமின்களை சுவர்க்கத்தினுள்ளும் அவனை ஏற்றுக்கொள்ளாத காபிர்களை நரகினுள்ளும் நுழைவிப்பான்
ஆறாவது : இறைவிதியை நம்ப வேண்டும்.அதாவது முக்காலம்பற்றியும் அல்லாஹ் அறிந்துள்ளான் என்பதையும் அவை அனைத்தையும் அறிந்து அதனை பதிவு செய்து வைத்திருப்பதுடன் அவற்றை அவனே நாடுகிறான்,அனைத்தையும் அவனே படைக்கிறான் என்பதையும் உறுதியாக நம்பவேண்டும்.
ஆகவே உனது முடிவை தாமதப்படுதிடாதே!
இவ்வுலகம் நிரந்தரமானதன்று....
இங்கு காணும் அழகுகள் அனைத்தும் மறைந்து விடும் ,காம ஆசைகள் அனைத்தும் அழிந்துவிடும்.
இவ்வுலகில் செய்து சமர்ப்பித்த விடயங்கள் பற்றி விசாரணை செய்யப்படவிருக்கும் நாளான மறுமை நாள் வந்துவிடும் அவ்வேளை ஒவ்வொரு மனிதனும் தனது நிலை பற்றி அறிந்து கொள்வான். அது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்;﴿وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لاَ يُغَادِرُ صَغِيرَةً وَلاَ كَبِيرَةً إِلاَّ أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلاَ يَظْلِمُ رَبُّكَ أَحَدًا﴾ மேலும், பதிவேடு (அவர்கள் முன்) வைக்கப்பட்டுவிடும்;. நீர் பார்ப்பீர்: அவ்வேளை குற்றம் புரிந்தோர், தமது வாழ்க்கைப் புத்தகத்தில் உள்ளவற்றைக் கண்டு அஞ்சிக்கொண்டிருப்பதை நீர் காண்பீர். அந்தோ...! எங்கள் துர்பாக்கியமே! இது என்ன பதிவேடு! எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டு வைக்கவில்லையே!என அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்: தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். மேலும், உம் அதிபதி எவருக்கும் சிறிதும் அநீதி இழைக்கமாட்டான்.(அல்கஹ்ஃப் :49).
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதனின் இறுதி நிலை நிரந்தர நரகமே என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
எனவே இங்கு இழப்பென்பது சாதாரனமானது அல்ல மாறாக மிகப்பெரியது.﴿وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ﴾ "யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எடுத்து நடக்க விரும்புகிறாரோ அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப்படமாட்டாது அவன் மறுமையில் நஷ்டவாளர்களுள் உள்ளவராவார்".(ஆலு இம்ரான் :85)
ஆகவே இஸ்லாம் தவிர்ந்த எந்த மார்க்கத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
அல்லாஹ்வே எம்மைப் படைத்தான் அவனிடமே மீண்டும் திரும்பி செல்ல இருக்கிறோம் இவ்வுலக வாழ்வு எமக்கான ஒரு பரீட்சைக் களம் மாத்திரமே!
எனவே ஒரு மனிதனைப்பொருத்தவரை அவன் இந்த உலகவாழ்வு கனவு போன்று குறுகியது என்பதில் உறுதியாக இருத்தல் வேண்டும் ....அவன் எப்போது மரணிப்பான் என்பது அவனுக்குத் தெரியாது!
ஒரு மனிதனிடம் இறைவன் சத்தியத்தை ஏன் பின்பற்றவில்லை? நபிமார்களின் இறுதியான முஹம்மதை பின்பற்றாததிற்கு காரணம் என்ன? என்று மறுமையில் கேட்டால் அவன் கூறப்போகும் பதில் என்ன?!
இஸ்லாத்தை ஏற்காது இருப்பதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்து, அவ்வாறு ஏற்காதோரின் நிலை அழிவும் நாசமும் நிரந்தர நரகமுமே என்று கூறிய உமது எஜமானான அல்லாஹ்வுக்கு மறுமையில் என்ன பதில் கூறப்போகிறாய்!
அல்லாஹ் கூறுகிறான்:﴿وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ﴾ 'எவர்கள் நிராகரித்து, எமது அத்தாட்சிகளையும் பொய்பிக்கிறார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள் அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்'அல்பகரா: 39
சத்தியத்தை புறந்தள்ளிவிட்டு தனது பெற்றோர்களையும், மூதாதையர்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றியோருக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது.
மனிதர்களில் அதிகமானோர் தான் வாழும் சூழலில் உள்ளோருக்கு பயப்படுவதினால் இஸ்லாத்தை ஏற்காது புறக்கணிப்பதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
தங்களது மார்க்கத்தை தம் மூதாதையர்களிடமிருந்து அநந்தரமாக பெற்றதினாலும் அல்லது அவர்கள் வாழும் சூழல் மற்றும் சமூகத்திடமிருந்து அதனைப் பெற்று அதிலேயே அவர்கள் பழக்கப்பட்டதின் காரணமாகவும் அதிமானோர் தங்களது நம்பிக்கையை மாற்றிக்கொள்வதை விரும்பாததினால் அவர்களில் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்க மறுக்கின்றார்கள்.அவர்களில் பெரும்பாலானோரிடம்; தங்கள் முன்னோரிடமிருந்து பெற்ற நம்பிக்கைகளில் பிடிவாதமும் அசத்தியத்தில் அவர்களுக்கு உள்ள முரட்டுத்தனமுமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக உள்ளது.
இவர்கள் அனைவருக்கும் எவ்வித மன்னிப்பும் கிடையாது அவர்கள் எவ்வித ஆதாரமுமின்றி அல்லாஹ்வின் முன்னிலையில் முடங்கிக்கிடப்பார்கள்.
ஒரு நாஸ்தீகனைப்பொருத்தவரை தான் ஒரு நாஸ்தீக குடும்பத்தில் பிறந்ததினால் நான் நாஸ்தீக கொள்கையில்தான் இருப்பேன் என்று கூறினால் அவனுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. மாறாக அவன் அல்லாஹ்வால் அவனுக்கு வழங்கப்பட்ட புத்தியைப்பயன்படுத்தி வானங்கள் மற்றும் பூமியின் பிரமாண்டம் பற்றி சிந்தித்தல் வேண்டும். அத்துடன் இந்த பிரபஞ்சத்தை படைத்த சிருஷ்டிகர்த்தா ஒருவன் உள்ளான் என்பதை புரிந்து கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட புத்தியால் -பகுத்தறிவினால் சிந்தித்தல் வேண்டும்.அதேபோல் கற்களையும் சிலைகளையும் வணங்குபவன்; தனது மூதாதையர்களது அடிச்சுவட்டைப் கண்மூடிப்பின்பற்றுவதினால் அவனுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது.மாறாக அவன் சத்தியத்தை தேட வேண்டும். எனது கோரிக்கைகளை, வார்த்தைகளை கேட்க முடியாத, என்னைப் பார்க்க முடியாத, எனக்கு எந்த நன்மையும் செய்யாத ஒரு உயிரற்ற பொருளை நான் எப்படி வணங்க முடியும்? என அவன் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
மனித இயல்பிற்கும், பகுத்தறிவிற்கும் முரணாக சில விடயங்களை நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவரைப் பொறுத்தவரை அவர், பிறரின் பாவங்களுக்காக பாவம் செய்யாத தன் மகனை கடவுள் -கர்த்தர்- எப்படிக் கொல்ல முடியும்? இது அநியாயம் அல்லவா! கடவுளின் மகனை மனிதர்கள் எப்படி சிலுவையில் அறைந்து கொல்ல முடியும்?! கடவுளால் மனிதகுலத்தின் பாவங்களை அவனின் மகனை கொலைசெய்யாது மன்னிக்க முடியாதா? கர்த்தர் தன் மகனைக் காக்க வல்லவர் அல்லவா? என்பது போன்ற வினாக்களை தன்னைத் தானே வினவிக்கொள்ள வேண்டும்!
ஆகவே அறிவார்ந்த ஒருவரைப்பொறுத்தவரை அவர் தனது பெற்றோர்,மூதாதையர்களின் அசத்திய வழியைப் பின்பற்றாமல், சத்தியத்தைப் பின்பற்ற முன் வர வேண்டும்
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்;﴿وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ﴾ 'அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தின்பாலும் (அவனுடைய) இத்தூதரின்பாலும் வாருங்கள்' என அவர்களுக்குக் கூறப்பட்டால், எங்களுடைய மூதாதையர்களை எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்குப் போதும்' எனக் கூறுகின்றனர், அவர்களுடைய மூதாதையர்கள் யாதொன்றையும் அறியாதவர்களாவும், நேரான வழியில் இல்லாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்கள் தங்கள் மூதாதையர்களைப் பின்பற்றுவார்கள்?)(மாஇதா : 104)
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார் ஆனால் அவர் தனது உறவுகள் தொந்தரவு செய்வதை பயப்படுபவராக இருந்தால் அவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?இஸ்லாம் மதத்திற்கு மாற விரும்பும் ஒருவர், தனது உறவினர்கள் தனக்கு தீங்கு விளைவிப்பர் என்று பயப்படுபவராக இருப்பின் அவர் என்ன செய்ய வேண்டும்?
இஸ்லாம் மார்க்கத்தை ஏற்க விரும்பி, தன்னைச் சூழ வாழ்வோருக்கு பயப்படுபவர் இஸ்லாத்தைத் தழுவி, தன் இஸ்லாத்தை வெளிக்கொணரக்கூடிய ஒரு சிறந்த வழியை இறைவன் அவருக்கு வழங்கும் வரை தான் இஸ்லாத்தை ஏற்றதை மறைத்து வாழ முடியும்.
ஆக ஒரு மனிதனைப்பொறுத்தவரை அவர் உடனடியாக இஸ்லாத்தை தழுவிக்கொள்வது கடமையாகும், ஆனால் அவர் இஸ்லாத்திற்கு மாறியதை –தழுவியதை- சுற்றியுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதால் தீங்கு ஏற்படும் என்றிருந்தால்; அதை விளம்பரப்படுத்தவோ,பிறரிடம் தெரிவிப்பதோ கடமை இல்லை.
ஒருவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுவிட்டால் இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு அவர் சகோதரராக மாறிவிடுகிறார்; என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் அவர் தனது நாட்டில் உள்ள பள்ளிவாயில் அல்லது இஸ்லாமிய மையத்துடன் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆலோசனைகளையும் உதவிகளையும் கேட்கலாம். அது அவர்களுக்கு மகிழ்ச்சியை பெற்றுத்தரும்.
அல்லாஹ் தனது உலகப் பொது மறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்;﴿وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا 'யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் அல்லாஹ் அவருக்(குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்)குரிய ஏதேனும் வழியை ஏற்படுத்துவான்.'وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِب﴾ 'அவர் நினைத்துப்பார்க்காத விதத்தில் வாழ்வாதாரங்களை வழங்குவான்.'(அத்தலாக் : 2-3).
அன்புள்ள வாசகரே!
நம் தாயின் வயிற்றில் கருவில் இருக்கும்போதே நமக்கு உணவு அளித்து, இப்போது நாம் சுவாசிக்கும் காற்றை அளித்து, தனது எல்லா அருட்கொடைகளையும் நமக்கு அளித்த படைப்பாளரான அல்லாஹ்வை திருப்திபடுத்துவது, மனிதர்களின் திருப்தியைப் பெறுவதை விட முக்கியமானதல்லவா?
அழிந்து போகும் இவ்வுலக இன்பங்கள்; அனைத்தையும் தியாகம் செய்வதில்தான் இவ்வுலகினதும் மறுமையின் வெற்றி தங்கியுள்ளதல்லாவா? என்றால் அதுவே உண்மையாகும்.
இதனால் தவறான பாதையை சரிசெய்து கொள்ளவும்,சரியான ஒரு செயலை செய்யவும் மனிதனுக்கு அவனது இறந்த கால வாழ்வு எப்போதும் தடையாக இருத்தல் கூடாது.
இன்று மனிதன் உண்மையான விசுவாசியாக மாறிவிடட்டும்! சத்தியத்தை பின்பற்றுவதை விட்டும் தன்னை தடுத்திட சைத்தானுக்கு அனுமதிக்க கூடாது.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்;﴿يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمْ بُرْهَانٌ مِنْ رَبِّكُمْ وَأَنزلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا (174) மனிதர்களே! உங்களுடைய அதிபதியிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்று வந்துள்ளது. தெள்ளத் தெளிவாய் வழிகாட்டும் ஒளியையும் நாம் உங்களுக்கு அனுப்பியிருக்கின்றோம்.(174)فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا﴾ ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அ(ந்த வேதத்)தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்களோ அவர்களை அவன் தன் அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகிறான். தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகிறான்'.அந்நிஸா : 174-175
உமது வாழ்வில் மிகவும் உன்னதமான ஒரு முடிவை எடுக்க நீ தயாராக உள்ளாயா?
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் ஏற்கத்தக்கதாக இருந்து, தனது உள்ளத்தால்; அவை உண்மை என்பதை அறிந்திருந்தால்; அவர் முஸ்லிமாக மாறுவதற்கான முதல் படியை எடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
தனது வாழ்க்கையில் சிறந்த முடிவை எடுப்பதற்கும், முஸ்லிமாக எப்படி மாறுவது என்பதற்கான வழிகாட்டலைப் பெறுவதற்கான உதவி தேவைப்படுபவர்; அவரின் பாவங்களினால் மனசஞ்சலம் கொள்ளக் கூடாது.
அதாவது இஸ்லாத்தினுள் நுழைய அவரின் பாவங்கள் தடையாக இருக்கக் கூடாது. அல்லாஹ், ஒருவர் இஸ்லாத்தை ஏற்று தனது படைப்பாளனிடம் மீண்டு விட்டால் அவனின் பாவங்களை மன்னித்துவிடுவாதாக அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான். இஸ்லாத்தை தழுவிய பின்னரும் மனிதன் என்ற வகையில் இயல்பாக சில பாவங்களை செய்து விடமுடியும், நாமெல்லாம் பாவங்களே செய்யாத மலக்குகள் அல்லர் என்பதனால் அப்பாவங்களைக்கூட அல்லாஹ் மன்னித்துவிடுகிறான்.எனவே, இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதும், வருந்துவதும் எம்மிடம் வேண்டப்பட்ட விடயமாகும். நாம் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள விரைந்து சென்று, இஸ்லாத்தில் நுழைந்து,ஷஹாதா வார்த்தைகளை மொழிவதை எம்மில் அல்லாஹ் கண்டால், ஏனைய பாவகாரியங்களை செய்வதை தவிர்ந்து நடந்து கொள்ள நமக்கு உதவி செய்வான். ஆகவே யார் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு சத்தியத்தைப் பின்பற்றுகிறாரோ அவருக்கு அதிகமான நன்மையான செயல்களை செய்வதற்கு வாய்ப்பை அளிப்பான்;. இதனால் தற்போது மனிதன் இஸ்லாத்தில் நுழைவற்கு தயங்கக் கூடாது.
இதற்கான ஆதாரங்களில் ஒன்றாக பின்வரும இறைவசனம் அமைந்துள்ளது﴿قُلْ لِلَّذِينَ كَفَرُوا إِنْ يَنْتَهُوا يُغْفَرْ لَهُمْ مَا قَدْ سَلَفَ﴾ நிராகரித்தோர் தமது விரோதப்போக்கை விட்டும் விலகிக்கொண்டால் முன்சென்றவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்பட்டுவிடும்.'(அல்அன்பால் 38)
நான் முஸ்லிமாவதற்கு என்ன செய்ய வேண்டும்?
இஸ்லாத்தில் நுழைவது எளிதான காரியம். சடங்குகளோ, சம்பிரதாயங்களோ உத்தியோகபூர்வ விவகாரங்களோ,எவரினதும் பிரசன்னமோ தேவைப்படாது. ஒருவர் இரண்டு சாட்சியங்களையும், அவற்றின் அர்த்தத்தை அறிந்து, அவற்றில் நம்பிக்கை வைத்து 'அஷ்ஹது அல் லாஇலாஹ இல்லல்லாஹ} வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ்' அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் எவரும் இல்லையென்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூற வேண்டும். நீங்கள் அதை அரபியில் சொல்ல முடிந்தால் சிறப்பானது. அவ்வாறு அரபியில் கூறுவது உங்களுக்கு கடினமாக இருந்தால், உங்கள் மொழியில் கூறினால்; போதுமாது. அதன் மூலம் நீங்கள் ஒரு முஸ்லிமாக மாறிவிடுவீர்கள், பின்னர் நீங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட உங்கள் மார்க்கம் இஸ்லாத்தை; கற்றுக்கொள்ள வேண்டும. இம்மார்க்கம், இந்த உலகில் உங்கள் மகிழ்ச்சிக்கும், மறுமையில் உங்கள் இரட்சிப்புக்கும் ஆதாரமாக இருக்கும்.
மாபெரும் சிருஷ்டிகர்த்தா எனும் இரட்சகன்
படைத்து பரிபாலித்து இரட்சிக்கும் இறைவனின் பண்புகள்;
வணங்கி வழிபடக்கூடிய இறைவன் நிறைவான பண்புகளைப் பெற்றுள்ளான்.
பல தூதர்கள் அனுப்பப்பட்டது ஏன்;?
இஸ்லாம் சுபீட்சத்திற்கான வழியாகும்.
இஸ்லாத்தினுள் நுழைவதினால் -இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதினால் நான் பெறும் நன்மைகள் என்ன?
இஸ்லாத்தை புறக்கனிப்பதினால்; -ஏற்காததினால்; -எனக்கு ஏற்படும் இழப்பு என்ன?
நான் ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு என்னிடம் அவசியம் இருக்க வேண்டிய விடயங்கள் என்ன?
ஆகவே உனது முடிவை தாமதப்படுதிடாதே!
உமது வாழ்வில் மிகவும் உன்னதமான ஒரு முடிவை எடுக்க நீ தயாராக உள்ளாயா?
நான் முஸ்லிமாவதற்கு என்ன செய்ய வேண்டும்?