மனித சமூகத்தில் ஒரு சாரார் நாம் சமாதானம் மேலோங்க பாடுபடுகிறோம், சீர் திருத்தம் ஏற்பட உழைக்கின்றோம் என வாதிட்டுக் கொண்டே அநியாயம், அக்கிரமம் மற்றும் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு குழப்பங்களை உருவாக்கு கின்றனர். இவர்கள் பற்றியே இறைவன் தனது அருள் மறையில் அறிவிக்கிறான்.:
சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள் - (தமிழ்)
ஷஃபான் மாத சிறப்பு - (தமிழ்)
உஸாமா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதை நான் கண்டதில்லை” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் “ரஜபுக்கும், ரமழானுக்கும் மத்தியிலிருக்கும் அந்த மாதத்தை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப் படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவைதை நான் வெகுவாக விரும்புகின்றேன்” என்று நபியவர்கள்....
இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சைப் பீடம், அந்த பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு வழங்கப் படும் பரிசு சுவனம். சித்தியடையாதோர் செல்லுமிடம் நரகம். அதில் உயர் சித்தி பெற்றவர்கள் “தக்வா” உடையோர் எனும் சான்றிதழை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களே இறுதியில் ஈடேற்றம் அடைந்து நரக வாழ்க்கையே அனுபவிக்காது சுவர்க்கம் செல்வோர்.
நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் - (தமிழ்)
நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை அடைந்து விட்டது. எனவே ராமலானின் ஒழுங்கு மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு சுருக்கமான கையேட்டை இங்கு முன்வைக்கிறேன்.
இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமா கும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.
லைலத்துல் கத்ர் ஒரு நோக்கு - (தமிழ்)
1.இந்த இரவு ரமழான் மாத்தில்தான் தோன்றுகின்றது. 2.லைலத்துல் கத்ர் என்றால் புனித இரவு என்று பொருள் படும். இவ்விரவின் சிறப்புக்கு அல் குர்ஆனும் ஹதீஸ் களும் சாட்சி பகர்கின்றன. 3. லைலதுல் கத்ர் என்ற புனித இரவுக்கென்று தனிப்பட்ட விஷேசமான துஆக்கள் எதுவும் இல்லை
ஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம் - (தமிழ்)
பெருநாள் தினத்தின் உணவுக்குத் தேவையான ஆகாரத்தை விட மேலதிக வசதி உள்ளவர்களின் மீது இது கடமையாகும். தன்னுடைய பராமரிப்பின் கீழுள்ள சகலரின் ஸகாதுல் பித்ராவையும் நிறைவேற்றுவது, அவர்களின் பராமரிப்பாளனின் மீது கடமையாகும். இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.
நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவு ரமழானின் இறுதிப் பத்தின் உள்ளன. நபியவர்கள் இக்கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். ஸகாதுல் பித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) பெருநாள் தொழுகை
முஸ்லிம்கள் பரீட்சிக்கப் படுகிறார்களா? நாம் வரம்பு மீறி வாழும் போது அல்லாஹ் எமக்கு தண்டனையாக சோதனைகளை அனுப்புவான். நாம் பொறுமையுடன் சோதனைகளை சகித்து கொண்டால் எமது பாவங்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், சுவர்க்கத்தில் எமது நிலையை உயர்த்தவும் இவை காரணங்களாக இருக்கவும் கூடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.
நேர்ச்சை - (தமிழ்)
மனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் நேர்ச்சை ஆகும். இது அடியானுக்கு எந்த ஒரு நன்மையையும் கொண்டு வராது, அதற்கு கலா கத்ரை மாற்றும் சக்தியும் இல்லை. நாம் நேர்ச்சை வைத்தோமோ இல்லையோ அல்லாஹ் தான் நாடியதை செய்வான். அல்லாஹ் அவனது படைப்புக்களில் எந்தத் தேவையும் அற்றவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் செய்த நேர்ச்சையை நிரைவேற்றாத போது....
தஜ்வீத் சட்டங்கள் - (தமிழ்)
அல் குர்ஆனை ஓதும் போது பிழையின்ற அழகிய முறையில் ஓதவேண்டும். தஜ்வீத் முறைப்படி ஓதும் சட்டங்கள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.
நோன்பும் தக்வாவும் - (தமிழ்)
நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் அடியான் அல்லாஹ்வின் மீது பயபக்தியுள்ள, அவனுக்கு விருப்பமுள்ள ஒரு நல்லடியானாக ஆக வேண்டும் என்பதே.

API
