ஸஹாபாக்கள் இறைத் தூதரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளவில்லை எனும் ஷீஆக்களின் பொய்யான வாதமும், அதற்கான பதிலும்
மொழிபெயர்க்கப்பட்ட விடயங்கள்
பிரிவுகள்
மூலாதாரங்கள்
Full Description
ஸஹாபாக்கள் இறைத் தூதரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளவில்லை எனும் ஷீஆக்களின் பொய்யான வாதமும், அதற்கான பதிலும்
دعوى الشيعة أن الصحابة لم يحضروا جنازة النبي صلى الله عليه وسلم
< தமிழ்> تاميلية
ஷெய்க் சாலிஹ் அல் முனஜ்ஜித்
اسم المؤلف: الشيخ محمد صالح المنجد
Translator's name:
அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்
Reviser's name:முஹம்மத் அமீன்
ترجمة:محمد مخدوم عبد الجبار
مراجعة:محمد أمين
موقع:
http://islamqa.info/ar/116375
بإشراف
الشيخ محمد صالح المنجد
ترجمة : محمد مخدوم بن عبد الجبار
ஸஹாபாக்கள் இறைத் தூதரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளவில்லை எனும் ஷீஆக்களின் பொய்யான வாதமும், அதற்கான பதிலும்
கேள்வி:
இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மரணித்த போது அன்னாரின் ஜனாஸாவின் இறுதி கிரிகையில் அவரது தோழர்கள் பங்கு கொள்ளவில்லை என ஷீஆக்கள் கூறுகின்றனர். இது சரியானது தானா? அப்படி என்றால் அவர்கள் எங்கே இருந்தார்கள்? இந்த வாதத்தை உறுதிப்படுத்தும் நபி மொழிகள் ஏதேனும் உண்டா?
பதில்:
இறைவனுக்கே எல்லாப் புகழும் சொந்தம்...
ஒரு மனிதனிடையே காணப்படும் மிகவும் மோசமான குணம் தான் பொய் சொல்லுதல். எனவே தான் இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
عن أبي وائل عن عبد الله قال : قال رسول الله صلى الله عليه وسلم : إِيَّاكُمْ وَالْكَذِبَ ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا رواه البخاري (6134) ومسلم (2607).
பொய் சொல்லுதல் (மூலம் ஏற்படும் ஆபத்துகள்) பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன். ஏனெனில் பொய் பாவங்களின் பால் உங்களை இட்டுச் செல்லும், பாவங்கள் நரகத்தின்பால் உங்களை தள்ளி விடும். ஒருவன் பொய் பேசிக் கொண்டும் அதற்காக முயற்சி செய்து கொண்டும் இருந்தால் இறுதியில் அல்லாஹ்விடம் பொய்யன் என்பதாக பதிவு செய்யப் பட்டு விடுவான் என்று நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
தங்களை முஸ்லிம்கள் என கூறிக் கொள்ளும் ஷீஆக்களை போன்று பொய் கூறும் வேறு எந்த பிரிவினரை வரலாற்றில் காண முடியாது. பொய் கூறுதல் என்பது ஆரம்ப காலம் முதல் அவர்களிடையே காணப்படும் பண்பாகவே இருக்கின்றது. இது தொடர்ப்பில் இஸ்லாமிய அறிஞர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தங்களது நூல்களில் பதிந்து வைத்துள்ளனர். இற்றை வரையும் இந்த மோசமான குணத்தை அவர்கள் இயல்பாக கொண்டுள்ளனர்.
வரலாற்றில் தோன்றிய பிரிவுகளில் மிகவும் பொய் உரைப்பவர்கள் ராஃபிழாக்களே (ஷீஆ) என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏகோபித்து கூறியுள்ளனர். பொய் கூறுதல் ஷீஆக்களிடையே காணப்படும் விஷேட பண்பாக விளங்குகிறது.
فقد سئل الإمام مالك عن الرافضة فقال : لا تكلمهم ، ولا ترو عنهم ، فإنهم يكذبون .
ராஃபிழாக்கள் பற்றி இமாம் மாலிக் (ரஹீம ஹு ல்லாஹ்) அவரிடம் வினவப் பட்டது. அதற்கு அவர் அவர்களுடன் நீர் பேச வேண்டாம். அவர்களிடம் இருந்து எந்த செய்தியையும் அறிவிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் பொய் உரைப்பவர்கள் என பதில் அளித்தார்.
وقال الإمام الشافعي : لم أر أحدا أشهد بالزور من الرافضة .
ராஃபிழாக்களை விட மிக மோசமாக பொய் சாட்சியம் கூறுபவர்கள் எவரையும் நான் கண்டதில்லை என இமாம் ஷாபிஈ (ரஹீம ஹு ல்லாஹ்) கூரியுள்ளார்.
وقال يزيد بن هارون : يُكتب عن كل صاحب بدعة إذا لم يكن داعية إلا الرافضة ، فإنهم يكذبون .
ராஃபிழாக் கோட்பாடுக்கு அழைப்பு விடுக்காத வரையில் இஸ்லாத்தில் நூதனங்களை (பித் அத்களை) உருவாக்கும் ஏனையோரிடம் இருந்து செய்திகளை எழுதலாம். ஏனெனெனில் ராஃபிழாக்கள் பொய் உரைப்பவர்கள் என யஸீத் பின் ஹாரூன் கூறினார்.
وقال شريك القاضي : احمل العلم عن كل من لقيت إلا الرافضة ، فإنهم يضعون الحديث ، ويتخذونه دينا .
நான் ராஃபிழாக்களைத் தவிர மற்றவர்கள் யாராக இருந்தாலும் அனைவரிடம் இருந்தும் கல்வியை கற்றுக் கொள்வேன். ஏனெனில் ராஃபிழாக்கள் ஹதீஸ்களை இட்டு கட்டு வது மாத்திரமின்றி, அதனை அவர்களின் மார்க்கமாக கொண்டு செயல்படுகின்றனர் என ஷுரைக் அல் காளி குறிப்பிடுகின்றார்.
“ஷுரைக் அல் காளி" என்பவர் கூஃபா நகர நீதிபதியாக இருந்த ஷுரைக் பின் அப்துல்லாஹ் அல் காளி ஆவார். இமாம் அபூ ஹனிஃபா மற்றும் சுஃப்யான் அல் சவ்ரி ஆகியோருடன் சம காலத்தில் வாழ்ந்தவர். தான் ஷீஆ பிரிவை சேர்ந்தவர் என்று அவரே தனது நாவினால் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஷீஆ கொள்கையுடைய இவரே ராஃபிழாக்கள் தொடர்ப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது ஆகும்.
மேற்குறிப்பிடப்பட்ட செய்திகள் உறுதியானவைகளாகும். அப்துல்லாஹ் இப்னு பத்தாஹ் என்ற அறிஞர் ( الإبانة الكبرى ) அல் இபானா அல் குப்ரா என்ற தனது நூலில் இவற்றை குறிப்பிட்டள்ள அதே வேளை வேறு அறிஞர்களும் இந்த செய்திகளை எழுதி வைத்துள்ளனர்.
"منهاج السنة النبوية" மின்ஹாஜ் அஸ் சுன்னாஹ் அன் நபவிய்யாஹ் (1/26-27)
இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் ஹிஜ்ரி 11 வது வருடம் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 திங்கட் கிழமை பிற்பகல் வபாத் ஆனார்கள். புதன் கிழமை இரவு அன்னாரின் உடல் அடக்கம் செய்யப் பட்டது. மதீனா வாசிகள் அனைவரும் அன்னாரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர். இதனை பின்வரும் செய்தி உறுதிப் படுத்து கிறது.
قال أبو بكر الصديق رضي الله عنه : ( يدخل قوم فيكبرون ويصلون ويدعون ثم يخرجون ، ثم يدخل قوم فيكبرون ويصلون ويدعون ثم يخرجون ، حتى يدخل الناس ) رواه الترمذي في "الشمائل" (ص/338) وصححه الألباني في تحقيقه.
இறைத் தூதரின் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) ஜனாஸா மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்ட போது, மாதீனா வாசிகளின்) ஒரு கூட்டம் நுழைந்து தக்பீா் சொல்லி தொழுது, பிரார்த்தனை செய்து விட்டு வெளியேறுவார்கள். அதற்கு பிறகு இன்னுமொரு கூட்டம் நுழைந்து தக்பீா் சொல்லி தொழுது, பிரார்த்தனை செய்து விட்டு வெளியேறுவார்கள். மக்கள் அனைவரும் வரும் வரை இவ்வாறே நடந்தது என அபூ பக்ர் (ரழி யல்லாஹு அன் ஹூ) அவர்கள் குறிப்பிடு கிறார்கள். (ஆதாரம்: ஷமா இல் அத் திர்மிதி)
இறைத் தூதரின் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) மரணத்தின் போது மதீனாவில் இருந்த எந்த நபித் தோழரும் அவரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளாமல் பின்வாங்கி இருக்க முடியாது என்பதை மேல் குறிப்பிடப் பட்ட செய்தியில் இருந்து தெளிவாகவே விளங்கி கொள்ள முடியும். இது மிகவும் தெளிவான விடயமாகும். இதற்காக ஆதாரங்களை தேட வேண்டிய அவசியம் இல்லை.
சஹாபாக்கள் தமது மனைவி மார்கள், தாய் தந்தையர், குழந்தைகள் அனைவரை விடவும் இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மீது நேசம் வைத்திருந்தார்கள். ஏன் தமது ஆன்மாக்களை விடவும் அன்னாரின் மீது பாசம் வைத்திருந்தார்கள்.
قال أنس رضي الله عنه : (لَمْ يَكُنْ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) رواه الترمذي (2754) وصححه الألباني في صحيح الترمذي .
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களை விடவும் நேசத்திற்குரிய ஒருவர் அவர்களுக்கு (நபித் தோழர்களுக்கு) இருந்ததில்லை என அனஸ் (ரழி யல்லாஹு அன் ஹூ) அவர்கள் குறிப்பிடு கிறார்கள். (ஆதாரம்: திர்மிதி)
எனினும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கடுமையான வெறுப்பும், பகைமையும், குரோதமும் கொண்ட ஒரு கூட்டத்தினர் சஹாபாக்கள் மீது பொய்களை இட்டு கட்டுகின்றனர். உண்மைக்கு புறம்பாக பொய்களை கூறி அவர்களை விமர்சிக்கின்றனர். இறைவன் அனுப்பி வைத்துள்ள நபிமார்கள் மற்றும் ரசூல் மார்களுக்கு அடுத்து சஹாபாக்களே சிறந்தவர்கள் என இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.
خَيْرُ النَّاسِ قَرْنِي ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ رواه البخاري (2652) ومسلم (2532(
நான் வாழும் இந்த நூற்றாண்டில் வாழும் மனிதர்களே மிகவும் சிறந்தவர்கள். இதனை அடுத்து அவர்களை அடுத்து வரும் நூற்றாண்டில் வாழும் மனிதர்கள். அதற்கு அடுத்து அவர்களை அடுத்து வரும் நூற்றாண்டில் வாழும் மனிதர்கள் என இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
சஹாபாக்களை குறை கூறி விமர்சிப்பது, அவர்களை குறையாக மதிப்பிடுவதோ, அவர்களை ஏசுவதோ இறை தூதரை (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) குறை கூறுவது, ஏசுவது, குறைவாக மதிப்பிடுவது போன்றாகும். அவர்கள் இறைத் தூதரின் மாணவர்கள், அவர்களின் தோழர்கள் மற்றும் உதவியாளர்கள். அன்னாரின் நேசத்திற்கு உரியவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பகல் பொழுது உதயமாகுவதற்கு ஆதாரம் தேடினால் உள்ளம் வேறெதனையும் நம்பாது என ஒரு கவிஞர் கூறுவது போன்று குறித்த விடயம் தெளிவானது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
சஹாபாக்கள் அனைவரும் இறை தூதரின் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) ஜனாஸாவில் பங்கு பற்றினார்கள் என்பதற்கு பின்வரும் செய்திகளும் ஆதாரமாக விளங்குகின்றன.
عن أنس بن مالك رضي الله عنه أنه قال : ( لَمَّا كَانَ اليَوْمُ الَّذِي دَخَلَ فِيهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ أَضَاءَ مِنْهَا كُلُّ شَيْءٍ ، فَلَمَّا كَانَ اليَوْمُ الَّذِي مَاتَ فِيهِ أَظْلَمَ مِنْهَا كُلُّ شَيْءٍ ، وَمَا نَفَضْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَيْدِي وَإِنَّا لَفِي دَفْنِهِ حَتَّى أَنْكَرْنَا قُلُوبَنَا ) . رواه الترمذي (3618) . وصححه ابن كثير في "البداية والنهاية" (5/239(
இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மதீனா நகரில் நுழைந்த போது அதன் அனைத்து கோணங்களும் ஒளி வீசின. அவர்கள் மரணித்த போது மதீனா நகரின் அனைத்து பாகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டன. நாம் இறைத் தூதரின் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) ஜானாசாவை நல்லடக்கம் செய்து விட்டு வந்து கைகளை உதறும் போது எமது இதயங்கள் அதனை ஏற்க மறுத்தது என அனஸ் (ரழி யல்லாஹு அன் ஹூ) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் திர்மிதி)
وقالت فاطمة رضي الله عنها لما رجع الناس من دفن أبيها صلى الله عليه وسلم : ( يَا أَنَسُ ! أَطَابَتْ أَنْفُسُكُمْ أَنْ تَحْثُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم التُّرَابَ ) . رواه البخاري (4462 (
மக்கள் அனைவரும் இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்து விட்டு வந்த போது பாத்திமா (ரழி யல்லாஹு அன் ஹா) அவர்கள் இறைத் தூதரின் மேல் மண்ணை அள்ளிப் போடுவதற்கு உங்கள் மனம் விரும்பியதா? என அனஸ் (ரழி யல்லாஹு அன் ஹூ) அவர்களிடம் வினவினார்கள். (ஆதாரம்: புகாரி)
நிலைமை இவ்வாறு இருக்கும் போது, ஷீஆக்கள் இந்த பொய்யையும், புரட்டையும் எங்கிருந்து கொண்டுவந்தார்கள்?
பொய்யையும், புரட்டையும் வழக்கமாக கொண்ட இவர்கள் மார்கத்தில் மிகவும் தெளிவான விடயங்களை மறுப்பது ஆச்சரிய மானது அல்ல. அல் குர்ஆன் முழுமையாக பாதுகாக்கப் பட்டதை இவர்கள் மறுக்கின்றனர். அது திரிவு படுத்தப் பட்டுள்ளதாகவும், அதில் நிறைய குறைக்கப் பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இறைத் தூதரின் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) மானத்திலும் கை வைத்தவர்கள் தான் இவர்கள். மிகவும் மோசமான முறையில் நபித் தோழர்களை ஏசி பேசுகின்றனர். ஆனால் இறைவனோ நபித் தோழர்களின் சிறப்புகள், நல்லொழுக்கங்களை எல்லாம் அவனது அருள் மறையிலும், நபி மொழிகளிலும் நிரந்தரமாக பதிந்து வைத்து விட்டான். அதனை முஸ்லிம் சமூகம் எவ்வித முரண் பாடுகளும் இன்றி ஏற்றுக் கொண்டு விட்டனர். இவற்றை மறுக்கின்றவர்கள் மேற் குறிப்பிடப் பட்டது போன்று பொய்யையும், கபடத்தையும் கொண்டுவருவது ஆச்சரியமானது அல்ல. ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்து அறிகிறான். அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டு மென்பதையும் திட்டமாக (ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
இறைவன் அவனது தீனை வெற்றி பெறச் செய்வானாக, அவனது கலிமாவை மேலோங்க செய்வானாக, Bபாத்திளையும் அதனை சார்ந்தவர்களையும் தாழ்வடையச் செய்வானாக...
இறைவன் எங்கள் நபி முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரது தோழர்கள் அனைவர் மீதும் சலவாத்து சொல்லி அருள் வானாக...
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
http://islamqa.info/ar/116375