அல் குர்ஆன் பாதுகாக்கப் பட வில்லை எனும் வாதமும், அதற்கான பதிலும்
மொழிபெயர்க்கப்பட்ட விடயங்கள்
பிரிவுகள்
Full Description
அல் குர்ஆன் பாதுகாக்கப் பட்டதா?
دعوى تحريف القرآن
< தமிழ் - تاميلية >
ஷெய்க் முனஜ்ஜித்
الشيخ محمد صالح المنجد
முஹம்மத் மக்தூம்
முஹம்மத் அமீன்
ترجمة:محمد مخدوم عبد الجبار
مراجعة:محمد أمين
கேள்வி:
பின்வரும் எனது கேள்விக்கு தெளிவான பதிலை தருமாறு தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் அது முக்கியமான கேள்வியாகும்.
நான் இஸ்லாத்தின் விரோத போக்குடைய இணைய தளம் ஒன்றில் வாசித்து கொண்டிருந்த போது, அல் குர்ஆனில் குறைந்தது பத்து சொற்களை ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அஸ் சகஃபி மாற்றி விட்டதாக இமாம் அபூ பக்ர் பின் அபூ தாவூத் அஸ் சஜஸ்தானி தங்களது “அல் மசாஹிப்" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக கிறிஸ்தவர் ஒருவர் எழுதி இருந்ததை கண்ணுற்றேன்.
இது தொடர்ப்பில் (ما غيَّره الحجاج في مصحف عثمان) “மா கய்யறஹு ஹஜ்ஜாஜ் பீ முஸ்ஹப் உஸ்மான்" (உஸ்மானின் குர்ஆன் பிரதியில் ஹஜ்ஜாஜ் மாற்றியவை) எனும் நூலையும் இமாம் அபூ பக்ர் பின் அபூ தாவூத் அஸ் சஜஸ்தானி எழுதியுள்ளதாக அவர் கூறுகிறார்.
மேற்படி மாற்றப் பட்டுள்ள பத்து சொற்களையும் தான் தொகுத்துள்ளதாகவும் அந்த கிறிஸ்தவர் கூறுகிறார்.
இவ்வாறு அவர் தொகுத்தவற்றை பெற்றுக் கொள்ள முயற்சித்தும் பலன் கிட்டவில்லை.
அல் குர்ஆனை பாதுகாத்த அறிஞர்கள் யாரும், எந்த ஒருவருக்கும் அல் குர்ஆனில் மாற்றங்கள் செய்ய அனுமதித்து இருப்பார்கள் என நான் கற்பனையிலும் கருத வில்லை. இமாம் அபூ பக்ர் அஸ் சஜஸ்தானி இவ்வாறு எழுதி இருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை.
யஹுதிகள் மற்றும் நசாராக்கள் அவர்களின் வேத நூல்களை பாதுகாக்க தவறியது போன்று நாம் அல் குர்ஆனை பாதுகாக்காமல் விட்டு விட வில்லை. எமது அறிஞர்கள் பலர் அல் குர் ஆனை முழுமையாக மனனம் செய்திருக்கின்றார்கள். அப்படி இருக்கையில் அல் குர்ஆன் மற்றப் பட்டு விட்டது எனும் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
முஸ்லிம்களில் எத்தனை பேர் அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்கின்றார்கள்? அவர்கள் அதனை நாளாந்தம் ஓதி வருகின்றார்கள். இவர்களில் எவரும் இந்த மாற்றங்களை கண்டதில்லையா?
பதில் :
அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் சொந்தம்...
முதலாவதாக :
அல் குர் ஆன் முழுவதும் பாதுகாக்கப் பட்டு விட்டது என்ற விவகாரத்தில் ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரையில் எந்த
சந்தேகங்களும் தோன்றக் கூடாது. ஏனெனில் அல் குர் ஆனை முழுமையாக பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்று கொண்டு விட்டான் என்பதை பின் வரும் இறை வசனம் தெளிவு படுத்து கிறது.
فقال تعالى : { إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ } سورة الحجر / 9
இதற்கமைய அல் குர்ஆன் அது அருளப்பட்ட காலம் தொடக்கம், முதலாம் கலீபா அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களின் காலம் வரை நபித் தோழர்களின் உள்ளங்களில் மனனமிடப் பட்டும், ஈத்தம் மர ஓலைகள், பட்டைகள், கற்கள், மிருக எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எழுதப் பட்டும் பாதுகாக்கப் பட்டது.
நபிகள் நாயகம் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மரணித்த பிறகு அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு 'யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.
முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்கு மிடையே நடந்த
இப் போரில் அல் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப் பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்கு படுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கிய போதும் பிறகு அதனை ஏற்றுக் கொண்டார்கள்.
அதனை அடுத்து, அல் குர்ஆன் அழிந்து போகாமல் பாதுகாக்க ஒரே புத்தகத்தில் முழு குர்ஆனையும் சேகரிப்பதன் அவசியம் குறித்து அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் மூத்த தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள்.
அப்போது அல் குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலை சிறந்தவராகவும், இளைஞரா கவும் இருந்த ஸைத் பின் ஸாபித் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களின் தலைமையில் வஹியை எழுதிய மூத்த சஹாபாக்களிடம் இந்தப் பொறுப்பை அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் ஒப்படைத்தார்கள்.
இந்த சம்பவம் தொடர்ப்பில் ஸைத் பின் ஸாபித் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رضي الله تعالى عنه قال : أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ ، فَإِذَا عُمَرُ جَالِسٌ عِنْدَهُ ، فَقَالَ : إِنَّ عُمَرَ جَاءَنِي ، فَقَالَ : إِنَّ الْقَتْلَ قَدِ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِقِرَاءَةِ الْقُرْآنِ ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ فِي الْمَوَاطِنِ كُلِّهَا فَيَذْهَبَ مِنَ الْقُرْآنِ كَثِيرٌ ، وَإِنِّي أَرَى أَنْ تَأْمُرَ بِجَمْعِ الْقُرْآنِ ، قَالَ : قُلْتُ لِعَمُرَ : وَكَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ عُمَرُ : هُوَ وَاللَّهِ خَيْرٌ ، فَلَمْ يَزَلْ يُرَاجِعُنِي فِي ذَلِكَ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ لَهُ صَدْرَ عُمَرَ ، وَرَأَيْتُ فِي ذَلِكَ الَّذِي رَأَى ، فَقَالَ أَبُو بَكْرٍ لِي : أَنْتَ شَابٌّ عَاقِلٌ لا نَتَّهِمُكَ قَدْ كُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَتَتَبَّعِ الْقُرْآنَ ، فَاجْمَعْهُ قَالَ زَيْدٌ : فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ الْقُرْآنِ ، قَالَ قُلْتُ : فَكَيْفَ تَفْعَلُونَ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : هُوَ وَاللَّهِ خَيْرٌ ، فَلَمْ يَزَلْ بِي أَبُو بَكْرٍ يُرَاجِعُنِي حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ ، قَالَ : فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنَ الرِّقَاعِ وَالْعُسُبِ وَاللِّخَافِ ، وَصُدُورِ الرِّجَالِ حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ مَعَ خُزَيْمَةَ أَوْ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ
غَيْرِهِ لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ سورة التوبة آية 128 خَاتِمَةُ بَرَاءَةٍ قَالَ : فَكَانَتِ الصُّحُفُ عِنْدَ أَبِي بَكْرٍ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ عِنْدَ عُمَرَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ عِنْدَ حَفْصَةَ بِنْتِ عُمَرَ . أخرجه البخاري في " صحيحه " ( 4986)
(யமாமா போர் நடை பெற்ற பின் அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் எனக்கு ஒருவரை அனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்) னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள் : உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான அல் குர்ஆனை மனனமிட்ட அறிஞர்கள் கொல்லப் பட்டு விட்டார்கள். இதே போன்றே வேறு பல இடங்களிலும் அல் குர்ஆனை மனனமிட்ட அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப் பட்டு, அதனால் அல் குர்ஆனின் பெரும் பகுதி அழிந்து போய் விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே) தாங்கள் அல் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தர விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். நான், 'இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல் லம்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் (ரழி யல்லா
ஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நன்மையான காரியம் தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனதை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். (முடிவில்) உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கருதியதை (யே) நானும் (பொறுத்த மானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் தெரிவித்த போது உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) ஏதும் பேசாமல் அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.) (பிறகு) அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் சந்தேகப் பட மாட்டோம். நீங்கள் இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக் காக வஹீ எழுதக் கூடிய வராக இருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டு பிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டும் என எனக்கு அவர்கள் கட்டளை இட்டு இந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. அல் குர்ஆனை ஒன்று
திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளை யிட்டது அதை விட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நன்மையான காரியம் தான்' என்று பதில் அளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்தும் வலியு றுத்திக் கொண்டே இருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் (ரழி யல்லா ஹு அன்ஹுமா) ஆகியோரின் மனதை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனதையும் அல்லாஹ் விரிவாக்கினான். எனவே, அல் குர்ஆனைத் தேட ஆரம்பித்தேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் மனிதர்களின் நெஞ்சங்களில் இருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட் டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களிடம் இருந்து பெற்றேன்; அவர் அல்லாத வேறு எவரிடம் இருந்தும் இதனை நான் பெற வில்லை. (அவை) 'உங்களிலில் இருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்கு சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும்,
நம்பிக்கை யாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும், 'அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாக இருக்கிறான்.' (திருக் குர்ஆன் 9 : 128, 129).
இவ்வாறு (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப் பட்ட அல் குர்ஆன் பிரதிகள் அபூ பக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந் (து வந்) தது. பின்னர் உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களிடம் அவர்களின் வாழ் நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா (ரழி யல்லா ஹு அன்ஹா) அவர்களிடம் இருந்தது. அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி (ரழி யல்லா ஹு அன்ஹு) . (நூல்: புகாரி: 4986) .
இரண்டாவது :
அக் காலத்தில் ஈராக்கின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் அல் குர்ஆன் எழுத்துக்களுக்கு புள்ளிகள் மற்றும் ஹரகத்து
குறியீடுகள் இடும் நடவடிக்கையை நேரடியாக மேற்கொள்ள வில்லை. மாற்றமாக உயர் திறன் கொண்ட சில அறிஞர்கள் ஊடாகவே இந்த பணியை மேற்கொண்டார். இதோ அதன் முழு சரித்திரமும் ,
இமாம் ஸர்கானி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் :
மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களால் ஒழுங்கு படுத்தப் பட்ட பின்னர் பல பிரதிகள் எடுக்கப் பட்டு பல்வேறு பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டு மக்கள் மயப்படுத்தப் பட்ட அல் குர்ஆனின் ஆரம்ப கால அரபு எழுத்துக்கள் புள்ளிகள் மற்றும் ஹரகத்து குறியீடுகள் இன்றியே ஆரம்பத்தில் காணப் பட்டது .
அப்துல் மாலிக் பின் மர்வானின் ஆட்சி காலத்திலேயே மேற்படி அல் குர்ஆன் எழுத்துக்களுக்கு புள்ளிகள் மற்றும் ஹரகத்து குறியீடுகள் இடும் பணி மேற் கொள்ளப் பட்டது .
அதாவது, இஸ்லாம் முழு உலகுக்கும் பரவியதை அடுத்து இஸ்லாமிய ஆட்சியின் பிரதேசங்கள் விரிவடைந்தன. அரபியர்கள் அரபி அல்லாதோருடன் கலந்து வாழ ஆரம்பித்தனர். இதனால் வேறு மொழிகள் அரபு மொழியில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் அல் குர் ஆனை ஓதும் போது சரியான உச்சரிப்பை அறிந்து கொள்ள மக்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கினர். புள்ளிகள் மற்றும் ஹரகத்து குறியீடுகள் அற்ற அரபு மொழி வார்த்தைகளை
பிரித்தறிந்து கொள்வது அரபி அல்லாதோருக்கு கடும் சவாலாக அமைந்தது. இந் நிலையில் இருந்து மக்களை மீட்கும் நோக்கில் அப்துல் மலிக் பின் மர்வான் இந்த உயரிய பணியை மேற் கொள்ளும் படி கவர்னர் ஹஜ்ஜாஜூக்கு பணிப்புரை விடுத்தார். இதனை அடுத்து ஹஜாஜ் கலீபாவின் வேண்டு கோளுக்கு இணங்க “நஸ்ர் பின் ஆசிம் அல் லைசி" மற்றும் “ யஹ்யா பின் யஃமூர் அல் உத்வானி " ஆகிய இரு அறிஞர்கள் ஊடாக இந்த உயரிய பணியை மேற்கொண்டார் .
அவர்கள் இருவரும் மொழி ஆற்றல், அறிவு, திறமை, பய பக்தி மற்றும் அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கினர் . அவர்கள் இருவரும் அரபு மொழி வல்லுனரான “ அபுல் அஸ்வத் அத் துஅலி " யின் மாணவர்கள் ஆவர். அவ்விரு அறிஞர்களும் அல் குர்ஆனுக்கு புள்ளிகள் மற்றும் ஹரகத் குறியீடுகள் இடும் தமது பணியை வெற்றி கரமாக நிறை வேற்றி முடித்தனர். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் இருவருக்கும் நல் அருள் பாலிப்பானாக. அல் குர் ஆனை ஓதும் போது மக்களுக்கு ஏற்பட்ட குழப்ப நிலை இதன் மூலம் நீங்கியது .
“ அபுல் அஸ்வத் அத் துஅலி " யே அல் குர்ஆனுக்கு முதல் முதலில் புள்ளிகள் மற்றும் குறியீடுகளை அமைத்தவர் என தெரிவிக்கப் படுகிறது . “யஹ்யா பின் யஃமூர் அல் உத்வானி" குறியீடுகள் அமைத்த அல் குரானின் பிரதி
ஒன்று “இப்னு சீரீனிடம்" காணப் பட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
முதன் முதலில் அல் குர்ஆனுக்கு புள்ளிகள் மற்றும் குறியீடுகளை அமைத்தவர் “அபுல் அஸ்வத் அத் துஅலி" தான். ஆனால் அது தனிப்பட்ட முறையிலாகும். அதனைத் தொடர்ந்து “இப்னு சீரீன்" இந்தப் பணியை மேட் கொண்டுள்ளார் . ஆனால் அப்துல் மலிக் பின் மர்வான் உத்தியோக பூர்வ முறையில் அல் குர்ஆனுக்கு புள்ளிகள் மற்றும் குறியீடுகளை அமைத்து மக்கள் மையப் படுத்தினார் . இதுவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததோடு, மக்கள் எதிர் நோக்கிய சிக்கல்களை போக்கியது என மேற்படி அறிவிப்புக்களை சமரசப் படுத்த முடியும்.
" مناهل العرفان " “ மனாஹில் அல் இர்பான் " ( 1 / 280 ، 281 ) .
மூன்றாவது :
மேற்படி கேள்வியில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இப்னு அபீ தாவூத் அஸ் ஸஜஸ்தானி எழுதியுள்ள “அல் மஸா ஹிப்" என்ற நூலில் தெரிவிக்கப் பட்டு உள்ள அறிவிப்பும், அந்த அறிவிப்பு தொடர்ப்பில் மார்க்க அறிஞர்கள் தெரிவித்து உள்ள கருத்துக்களும் :
عن عبَّاد بن صهيب عن عوف بن أبي جميلة أن الحجاج بن يوسف غيّر في مصحف عثمان أحد عشر حرفاً ، قال : كانت في البقرة : 259 { لم يتسن وانظر } بغير هاء ، فغيرها " لَم يَتَسَنه " .
وكانت في المائدة : 48 { شريعة ومنهاجاً } ، فغيّرها " شِرعَةً وَمِنهاجَاً ".
وكانت في يونس : 22 { هو الذي ينشركم } ، فغيَّرها " يُسَيّرُكُم " .
وكانت في يوسف : 45 { أنا آتيكم بتأويله } ، فغيَّرها " أنا أُنَبِئُكُم بِتَأوِيلِهِ " .
وكانت في الزخرف : 32 { نحن قسمنا بينهم معايشهم } ، فغيّرها " مَعِيشَتَهُم " .
وكانت في التكوير : 24 { وما هو على الغيب بظنين } ، فغيّرها { بِضَنينٍ }… الخ ...
كتاب " المصاحف " للسجستاني ( ص 49 ( .
மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களால் ஒழுங்கு படுத்தப் பட்ட அல் குர் ஆன் பிரதியில் பதினொரு எழுத்துக்களை ஹஜ்ஜாஜ் பின் யூசுப் மாற்றி அமைத்தார் என அவ்ப் பின் அபீ வாஇலா ஊடாக உப்பாத் பின் ஸுஐப் அறிவிக்கின்றார் .
அவை:
சூராஹ் அல் பகராவின் 259 வது வசனமான {لم يتسن وانظر} என்பதாகும். ஆரம்பத்தில் அதன் இறுதியில் هـ சேர்க்கப்
பட்டு இருக்க வில்லை. அதன் இறுதியில் هـ வை சேர்த்து “لَم يَتَسَنه " எனவும் ,
சூராஹ் அல் மா இதாவின் 48 வது வசனமான { شريعة ومنهاجاً } என்பதை “ شِرعَةً وَمِنهاجَاً “ எனவும் ,
சூராஹ் யூனுஸின் 22 வது வசனமான { هو الذي ينشركم } என்பதை “يُسَيّرُكُم “ எனவும் ,
சூராஹ் யூஸுபின் 45 வது வசனமான { أنا آتيكم بتأويله } என்பதை “أنا أُنَبِئُكُم بِتَأوِيلِهِ எனவும் ,
சூராஹ் அஸ் சுக்ருபின் 32 வது வசனமான { نحن قسمنا بينهم معايشهم } என்பதை " مَعِيشَتَهُم “ எனவும் ,
சூராஹ் அத் தக்வீரின் 24 வது வசனமான
{ وما هو على الغيب بظنين } என்பதை " بِضَنينٍ “ எனவும் (முழுமையாக பார்க்கவும்) ஹஜ்ஜாஜ் பின் யூசுப் மாற்றி அமைத்தார் என அவ்ப் பின் அபீ வாஇலா ஊடாக உப்பாத் பின் ஸுஐப் அறிவிக்கின்றார் .
அல் மஸாஹிப், பக்கம் : 49 நூல் ஆசிரியர் அஸ் சஜஸ்தானி .
இந்த செய்தியில் உப்பாத் பின் ஸுஐப் இடம் பெற்று உள்ளமையினால் மிகவும் பலகீனமானது, அல்லது இட்டுக் கட்டப் பட்ட தரத்திற்கு தள்ளப் படலாம். இதனை அறிஞர்கள் பலர் சுட்டிக் காட்டி இருப்பினும். இவர் அறிவிக்கும் செய்தியை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை .
இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் குறித்து ஹதீஸ் கலை அறிஞர்கள் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
قال علي بن المديني : ذهب حديثه
இவரின் அறிவிப்பு வீணாகி விட்டது . (அதாவது ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என அலி பின் அல் மதீனி தெரிவித்துள்ளார்.
قال البخاري والنسائي وغيرهما : متروك
இவரின் செய்திகளை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டனர் என இமாம் புகாரி , நாசாஇ உள்ளிட்ட பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
قال ابن حبان : كان قدريّاً داعيةً ، ومع ذلك يروي أشياء إذا سمعها المبتدئ في هذه الصناعة شهد لها بالوضع ،
இவர் வழிதவறிய கதரிய்யாஹ் சிந்தனைப் பிரிவை சேர்ந்தவராக இருந்ததோடு, அதற்கு அழைப்பு விடுப்ப வராகவும் இருந்தார். இந்நிலையிலும் பல செய்திகளை இவர் அறிவித்துள்ளார். துறை சார்ந்த அறிஞர்கள் அவற்றை கண்ட உடனேயே அவை இட்டுக் கட்டப் பட்டுள்ள செய்திகள் என்பதை புரிந்து கொள்வர் என இப்னு ஹிப்பான் குறிப்பிட்டு உள்ளார்.
قال الذهبي : أحد المتروكين .
ஹதீஸ்கள் அங்கீரிக்கப் படாதவர்களில் இவரும் ஒருவர் என இமாம் அல் தஹபி குறிப்பிட்டுள்ளார்.
மீஸான் அல் இஃதிதால் , நூல் ஆசிரியர் அறிஞர் தஹபி, பக்கம் 4 / 28.
இந்த செய்தி எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது செல்லுபடியாகாத கருத்தைக் கொண்டுள் ளது என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் அல் குர்ஆன் திரிபு படுத்தப் பட்டு அது உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து பிரதிகளிலும் உள்ளடக்கப் பட்டு விட்டது என்ற கருத்தை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது. அல் குர் ஆனில் குறைப்பாடு உள்ளது என்று கூறக் கூடிய ஷீஆக்கள் (ராஃபிலாக்கள்) கூட இந்த அறிவிப்பை மறுக்கின்றனர்.
قال الخوئي – وهو من الرافضة - : هذه الدعوى تشبه هذيان المحمومين وخرافات المجانين والأطفال ، فإنّ الحجّاج واحدٌ من ولاة بني أُمية ، وهو أقصر باعاً وأصغر قدراً من أن ينال القرآن بشيءٍ ، بل هو أعجز من أن يغيّر شيئاً من الفروع الإسلامية ، فكيف يغير ما هو أساس الدين وقوام الشريعة ؟! ومن أين له القدرة والنفوذ في جميع ممالك الإسلام وغيرها مع انتشار القرآن فيها ؟ وكيف لم يذكر هذا الخطب العظيم مؤرخ في تاريخه ، ولا ناقد في نقده مع ما فيه من الأهمية ، وكثرة الدواعي إلى نقله ؟ وكيف لم يتعرض لنقله واحد من المسلمين في وقته ؟ وكيف أغضى المسلمون عن هذا العمل بعد انقضاء عهد الحجاج وانتهاء سلطته ؟ وهب أنّه تمكّن من جمع نسخ المصاحف جميعها ، ولم تشذّ عن قدرته نسخةٌ واحدةٌ من أقطار المسلمين المتباعدة ، فهل تمكّن من إزالته عن صدور المسلمين وقلوب حفظة القرآن وعددهم في ذلك الوقت لا يحصيه إلاّ الله .
" البيان في تفسير القرآن " ( ص 219 ) .
இந்த அறிவிப்பு தொடர்ப்பில் ராஃபிழா பிரிவைச் சேர்ந்த அல் கவ்கி என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் .
“இந்த செய்தி மூளைக் கோளாறினால் பீடிக்கப் பட்டவர்கள் மற்றும் கிறுக்கர்கர்கள் உளறுவது போன்றும், சிறு குழந்தைகளின் கட்டுக் கதைகள் போன்றும் உள்ளது.
பனீ உமய்யா காலத்தில் சாதாரண அதிகாரியாக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுப் என்பவர் எப்படி அல் குர் ஆனில் மாற்றங்கள் மேற்கொண்டிருக்க முடியும்? இஸ்லாத்தின் சாதாரண கிளை சட்டங்களில் கூட கை வைக்கும் அதிகாரம் இல்லாத இவர் எப்படி மார்கத்தின் அடிப்படை அம்சங்களில் மாற்றங்கள் மேற் கொள்ள முடியும்? முழு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திலும் பரவி இருந்த அல் குர் ஆன் பிரதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ள இவருக்கு எங்கிருந்து அதிகாரமும், பலமும் வந்தது? அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பெரிய விடயம் குறித்து, வரலாற்று ஆசிரியர்கள் எவரும் எப்படி குறிப்பிடாமல் இருக்க முடியும்? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விடயம் குறித்து அக்காலத்தில் வாழ்ந்த எந்த அறிஞர்களோ, அறிவிப்பாளரோ, விமர்சகர்களோ, ஏன் சுட்டிக் காட்ட வில்லை? ஹஜ்ஜாஜ் பின் யூசுப்பின் ஆட்சி காலம் முடிந்த பிறகும் முஸ்லிம்கள் இது குறித்து எவ்வாறு கண்மூடித்தனமாக இருந்திருக்க முடியும்? அவர் மேற்கொண்ட மாற்றங்கள் ஒரு அல் குர்ஆன் பிரதியையும் விட்டு வைக்காது எப்படி மூளை முடுக்குகளில் இருந்த அனைத்து பிரதிகளிலும் ஊடுருவி இருக்க முடியும்? அல் குர் ஆனை மனனம் இட்டு தமது உள்ளங்களில் பாதுகாத்திருந்த எண்ணிலடங்கா ஹாபில் களின்
உள்ளங்களில் இருந்து எப்படி இதனை நீக்கி இருக்க முடியும்?" .
"البيان في تفسير القرآن " (ص 219 ) அல் பயான் பீ தப்சீரில் குர்ஆன் பக்கம் : 219 .
மேற்படி கேள்வியாளர் குறிப்பிடுவது போன்று, இது தொடர்ப்பில் (ما غيَّره الحجاج في مصحف عثمان) “மா கய்யறஹு ஹஜ்ஜாஜ் பீ முஸ்ஹப் உஸ்மான்" (கருத்து: உஸ்மானின் குர்ஆன் பிரதியில் ஹஜ்ஜாஜ் மாற்றியவை) எனும் நூலையும் இமாம் அபூ பக்ர் பின் அபூ தாவூத் அஸ் ஸஜஸ்தானி எழுதியுள்ளதாக அவர் கூறும் கூற்று முற்றிலும் பொய்யானது . ( باب ما كتب الحجَّاج بن يوسف في المصحف ) “அல் குர் ஆனில் ஹஜ்ஜாஜ் மாற்றி எழுதியதாக தெரிவிக்கப் படும் அறிவிப்பு" என்று மேல் குறிப்பிட்ட அறிவிப்புக்கு இமாம் அபூ பக்ர் பின் அபூ தாவூத் அஸ் ஸஜஸ்தானி தலைப்பு எழுதியதை தவிர வேறெதனையும் செய்யவில்லை .
இதன் அடிப்படையில் மேற்கண்ட அறிவிப்பை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது . அல் குர் ஆனின் ஒரே ஒரு எழுத்தையேனும் மாற்றும் முயற்சியில் எவரும் இது வரையில் வெற்றி அடையவில்லை என்பது இந்த அறிவிப்பு பொய் என்பதற்கு போதுமான சான்றாகும் . அப்படி அல் குர்ஆனில் மாற்றங்கள் மேற்கொள்ளப்
பட்டிருந்தால் முஸ்லிம்கள் வலுவற்று அவர்களின் எதிரிகளின் சூழ்ச்சிகள் தீவிரமடைந்துள்ள இக்காலத்தில் அது அதிகளவில் பரப்பப் பட்டு இருக்கும். இது போன்ற பொய்யான சந்தேகங்களை தோற்றுவிக்க எடுக்கப் படும் முயற்சிகள் அவைகளின் வாய்மை அற்ற வாதங்களுக்கு எடுத்துக் காட்டாகும். அல் குர் ஆனின் பலம் மிக்க ஆதாரங்களுடன் ஈடு கொடுக்க முடியாத அதன் எதிரிகள், அதனை பொய்யான முறையில் குறை கூறி விமர்சிக்க ஆரம்பித்துள்ளதையே இதன் மூலம் உணர முடிகிறது .
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
http://islamqa.info/ar/23487