ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுதல்
மொழிபெயர்க்கப்பட்ட விடயங்கள்
பிரிவுகள்
மூலாதாரங்கள்
Full Description
ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுதல்
حكم من قذف عائشة رضي الله عنها
< தமிழ் – تاميلية >
ஷெய்க் சாலிஹ் அல் முனஜ்ஜித்
الشيخ محمد صالح المنجد
மொழிபெயர்ப்பாளர் பெயர்:அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்
திருத்துபவர் பெயர்:முஹம்மத் அமீன்
ترجمة:محمد مخدوم عبد الجبار
مراجعة: محمد أمين
حكم من قذف عائشة رضي الله عنها
ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுதல்
http://islamqa.info/ar/954
ஷெய்க் சாலிஹ் அல் முனஜ்ஜித்
தமிழாக்கம்
அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்
கேள்வி:
ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது படுதூறு கட்டுதல் தொடர்ப்பில் இஸ்லாம் என்ன சொல்கிறது?
பதில்:
ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களோ, அவர்கள் அல்லாத முஃமின்களின் தாய்மார்களான இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வ ஸல்லம்) அவர்களின் மனைவிமார்கள் யாராக இருந்தாலும், அனைவரும் பொதுவாக நபித் தோழர்களாகவே கருதப் படுகின்றனர். நபித் தோழர்கள் தொடர்ப்பில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும்.
நபித் தோழர்கள் தொடர்ப்பில் வந்துள்ள செய்திகளில் ஒன்று பின்வருமாறு அமைந்துள்ளது.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لا تَسُبُّوا أَصْحَابِي فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلا نصيفه . " رواه البخاري : فتح رقم 3379.
"என் தோழர்களில் யாரையும் ஏசாதீர்கள். உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறை வழியில்) செலவிட்டதின் நன்மைகளில் இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட நீங்கள் எட்ட முடியாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரழி யல்லாஹு அன்ஹு), ஆதாரம்: புகாரி)
ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களை அல்லாஹ்வே சூராஹ் அந் நூரில் (24 வது அத்தியாயம்) தூய்மைப்படுத்தி இருக்கும் போது அவர்கள் மீது எவனாவது படுதூறு கட்டினால் “அவன் இறை நிராகரிப்பாளனும், பொய்க்காரனுமாவான்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து முடிவு கூறியுள்ளனர்.
وقد ساق الإمام ابن حزم بسنده إلى هشام بن عمار قال: سمعت مالك بن أنس يقول: من سب أبا بكر وعمر جلد ومن سب عائشة قتل ، قيل له : لم يقتل في عائشة ؟ قال : لأن الله تعالى يقول في عائشة رضي الله عنها : ( يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين(
அபூ பக்ர் மற்றும் உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) போன்றோர் மீது பழி சுமத்தியவன் கசையடி மூலம் தண்டிக்கப் படுவான். ஆனால் ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது பழி சுமத்தியவனுக்கு மரண தண்டனை வழங்கப் பட வேண்டும் என மாலிக் இப்னு அனஸ் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஹிஷாம் இப்னு அம்மார் என்பவர் கூறுகிறார்.
அப்போது மாலிக் இப்னு அனஸ் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்களிடம் “ஏன் ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது பழி சுமத்தியவனுக்கு மரண தண்டனை வழங்கப் பட வேண்டும்?" என கேட்கப் பட்டது. அதற்கு அவர் “ஏனெனில் ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது பழி சுமத்துவது தொடர்ப்பில் இறைவன்
يَعِظُكُمُ اللَّهُ أَن تَعُودُوا لِمِثْلِهِ أَبَدًا إِن كُنتُم مُّؤْمِنِينَ (سورة النور)
“நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். (அல் குர்ஆன் 24:17 ) எச்சரிக்கை செய்துள்ளான்" என மாலிக் இப்னு அனஸ் (ரழி யல்லாஹு அன்ஹு) பதிலளித்தார்கள் என்ற இப்னு ஹிஸ்ம் அறிவிக்கும் செய்தியை இமாம் அஹ்மத் குறிப்பிட்டுள்ளார்.
قال مالك فمن رماها فقد خالف القرآن ومن خالف القرآن قتل .
எவன் ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுகிறானோ அவன் அல் குர்ஆனுக்கு முரண்பட்டு விடுகிறான். அவ்வாறு அல் குர்ஆனுக்கு முரணாக செயல் படுகின்றவனுக்கு மரண தண்டனை வழங்கப் பட வேண்டும் என இமாம் மாலிக் கூறுகின்றார்.
قال ابن حزم : قول مالك ههنا صحيح وهي ردة تامة وتكذيب لله تعالى في قطعه ببراءتها .
இவரின் கூற்றின் தொடர்ப்பில் கருத்து தெரிவித்துள்ள இமாம் இப்னு “ஹஸ்ம்", அறிஞர் மாலிகின் இந்த கூற்று மிகவும் பொருத்தமானது, ஏனெனில் ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களை இறைவன் தூய்மை படுத்தி உள்ள நிலையில், இவ்வாறு அவர் மீது பழி சுமத்துவது மார்கத்தில் இருந்து முழுமையாக வெளி யேற்றி (ரித்தத் ஆகி) விடும். இறைவனின் கூற்றை முழுமையாக மறுக்கும் செயற்பாடுமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
قال أبو بكر ابن العربي : ( لأن أهل الإفك رموا عائشة المطهرة بالفاحشة فبرأها الله فكل من سبها بما برأها الله منه فهو مكذب لله ومن كذب الله فهو كافر فهذا طريق مالك وهي سبيل لائحة لأهل البصائر ) .
பொய்யர்கள் பத்தினியான ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது மிகவும் கொடூர குற்றமான விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தினர். ஆனால் இறைவன் அவர்களை பரிசுத்தப் படுத்தினான். எவன் ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களை இறைவன் பரிசுத்த படுத்திய நிலையிலும் பழி சுமத்துகிறானோ அவன் இறைவனை மறுத்தவனாக (காஃபிராக) மாறி விடுகிறான். இதுவே அறிஞர் மாலிக்கின் கருத்து மாத்திரமின்றி புத்தி ஜீவிகளின் கோட்பாடும் ஆகும் என அறிஞர் அபூ பக்ர் இப்னுல் அரபி தெரிவிக்கின்றார்.
قال القاضي أبو يعلى : ( من قذف عائشة بما برأها الله منه كفر بلا خلاف وقد حكى الإجماع على هذا غير واحد وصرح غير واحد من الأئمة بهذا الحكم ) .
எவன் இறைவன் பரிசுத்தப் படுத்திய குற்றச் செயலைக் கொண்டு ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது பழி சுமத்துகிறானோ, அவன் இறைவனை மறுத்த வனாக (காஃபிராக) மாறி விடுகிறான் என்பதில் அறிஞர்களிடம் முரண்பாடு கிடையாது. பல அறிஞர்கள் இந்த கருத்தை ஒருமித்து (இஜ்மாஃ) வாக கூறியுள்ளனர் என அல் காதி அபூ யஃலா குறிப்பிடுகிறார்.
وقال ابن أبي موسى: (ومن رمى عائشة رضي الله عنها بما برأها الله منه فقد مرق من الدين ولم ينعقد له نكاح على مسلمة ) .
எவன் இறைவன் பரிசுத்தப் படுத்திய குற்றச் செயலைக் கொண்டு ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது பழி சுமத்துகிறானோ, அவன் இஸ்லாத்தில் இருந்து வெளியே சென்று விடுகிறான். அவன் முஸ்லிமான ஒரு பெண்ணை திருமணம் செய்யவும் அனுமதி வழங்கப் பட மாட்டாது என அறிஞர் இப்னு அபி மூஸா குறிப்பிடுகிறார்.
وقال ابن قدامة : ( ومن السنة الترضي عن أزواج رسول الله صلى الله عليه وسلم أمهات المؤمنين المطهرات المبرآت من كل سوء ، أفضلهن خديجة بنت خويلد وعائشة الصديقة بنت الصديق التي برأها الله في كتابه زوج النبي صلى الله عليه وسلم في الدنيا والآخرة فمن قذفها بما برأها الله منه فقد كفر بالله العظيم ) .
அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் மனைவிமார்கள் அனைவருக்கா கவும் இறைவனனின் திருப்தியையும், பொருத்தத்தையும் வேண்டி பிரார்த்திப்பது சுன்னத்தாகும். அவர்கள் முஃமீன்களின் தாய்மார்கள். அனைத்து தீங்குகளில் இருந்தும் தூய்மை படுத்தப் பட்டவர்கள். அவர்கள் மிகவும் சிறந்தவர்கள் கதீஜா பின்த் குவைலித் மற்றும் ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹு மா) ஆகியோர் ஆவர்.
நபி (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் மனைவியான ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களை இறைவன் அவனது வேதத்தின் மூலம் இம்மையிலும் மறுமையிலும் பரிசுத்தப் படுத்தி விட்டான். அவர்கள் மீது யார் இறைவன் பரிசுத்தப் படுத்திய தீமையை கொண்டே படுதூறு கட்டுகிறானோ அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வை நிராகரித்தவனாக ஆகி விடுவான் என அறிஞர் இப்னு குதாமா குறிப்பிட்டுள்ளார்.
وقال الإمام النووي رحمه الله: ( براءة عائشة رضي الله عنها من الإفك وهي براءة قطعية بنص القرآن العزيز فلو تشكك فيها إنسان والعياذ بالله صار كافرا مرتدا بإجماع المسلمين).
ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் இறை வேதத்தின் மூலம் உறுதியாகவே பரிசுத்தப் படுத்தப் பட்டு விட்டார்கள். இதன் பிறகும் எந்த ஒரு மனிதனாவது இது தொடர்ப்பில் சந்தேகம் கொண்டால் (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக) முஸ்லிம் அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் படி அவன் இறைவனை மறுத்தவனாக (காஃபிராக) மாறிவிடு கிறான் என இமாம் நவவி குறிப்பிடுகிறார்.
وقال ابن القيم رحمه الله : (واتفقت الأمة على كفر قاذفها ) .
ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது படுதூறு கட்டுபவன் இறைவனை மறுத்தவனாக (காஃபிராக) மாறி விடுவான் என்பதை அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து கூறியுள்ளனர் என அறிஞர் இப்னுல் கையும் கூறுகிறார்.
وقال الحافظ ابن كثير في تفسيره : ( أجمع العلماء رحمهم الله قاطبة على أن من سبها بعد هذا ورماها به بعد هذا الذي ذكر في هذه الآية فإنه كافر لأنه معاند للقرآن ) .
இவ்வாறு இறைவன் தனது அருள் மறையில் தூய்மை படுத்திய பிறகும் ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது படுதூறு கட்டுபவன் இறைவனை மறுத்தவனாக (காஃபிராக) மாறிவிடுவான் என்பதில் அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்த கருத்தை கொண்டுள்ளனர் என இமாம் இப்னு கதீர் அவர்கள் தங்களது தஃப்சீரில் குறிப்பிட்டுள்ளார்.
وقال بدر الدين الزركشي : ( من قذفها فقد كفر لتصريح القرآن الكريم ببراءتها ) .
இறைவன் தனது அருள் மறையில் மிகத்தெளிவாகவே ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களை தூய்மை படுத்தி உள்ளதால் அவர்கள் மீது படுதூறு கட்டுபவன் இறைவனை மறுத்தவனாக (காஃபிராக) மாறிவிடுவான் என பத்ருத் தீன் அல் ஸரகஸி கூறுகிறார்.
மேற்கண்ட கூற்றுக்கான இஸ்லாமிய அறிஞர்களின் ஆதாரங்கள்:
ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது படுதூறு கட்டுபவன் இறைவனை மறுத்தவனாக (காஃபிராக) மாறிவிடுவான் என்ற கருத்தை இஸ்லாமிய அறிஞர்கள் பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டே அமைத்துள்ளனர். அவற்றில் பின் வருவனவும் அடங்கும்:
1. அந் நூர் எனும் சூராவில் ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் சம்பந்தப் பட்ட குற்றச் செயலில் இருந்து மிகத் தெளிவாக தூய்மை படுத்தப் பட்டுள்ளமை. அல்லாஹ் அவர்களை தூய்மை படுத்திய பின்பும் அவர்கள் மீது சந்தேகம் கொள்வது அல்லாஹ்வின் கூற்றை மறுப்பதும் நம்பிக்கைக் கொள்ளாமையுயாகும். இவ்வாறு ஒருவன் அல்லாஹ்வை பொய்ப்பித்தால் அல்லது மறுத்தால் எந்த சந்தேகமும் இன்றி அவன் (காஃபிராக) இறைவனை நிராகரித்தவனாக மாறிவிடுவான்.
2. “அஹ்லுல் பைத்" எனப் படும் இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் குடும்பத்தார் மீது பொய் பழி சுமத்துவதன் மூலம் அவர்கள் நோவினை அடைகிறார்கள். இறைத் தூதரை (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) நோவினை செய்தல் அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் படி எந்த சந்தேகமும் இன்றி இறை நிராகரிப்பை (குஃப்ரை) ஏற்படுத்தும் செயலாக கருதப்படும். மேற்படி இறைத் தூதரின் மனைவி ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது பொய் பழி சுமத்தப் பட்ட சம்பவத்தின் மூலம் அவர்கள் நோவினை அடைந்தார்கள் என்பதற்கு பின்வரும் புகாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் வந்துள்ள நீண்ட செய்தியின் ஒரு பகுதி ஆதாரமாக உள்ளது.
أخرجه الشيخان في صحيحيهما من حديث الإفك عن عائشة قالت : " .. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ يَوْمِهِ فَاسْتَعْذَرَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ مَنْ يَعْذِرُنِي مِنْ رَجُلٍ قَدْ بَلَغَنِي عَنْهُ أَذَاهُ فِي أَهْلِي وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي إِلا خَيْرًا …" الحديث .
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள், 'என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ் வின் மீது ஆணையாக ஏன் குடும்பத்தார் விடயத்தில் நல்லதை தவிர வேறு எதனையும் நான் அறிந்ததில்லை" என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இறை தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் குறித்த சம்பவத்தின் மூலம் மன வேதனை அடைந்தார்கள் என்பதற்கு மேற்படி செய்தி மிகத் தெளிவான ஆதாரமாகும்.
يَعِظُكُمُ اللَّهُ أَن تَعُودُوا لِمِثْلِهِ أَبَدًا إِن كُنتُم مُّؤْمِنِينَ
நீங்கள் (திடமாக) முஃமின்களாக இருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ) தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். என்ற அல் குர் ஆன் வசனத்துக்கு விரிவுரை செய்யும் போது இமாம் குர்துபி அவர்கள் “இது ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் விவகாரத்திலாகும். ஏனெனில் இதன் மூலம் இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் மன வேதனை அடைகிறார்கள். இவ்வாறு பழி சுமத்துவத்தின் மூலம் ஒருவன் காஃபிராகி விடுகிறான் என குறிப்பிட்டுள்ளார்கள்.
3. அதே வேலை ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது பொய் பழி சுமத்துவது இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் மீது பொய் பழி சுமத்துவது போன்றாகும். ஏனெனில் இறைவன் தனது அருள் மறையில் பின் வருமாறு குறிப்பிடுகிறான்.
الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ ۖ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ ۚ )سورة النور 26)
4. கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு. (அல் குர் ஆன் 24:26 )
5. ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் தூய்மையான பெண்மணியாக இருந்தமையினால் இறைவன் அவர்களை தனது தூதரின் மனைவியாக தெரிவு செய்துள்ளான். ஏனெனில் இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் எல்லா மனிதர்களை விடவும் மிகத் மிகத் தூய்மை யானவர்கள். ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் தீய பெண்ணாக இருந்திருந்தால் எந்த வகையிலும் அவர்களின் மனைவியாக இருப்பதற்கு தகுதி பெற மாற்றார்கள் என இமாம் இப்னு கதீர் குறிப்பிட்டுள்ளார்.
6. இது எல்லாவற்றை விடவும் இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களுக்கு மனிதர்களிலேயே மிகவும் நேசத்திற்கும் பாசத்திற் கும் உரியவர்களாக ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் இருந்துள்ளார்கள். இதனையே பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
عن عَمْرُو بْنُ الْعَاصِ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَيْشِ ذَاتِ السَّلَاسِلِ قَالَ فَأَتَيْتُهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ عَائِشَةُ قَالَ قُلْتُ فَمِنْ الرِّجَالِ قَالَ أَبُوهَا إِذًا قَالَ قُلْتُ ثُمَّ مَنْ قَالَ عُمَرُ قَالَ فَعَدَّ رِجَالًا .
7. அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நான் இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களிடம் வந்து மனிதர்களிலேயே உங்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்? என வினவினேன். அதற்கு அவர்கள் ஆஇஷா என பதிலளித்தார்கள். அதற்கு நான் ஆண்களில் யார் என வினவினேன். அதற்கு அவர்கள் அவரின் தந்தை (அபூ பக்ர்) என பதிலளித்தார்கள். பிறகு யார் என கேட்டேன். அதற்கு அவர்கள் உமர் என பதிலளித்தார்கள். இவ்வாறே பலரின் பெயரை குறிப்பிட்டார்கள்.
8. எனவே யார் அல்லாஹ்வின் தூதரின் பாசத்திற் குரியவரை வெறுத்து பழி சுமத்துகிரானோ அவன் இம்மையிலும் மறுமையில் அல்லாஹ்வின் தூதரின் கோபத்திற்கு ஆளாகி விடுவான் என்பது உறுதி.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் தொடர்ப்பில் இறக்கப் பட்ட இறை வசனங்கள்
إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ ۚ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم ۖ بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ ۚ لِكُلِّ امْرِئٍ مِّنْهُم مَّا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ ۚ وَالَّذِي تَوَلَّىٰ كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கு ஒப்ப தண்டனை) இருக்கிறது, மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட வனுக்குக் கடினமான வேதனையுண்டு. (அல் குர்ஆன் 24:11 )
لَّوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَٰذَا إِفْكٌ مُّبِينٌ
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்ற போது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாமா? (அல் குர்ஆன் 24;12)
لَّوْلَا جَاءُوا عَلَيْهِ بِأَرْبَعَةِ شُهَدَاءَ ۚ فَإِذْ لَمْ يَأْتُوا بِالشُّهَدَاءِ فَأُولَٰئِكَ عِندَ اللَّهِ هُمُ الْكَاذِبُونَ
அ (ப்பழி சுமத்திய) வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கி றார்கள். (அல் குர்ஆன் 24;13)
وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ لَمَسَّكُمْ فِي مَا أَفَضْتُمْ فِيهِ عَذَابٌ عَظِيمٌ
இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்த மைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும். (அல் குர்ஆன் 24;14)
إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُم مَّا لَيْسَ لَكُم بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِندَ اللَّهِ عَظِيمٌ
இப் பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய (பாவமான)தாக இருக்கும் . (அல் குர்ஆன் 24;15)
وَلَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبْحَانَكَ هَٰذَا بُهْتَانٌ عَظِيمٌ
இன்னும் இதை நீங்கள் செவி யேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு (த் தகுதி) இல்லை; (நாயனே!)நீயே தூயவன், இது பெரும் பழியாகும்" என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா? . (அல் குர்ஆன் 24:16)
يَعِظُكُمُ اللَّهُ أَن تَعُودُوا لِمِثْلِهِ أَبَدًا إِن كُنتُم مُّؤْمِنِينَ
நீங்கள் (திடமாக) முஃமின்களாக யிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ) தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். . (அல் குர்ஆன் 24:17)
وَيُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்)அறிந்தவன்; விவேகமிக்கோன். (அல் குர்ஆன் 24:18)
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۚ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். . (அல் குர்ஆன் 24:19)
மேற்படி சம்பவம் தொடர்ப்பில் வந்துள்ள நபி மொழி
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப் பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.
நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்த போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்து மாலை யொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்த வர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்க வில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலா னார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்ப தைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்த படி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ என்பவர் படையினர் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித் தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை) ப் பார்த்து விட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், 'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்" என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (அப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந் தார்கள். நான் நோயுற்று விடும் போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்பார்கள்; (பிறகு போய் விடுவார்கள்.) அவ்வளவு தான். (என்னைக் குறித்து வெளியே பேசப் பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்' என்று கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்?' என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப் பட வில்லையா?' என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்) தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்டார்கள். நான் 'என் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்' என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதூ என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம். 'மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்தை பெரிது படுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீது ஆணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகு மிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும் பாலும்) குறைவேயாகும்' என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். அன்றிரவை இடை விடாமல் அழுது கொண்டும், தூக்கம் சிறிதுமின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை) ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். 'இறைத் தூதர் அவர்களே! தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்) தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்" என்று அவர்கள் கூறினார்கள். அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களோ நபி (ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), 'இறைத் தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியை யும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்" என்று கூறினார்கள். எனவே, இறைத் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, 'பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), 'தங்களை சத்திய (மார்க்க) த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய் விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும்; அத்தகைய (விபர மறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை' என்று பதில் கூறினார். உடனே, அன்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவி புரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனே யல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை' என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத் (ரலி) எழுந்து வின்று, 'இறைத் தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டு மென்று) தங்கள் உத்தரவை நாங்கள் நிறை வேற்றுகிறோம்' என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா (ரலி) எழுந்து நின்று, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது" என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர் (ரலி) எழுந்து நின்று, உபாதா (ரலி) அவர்களை நோக்கி, 'நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்" என்று கூறினார். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மெளனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மெளனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலை யானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும் போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ் விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப் பட வில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், 'லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)' என்று கூறிவிட்டு, 'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்' என்றார்கள். இறைத் தூதர் (ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், 'அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்' என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது' என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், 'இறைத் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்' என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார்கள். நானோ இள வயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, 'அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மை என்று நம்பி விட்டீர்கள் என்பதையும் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால்... நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்... நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மை என்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை யஃகூப் (அலை) அவர்களையே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (குர்ஆன் 12:83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே - வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, 'இறைத் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்" என்றே எதிர் பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தி ருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவு மில்லை; அதற்குள் அல்லாஹ், நபி (ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்து விட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமா யிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, 'ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்ற மற்றவள் என அறிவித்து விட்டான், என்று கூறினார்கள். என் தாயார், 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்' என்று கூறினார்கள். நான், 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்" என்றேன். அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்" என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவு படுத்தி அல்லாஹ் இதை அருளிய போது (என் தந்தை) அபூ பக்ர் (ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்" என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர் (ரலி) செலவிட்டு வந்தார்கள்... உடனே அல்லாஹ், 'உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட் படுத்தாமல் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிபளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபை யுடையோனுமாய் இருக்கிறான்' என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறை வசனத்தை அருளினான். அதன் பிறகு அபூ பக்ர் (ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.
(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; 'ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப் (ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும். அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய. பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.
இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
http://islamqa.info/ar/954