இஸ்லாத்தில் பாதுகாப்பை கண்டேன்
பிரிவுகள்
Full Description
இஸ்லாத்தில் பாதுகாப்பை கண்டேன்
] தமிழ்– Tamil –[ تاميلي
அரப் நியூஸ் பத்திரிகையில்
2015 ஜனவரி 16ம் திகதி பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்
தமிழில்
ஜாசிம் இப்னு தஇயான்
2015 - 1436
"لقد وجدت الأمن في الإسلام"
« باللغة التاميلية »
جريدة عرب نيوس الإنجليزية في 15 يناير 2015م
ترجمة: جاسم بن دعيان
2015 - 1436
இஸ்லாத்தில் பாதுகாப்பை கண்டேன்
அரப் நியூஸ் பத்திரிகையில்
2015 ஜனவரி 16ம் திகதி
தமிழில் – ஜாசிம் இப்னு தய்யான்
நூர் என்ற பெண்மனி இங்கிலாந்தில் வாழும் இந்து மதத்தை சார்ந்தவர். நவீன இந்து, கிறீஸ்தவ சமூகங்களில் நிறைந்து கிடக்கும் அனாச்சாரங்களை கண்டு வெறுப்டைந்த அப் பெண் இறுதியில் எவ்வாறு முஸ்லிமாக மாறினார் என்ற தனது கதையை இவ்வாறு கூறுகிறார்.
இந்து மதத்தில் ஆண்கள் தெய்வங்களை போல் நடத்தப்படுகிறார்கள். திருமண மாகாத இளம் பெண்கள் இந்து திருவிழாவில் சிவபெருமானை வணங்கி, அவரை போன்ற ஒரு கணவன் தனக்கு கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள். எனது தாயும் என்னை அவ்வாறு வேண்டிக் கொள்ளும் படி என்னுடம் கூறினாள்.
இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள், சடங்குகள் மூலம் பெண்கள் அடக்கி ஆளப்படும் அவல நிலையை இந்த சடங்கின் போது நேரடியாகவே நான் கண்டதால், இந்து மதம் சரியான மதமாக இருக்க முடியாது என்று எனக்கு தோன்றியது.
சடங்குகள், சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பெண்களை அடக்கியாளும் ஏராளமான சமூக தீங்குகள், இன்று இந்து சமூகத்தில் மதத்தின் பெயரால் புகுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக ஒருபெண் விதவையானால் அவள் தலையை மொட்டையடித்து வெண்ணிற சாரி அணிய வேண்டும். சைவ உணவு மாத்திரம் சாப்பிட வேண்டும். மறுமணம் பற்றி அவள் சிந்திக்கவும் கூடாது. பெண்கள் வரதட்சனை கொடுக்க வேண்டும். பெண்ணின் வசதியை பற்றி சிந்திக்காது எதையும், எல்லாவற்றையும் வரதட்சனையாக கேட்கும் உரிமை ஆணுக்கும், அவனது பெற்றோருக்கும் உண்டு. கேட்ட வரதட்சனை கொண்டு வராவிட்டால் உடலாலும் உள்ளத்தாலும் அவள் கடும் வேதனைக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு வரதட்சனை செலுத்தாத பெண்களின் திருமணங்கள் “விபத்தில் ஏற்பட்ட மரணம்” என்று முடிந்து போகும் செய்திகள் ஏராளம். நவீன இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பவங்கள் இன்றும் ஏற்படுகின்றன.
நானும் உயர் குலத்தை சேர்ந்த இந்து குடும்பத்தில் பிறந்தவள் தான். கல்யாணம் செய்து, பிள்ளைகள் பெற்று, கணவனுக்கு ஊழியம் புரிய வேண்டும் என்ற விதி சிறு வயது முதல் எங்கள் உள்ளத்தில் ஆழமாக பதிய வைக்கப் பட்டிருந்தது.
உயர் கல்வி கற்பதற்காக நான் இங்கிலந்து வந்த போது, ஆண்களும் பெண்களும் சமஉரிமையுடன் வாழும் வாய்ப்புள்ள, பெண்களை அடக்கி ஆளாத தேசத்திற்கு வந்து விட்டேன் என்ற உணர்வு என்னுள் ஓங்கியது. எமக்கு வேண்டியவாறு வாழ அனைவருக்கும் உரிமைகள் உள்ளன என்று நினைத்தேன். ஆனால், இச்சமூக மக்களை சந்தித்து கலந்துரையாடி, இச்சமூகத்தை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து (குடிக்கும் பார்கள், நடன மன்றங்கள்) போன்ற இடங்களுக்கு சென்று கேலிக் கூத்துக்களில் பங்கு பற்றிய போது, இந்த சமுதாயத்திலும் பெண்களுக்கு சமஉரிமை இல்லை என்பதை புரிந்துக் கொண்டேன்.
மேற்கு நாட்டுப் பெண்கள் கல்வியில், தொழில் துறையில் சம உரிமை பெற்றுள்ளது போன்று வெளிப்படையாக தெரிந்தாலும், மிகவும் சாதுரியமான முறைகளில் பெண்கள் இடைஞ்சல்களுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்பதே உண்மையாகும். இவ்வாறு நண்பர்களுடன் பழகிய போது, ஆண்கள் ஒவ்வொருவரும் என்னுடன் பேசுவதற்கு அதிக ஆர்வம் காட்டினர். அதை இயற்கை என ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அவர்கள் உண்மையில் என்ன நோக்கத்துடன் என்னிடம் நெறுங்கிப் பழக முயற்சி செய்கிறார்கள் என்பதை சில காலம் கழிந்த பின் அறிந்த போது, என்னுடைய அறிவீனத்தை நான் உணர்ந்துக் கொண்டேன். அதன் பின் அவர்கள் மத்தியில் அமர்ந்திருப்பது எனக்கு பெரும் சங்கடமாக தோன்றியது. அவர்களது உள்ளங்களை கவரும் முறையில் நளினமாக பேச வேண்டும், கவர்ச்சிகரமாக ஆடை அணிய வேண்டும் என அவர்கள் எதிர் பார்த்திருப்பது எனது சங்கடத்தை மேலும் அதிகரித்தது. அங்கு வரும் அனைவரும் அங்கு நிழவும் சூழலில் ஆனந்தம் இருப்பதாக கூறினாலும் எனக்கு அது எந்த வகையிலும் ஆனந்தம் கொடுக்கவில்லை.
சில முஸ்லிம்களுடன் எனக்கு அறிமுகம் இருப்பினும் இஸ்லாத்தை பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆகையால் உள்ளத்தில் நிறைவு, பாதுகாப்பு, கௌரவம் ஆகியவற்றை கொடுக்கக் கூடிய சமூகத்தையும், சம்பிரதாயத்தையும் கொண்ட சரியான இறை நம்பிக்கையுடன் கூடிய மதத்தை தேடியறிய வேண்டும் என்ற உறுதி என்னுள் எழுந்தது. எவருடனும் கூடிக் களித்து ஆனந்தமடைவது தான் வாழ்க்கை என யாராவது கருதினால் அவர்கள் அந்த வாழ்க்கையை தேடிக் கொள்கிறார்கள். பணம் சம்பாதிப்பது தான் வாழ்க்கை என யாரேனும் கருதினால் அவர்கள அதற்காக எல்லா முயற்சியிலும ஈடுபடுகிறார்கள். மதுபோதையில் தான் வாழ்வின் ஆனந்தம் உள்ளதென நம்புபவர்கள் அதில் ஈடுபடுகிறார்கள். இந்த வாழ்க்கைமுறை இறுதியில் எம்மை எதிலும் கொண்டு போய் சேர்க்காது. இவற்றில் யாருக்கும் மன நிறைவு கிட்டாது. ஆனால் இவற்றின் காரணமாக பெண்கள் தம் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் கண்ணியம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டு போகிறது.
நவீன சமுதாயத்தில் “சம உரிமை” என்ற பெயரில் பெண்கள் ஒரு ஆணுடன் Boy friend என்ற பெயரில் தற்காலிகமாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நியதியை பற்றி ஆழமாக சிந்தித்தேன். அப்படி தொடர்பு இல்லாத பெண்கள் இயற்கைக்கு மாற்றமான, உடலில் அல்லது உள்ளத்தில் ஏதோ குறை உள்ளவர்கள் என்று சமூகத்தில் கருதப் படுகிறார்கள். இப்படிப்பட்ட சிந்தனைகள் பெண்களை அசிங்கப் படுத்தும், அடக்கி ஆளும் வழிகள் என நான் கருதினாலும், சில பெண்கள் இதனை உணர்வதில்லையே!
நான் இறுதியில் முஸ்லிமாக மதம் மாறிய போது, நிலையான பாதுகாப்பு எனக்கு கிடைத்தது என்பது உறுதியாகியது. எல்லா வகையிலும் முழுமையான, தெளிவான மதம் இஸ்லாம் என்ற உண்மையை அறிந்தேன். இஸ்லாம் என்பது பெண்களை அடக்கி ஆளும், பெண்களுக்கு இம்சை செய்யும் மதம் என்றும், இதில் பெண்களை உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை மூடி மறைத்து, பெண்களுக்கு எவ்வித சுதந்திரமோ, உரிமையோ கொடுக்கப் படுவ தில்லை என்றும் அனேக முஸ்லிமல்லாத மக்கள் தவறாக கருதுகிறார்கள்.
உண்மையிலேயே, ஏனைய மதங்களை விட பெண்களுக்கு இஸ்லாம் அனேக உரிமைகளை வழங்கியுள்ளது என்பதை அவர்கள அறிய மாட்டார்கள். 1,400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளில் எதனையும் மேற்கு நாடுகளோ அல்லது வேறெந்த சமூகமோ வழங்காததோடு, அப்படி ஏதேனும் வழங்கப் பட்டிருந்தால் அவை நவீன கால மாற்றங்களின் விளைவுகள் என்றே கூற வேண்டும். அப்படி யிருந்தும் இன்றும் சில சமூகங்கள் பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் பரிதாப நிலையை, நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஹிந்து சமூகத்தில் காண்கின் றோம்.
சொத்துக்கு வாரிசு பெறும் உரிமை முஸ்லிம் பெண்களுக்கு எப்போதும் உண்டு. தமது வியாபாரங்களையும், வர்த்தக நிறுவனங் களையும் நிர்வாகம் செய்யும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. சொத்துக்களை வாங்கவும் விற்கவும் அவற்றுக்கு சொந்தக்காரியாக செயல் புரியவும் முஸ்லிம் பெண்களுக்கு முழுமையான உரிமை உண்டு. இதில் பங்கு கேட்க கணவனுக்கு உரிமை இல்லை. தேவையான கல்வியறிவு பெறவும், நியாயமான, மார்க்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களின் அடிப்படையில் தனது மனதுக்கு பிடிக்காத மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடியாது என மறுக்கவும் இஸ்லாமிய பெண்ணுக்கு உரிமை உண்டு. பெண்களுக்கு அன்பு காட்டும் படியும், அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள உரிமைகளை பற்றியும் அறிவுறுத்தம் குர்ஆன் வசனங்கள் ஏராளமாக உள்ளன. பெண்களின் உரிமை பற்றி குறிப்பிடும் இஸ்லாமிய சட்டங்கள் மனிதனால் இயற்றப் படவில்லை. அவை இறைவனால் இறக்கப் பட்டவையாகும். இந்த காரணத்தினால் இஸ்லாம் முழுமையான ஒரு மார்க்கம் என்பது விளங்குகிறது.
முஸ்லிம் பெண்கள் தமது அழகை மூடி மறைக்கும் ஆடைகள் அணிவதைப் பற்றிய கேள்விகள் அடிக்கடி எழுப்பப் படுவதை காண்கிறோம். இஸ்லாத்தில் விவாகம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாகிறது. இதன் காரணமாக பெண்கள் தமது உடம்பை நடமாடும் காட்சிப் பொருளாக மற்றவர்களுக்கு காட்டிக் கொன்டிருக்க கூடாது. அதே போன்று ஆண்களுக்கும், குறிப்பிட்ட அளவை மீறி தமது உடம்பை வெளிப்படுத்த இஸ்லாத்தில் அனுமதி இல்லை. வெட்கம், நாணம், வரம்பு எனும் பண்புகள் இஸ்லாத்தில் அழுத்தமாக கூறப் பட்டுள்ளது.
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّـهُ غَفُورًا رَّحِيمًا ﴿٥٩﴾
“நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசி களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானை களை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக. அதனால் அவர்கள் (கெளரவமானவர்கள் என) அறியப்படுவதற்கும், அவர்கள் (பிறரினால்) நோவினை செய்யப் படாதிருக்கவும் (உதவும்). இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடைய வனாக இருக்கிறான்.” சூரா 33;59
எம்மை சுற்றியுள்ள சமுதாயங்களில் பெரும்பான்மையான பெண்கள் இடையூறு களுக்கு ஆளாவதற்கு பிரதான காரணம் அவர்களின் ஆடை அலங்காரமே என்பதை காண்கிறோம். உடை சம்பந்தமான சட்ட வரம்புகள் பெண்களுக்கு மாத்திரமன்றி இஸ்லாத்தில் ஆண்களுக்கும் உண்டு என்பதை பெரும்பாலோர் அறிய மாட்டார் கள். ஆண்களும் பெண்களும் சுதந்திரமாக நெறுங்கி கலந்துறவாடுவதை இரு பாலாரின் நன்மையை கருதியே இஸ்லாம் தடுத்துள்ளது. இறைவன் வழங்கும் கட்டளைகள் எப்பாதுமே சரியாக வும், முழுமையாகவும், பரிசுத்தமாகவும், மனித இனத்துக்கு நன்மை பயக்கும் முறையிலும் இருப்பதில் எவ்வித சநதேகமு மில்லை. இந்த உண்மையை பற்றி அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّـهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ﴿٣٠﴾ وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّـهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿٣١﴾
“மேலும் (நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீறாக. ‘அவர்கள் தங்கள் பார்வை களை தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்ம ஸ்தானங்களை பேணிக் காத்துக் கொள்ளவும்.’ அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன். மேலும் (நபியே!) விசுவாசிக ளான பெண்குக்கு நீர் கூறுவீறாக. தங்கள் பார்வைகள் அவர்கள் தாழ்த்திக் கொள்ள வும். தங்கள் மர்ம ஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும். வெளியில் தெரியக் கூடியவை களை தவிர தங்கள் அழகை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்....” 24;30-31
நான் ஹிஜாபை அணியும் போது எனக்குள் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஹிஜாப் அணிவதன் மூலம் எனது உள்ளத்தில் பெரும் திருப்தியும் சொல்ல முடியாத ஆனந்தமும் எழுகிறது. நான் ஹிஜாப் அணியும் போது மற்றவர்கள் என்னுடன் நடந்துக் கொள்ளும் முறையில் பெரும் வித்தியாசத்தை காண்கிறேன். நான் கண்மூடித்தனமாக, குருட்டு நம்பிக்கையில் இஸ்லாத்தை ஏற்கவில்லை. என்னை யாரும் நிர்பந்திக்கவும் இல்லை. இந்த உண்மையை அல் குர்ஆன் அழகாக கூறுகிறது.
لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ
“மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி திட்டமாகத் தெளிவாகி விட்டது.” 2;256
நான் உறுதியான நம்பிக்கையுடன் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தேன். சமூகத்தின் யதார்த்த நிலையை நான் என் இரு கண்களாலும் கண்டேன். அந்த இருண்ட பாதையில் பயணம் செய்திருக்கிறேன், அனுபவித்தும் இருக்கிறேன். சீர்குழைந்த சமூகத்தின் இரு பக்கங்களையும் பார்த்திருக் கிறேன். சமூகத்தின் இருண்ட பக்கம் எப்படியிருக்கிறது என்பதை எனது சொந்த அனுபவத்தில் கண்டேன். அதனால் அவற்றை நன்கு அறிவேன். ஆகையால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள நான் எடுத்த முடிவு சரியானது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இஸ்லாம் பெண்களை அடக்கி வைக்க வில்லை. மாறாக அவர்ளுக்கு சுதந்திரமும் உரிமையும் வழங்கி, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கௌரவத்தையும் வழங்கியது. இதன் அடிப்டையில் அனைத்து மனித இனத்துக்கும் இறைவன் தேர்தெடுத்த மதம் இஸ்லாம் தான் என்து உறுதியாகிறது.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், மனிதனால் அமைக்கப் பட்ட அடிமைத் தனம் எனும் விலங்கிலிருந்தும், கட்டுப் பாட்டிலிருந்தும் உண்மையிலேயே விடுதலை பெறுகிறார்கள். மனிதனால் இயற்றப் பட்ட சட்ட திட்டங்கள், ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை அடக்கி யாள்வதற்கும், பெண் இனத்தை அடக்கி அவர்களை தகாத முறையில் பயன் படுத்தவும் நோக்கமாக கொண்டவையாகும். ஆனால் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட நோக்கம் இல்லை. மாறாக பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கி, அவர்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் உள்ளவர்கள் என்பதை இஸ்லாத்தில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்த அதிகாரம் வேறு எந்த மதமோ, சமூகமோ பெண்களுக்கு கொடுக்க வில்லை என்பது தான் உண்மை.
www.Tamil@islamhouse.com