சோதனைகள் தரும் படிப்பினைகள்
பிரிவுகள்
Full Description
சோதனைகள் தரும் படிப்பினைகள்
] Tamil – தமிழ் –[ تاميلي
M.S.M.இம்தியாஸ் யூசுப்
2015 - 1436
عبر من البلاء
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف
2015 - 1436
சோதனைகள் தரும் படிப்பினைகள்
எம்.எஸ். எம் இம்தியாஸ் யூசுப் ஸலபி
உலகில் பல நாடுகளிலம் ஏற்படடு வரும் பாரிய வெள்ளப் பெருக்கமும் மழைவீழ்ச்சியும் பூகம்பங்களும் சுனாமிகளும் மக்களை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது.
இலங்கைல் அண்மையில் தொடர்ந்து பெய்த சாதாரண மழை 15 நாட்களுக்கும் அதிகமாக தொடராகவே பெய்த காரணத்தால் அன்றாட வாழ்வை முடக்கச் செய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பாரிய அழிவை கொண்டு வந்தது.
ஆயிரக்கணக்கான ஏக்கர்களுடைய விவசாய நிலங்களும் பயிர்ச் செய்கைகளும் அழிந்து விட்டன. ஒரு கிராமமே மண்சரிவினால் அழிந்து போனது. 40 க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள். சிலர் காணாமல் போய் உள்ளனர். நூற்றுக்கணக்கான மக்களின் வீடுகள் சம்பூர்ணமாக அழிந்துள்ளன. ஆயிரக் கணக்கான வீடுகள் சேதமடைந் துள்ளன. கிழக்கில் ஏற்பட்ட இச்சோதனைகள் பலரையும் அச்சம் கொள்ளச் செய்தன.
கிழக்கிற்கு வெளியில் ஏற்பட்ட மண் சரிவுகளும் சேதங்களும் சகஜ வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கச் செய்துள்ளன. மழை, காற்று, கடும் குளிர், பனி மூட்டம் என்பன தொடர்ந்து வந்ததனால் மக்கள் மிகவும் நொந்து போனார் கள்.
இலங்கையில் ஏற்பட்ட இது போன்ற சோதனைகள் உலகளவில் பல நாடுகளிலும் ஏற்பட்டு வருகின்றன.
கடல் கொந்தளிப்பு
பனி மலை கரைந்து, கடலுடன் கலந்து விடுதல்
வெப்பம் அதிகரித்தல்.
காட்டுத் தீ பரவுதல்
பூகம்பம் ஏற்படல்
மண்சரிவு ஏற்படல் போன்றனவாகும்.
அவுஸ்திரேலியா, கனடா, பிலிபைன்ஸ், அமெரிக்கா, பிரேஸில், இந்தோனேசியா என பல நாடுகள் சரிந்து கொண்டிருக்கின்றன.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும், பூகம்பமும் 10,000க்கும் மேற்பட்டோர் இறந்து போனதுடன் இலட்சக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின் ஏற்பட்ட பாரிய அழிவுகளாகவே இவை கணிக்கப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்ட சுனாமியில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இவ்வாறு இந்தியா, இந்துனேசியா போன்ற நாடுகளில் இறப்பு வீதம் அதிகம் காணப்பட்டது.
இவ்வாறு ஏற்படும் அழிவுகளை “இயற்கை அனர்த்தம்” என வர்ணிக்கிறார்கள் இறை நம்பிக்கையற்றவர்கள். இந்த அனர்த்தங்களை தடுத்து நிறுத்த நவீன தொழில் நுட்பங்களால் முடியவில்லை. சுனாமி முன் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட கருவியால் எந்தப் பலனம் நடக்க வில்லை. பல் வேறுபட்ட தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அழிவுகளை தடுத்து நிறத்த முடியவில்லை.
அல்லாஹ்வை நம்பி வாழும் முஸ்லிம்கள் இந்த அழிவுகளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். இயற்கை அனர்த்தம் என்றா அல்லது அல்லாஹ்வின் சோதனைகள் என்றா? நிச்சயமாக அல்லாஹ்வின் சோதனைகள் என்றே இறை விசுவாசிகள் நம்ப வேண்டும்.
அல்லாஹ்வின் சோதனைகள் இரு வகைப்படும் என்பதை அல்குர்ஆனினூடாக அறிகிறோம்.
முதலாவது, மக்கள் பாவங்களிலும் அட்டூழியங் களிலும் அக்கிரமங்களிலும் மூழ்கும் போது அல்லாஹ் சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க விரும்புகிறான். இந்தத் தண்டனை பாவங்களில் உழன்று வாழ்பவர்களை திருத்துவதற்கும் மக்களுக்கு படிப்பினைக்குரியதுமாக ஆக்கு கிறான்.
இரண்டாவது, மக்களின் ஈமானை பரீட்சிப் பதற்கும் பலப்படுத்துவதற்குமுரிய சோதனை யாக ஆக்குகிறான். சுவனத்திற்குரிய கூலி யாகவும் ஆக்குகின்றான். மேலும் உலக வாழ்வை சோதனைக்குரிய வாழ்வாகவே அமைத்தும் இருக்கின்றான்.
முதலாவது சோதனைகளை பொறுத்த வரை, அவை மக்கள் பாவங்களிலும் இறை நிராகரிப்பிலும் மூழ்கும்போது ஏற்படுகின்றது.
وَمَا أَرْسَلْنَا فِي قَرْيَةٍ مِنْ نَبِيٍّ إِلَّا أَخَذْنَا أَهْلَهَا بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ الأعراف: 94
எந்த ஒரு கிராமத்திற்கு நாம் நபியை அனுப்பினாலும் அதிலுள்ளவர்கள் அடிபணியும் பொருட்டு அவர்களை வறுமையாலும் துன்பத் தாலும் நாம் பிடிக்காது விட்டதில்லை. (7:94)
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّيِّئَةِ الْحَسَنَةَ حَتَّى عَفَوْا وَقَالُوا قَدْ مَسَّ آبَاءَنَا الضَّرَّاءُ وَالسَّرَّاءُ فَأَخَذْنَاهُمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
பின்னர் கெட்டதின் இடத்திற்கு நல்லதை நாம் மாற்றினோம். அவர்கள் (செழித்து பல்கி) பெருகிய போது எங்கள் மூதாதையர்களுக்கும் துன்பமும், இன்பமும் ஏற்பட்டன என (தண்டனையை மறந்து) கூறினர். எனவே அவர்கள் உணராத விதத்தில் திடீரென நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். (7:95)
அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து இறை விசுவாசத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்ற அடிப்படைச் செய்தி இந்த உம்மத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. அச்செய்திக்கேற்ப அவர்கள் வாழாத போது தண்டனைகள் பல வழிகளிலும் வந்து சேரும்.
இத்தண்டனையிலிருந்து படிப்பினை பெற்று திருந்தி வாழ்வதற்காகவும் இன்பங்களை அனுபவித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாழ்வதற்காகவும் சந்தர்ப்பங்கள் வழங்கப் படுகிறன. அதிலிருந்து படிப்பினை பெற வேண்டும். இல்லையேல் திடீரென சோதனை களும் தண்டனைகளும் நினைத்துப் பார்க்க முடியாதளவு வந்து சேரும் என்பதை அல்லாஹ் விளக்கப் படுத்துகிறான்.
மழை, வெள்ளம், கடல் கொந்தளிப்பு, பூகம்பம், மண்சரிவு என்று பல சோதனைகளை ஏற்கனவே அனுபவித்து விட்டு நிம்மதியை உணர்ந்தார்கள் மக்கள். ஆனால் சோதனை களால் ஏற்பட்ட இழப்புகளையும் வேதனை களையும் நாளடைவில் மறந்து விட்டு மீண்டும் பாவங்களில் மூழ்கிவிடுகிறார்கள்.
சுனாமி என்கிற பயங்கரமான கடல் கொந்தளிப்பை கண்ணால் கண்டு பல அழிவு களை நேரில் பார்த்து சொந்த பந்தங்களையும் சொத்துப் பத்துக்களையும் இழந்து விட்டு துயரத்திற்குள்ளான மக்களுக்கு, அமைதியாக வும் மன நிம்மதியுடனும் வாழும் சூழலை அல்லாஹ் ஏற்படுத்தினான்.
சுனாமியின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, அதிசயத் தக்க வகையில் வாழும் வளமான வாழ்வை அல்லாஹ் ஏற்படுத்தினான். இழந்த பாதிப்புகளுக்குப் பதிலாக அனுபவிக்கும் நன்மைகளை அள்ளிக் கொடுத்தான். இத்தனை நன்மைகளை கண்ட பின்பும் மக்கள் சோதனைகளை மறந்து, தண்டனைகளை மறந்து, அலட்சியத்துடன் வாழும் போது மீண்டும் பெரும் மழை வெள்ளம் என்கிற சோதனைகளை கொடுத்துள்ளான்.
மேலே கூறிய வசனங்கள் நாம் சந்தித்த சோதனைகளை அப்படியே எடுத்துக் காட்டுவ தாக உள்ளன. சுனாமி மற்றும் வெள்ளம், சூறாவளி போன்ற சோதனைகள் இன்று பெரும் பாலானவர்களுக்கு பழங்கதைகளாக மாறிப் போயுள்ளன. முன்பு ஒரு காலத்தில் இப்படியான சோதனைகள் வந்தன. மக்கள் இப்படி இப்படி யெல்லாம் அவஸ்தைகளுக்கு உள்ளானார்கள். எங்களுடைய பாட்டன், பாட்டி இப்படி யெல்லாம் அனுபவித்ததாகக் கூறியுள்ளார்கள் என்று “இராக் கதைகளாக” பேசப் படுகின்றன.
தண்டனைகளை “கதாபாத்திரங்களாக” சித்தரிக் கப்படுவதற்கு அல்லாஹ் தருவதில்லை. மாறாக நடந்து முடிந்த சோதனைகளிலிருந்து படிப்பினை பெற்று பாவங்கள் மற்றும் இறை நிராகரிப்பிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழவே வாய்ப்பு தருகிறான்.
அல்லாஹ்வின் சோதனைகள் வெறும் கதைகளாக்கப் பட்டு இன்பத்தில் மூழ்கி விடும் நிலை எப்போது ஏற்படு கிறதோ அப்போது அம்மக்கள் உணராத விதத்தில் தண்டனை களை அல்லாஹ் அனுப்பி விடுகிறான்.
எனவே, மழை, வெள்ளம், மண்சரிவு, கடும் வறட்சி என்பனவெல்லாம் இயற்கையின் சீற்றம் என ஒரு முஸ்லிம் ஒரு போதும் நம்ப மாட்டான்.
அதற்கடுத்ததாக இன்னுமொரு செய்தியை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்:
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ
நிச்சயமாக இக்கிராமங்களில் உள்ளவர்கள் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடந்தால் அவர்களுக்கு வானம் மற்றும் பூமியிலிருந்து (பரகத்துகளை) பாக்கியங்களை திறந்து விடுவோம்.... (7:96)
அல்லாஹ்வை முழுமையாக விசுவாசம் கொண்டு இறையச்சத்துடன் (தக்வாவுடன்) வாழும் போது வானம், பூமியின் (பரகத்துடைய) அருள் வாசல்கள் திறந்து விடப் பட்டு பாக்கியங்களுடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதாக அல்லாஹ் உறுதியளிக்கி றான். அல்லாஹ் வின் வாக்குறுதி ஒருபோதும் பொய்யாவ தில்லை.
அல்லாஹ்வின் அருள்களுக்கு நன்றி கெட்ட தனமாக நடந்து பாவங்களில் மூழ்கி விடும் போது தண்டனைகள் சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கின்றன.
وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ
பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருந்த ஒரு கிராமத்தை அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். அக்கிராமத்திற்கான ஆகாரம் எல்லா இடங்களி லிருந்தும் தாராளமாக அதனிடம் வந்து கொண்டிருந்தது. பின்னர் அது அல்லாஹ்வின் அருட் கொடைகளை நிராகரித்தது. எனவே அக் கிராமத்தவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அல்லாஹ் பசி மற்றும் பயம் எனும் ஆடையைச் சுவைக்கச் செய்தான். (16:112)
அல்லாஹ் கூறும் உதாரணம் மிகவும் படிப்பினைக் குரியதாகும். அல்லாஹ்வின் எல்லா வகையான இன்பங்களை முழுமையாக அனுபவித்துக் கொண்டு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள். யாரிட மிருந்து எந்த அச்சுறுத்தல்களும் இன்றி பசி பட்டினியின்றி செல்வங்களையும் அனுபவித் துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அல்லாஹ் வழங்கிய இந்த (நிஃமத்களுக்கு) அருளுக்கு நன்றி கூறி அவனுக்கு முற்றிலும் அடிபணியாது வாழும் போது அல்லாஹ் அவர்களை சோதித்து விடுகிறான்.
இன்பத்தையும் சொகுசு வாழ்க்கையையும் கண்டு பழகியவர்களுக்கு வறுமையும் பயத்தை யும் அல்லாஹ் ஏற்படுத்தி விடுகிறான். இது சாதாரண சோதனையல்ல. இந்த சோதனை அவர்களை எல்லா வழிகளிலும் அச்சுறுத்தல் தரக்கூடியதாக இருக்கும்.
பசி, பட்டினி மற்றும் வறுமைக்கு வழி காண முடியாத பயத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடுகிறது. உடல் அங்கங்களை மறைக்க ஆடை அணிவது போல் வறுமை யும் பயமும் ஆடையாக மாறுகின்ற நிலை மாறிவிடுகிறது. எந்த நேரத்தில் எந்த ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் நாளா பக்கமும் சூழ்கின்ற அவல நிலைக்கு மாறிவிடுகிறது. இத்தண்டனையை சுவைத்துப் பார்க்கவே அல்லாஹ் ஏற்படுத்து வதாக எச்சரிக்கிறான்.
உணவை சுவைத்துப் பார்ப்பது போல் அல்லாஹ்வின் தண்டனையை மனிதனால் சுவைக்க முடியாது. அவ்வளவு பயங்கரமான தாக அது இருக்கும். பாவங்களை விட்டும் ஒதுங்கி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி நன்மையின் பால் விரைகின்ற போதே அருள் மழை கிடைக்கின்றது.
காற்று, மழை போன்றவற்றினால் ஏற்படும் சோதனை களைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை ஹதீஸ்களில் படிக்கிறோம்.
صحيح البخاري (2ஃ 32)
عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى المَطَرَ، قَالَ: «اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا»
நுபி (ஸல்) அவர்கள் மழையைக் கண்டால் “யா அல்லாஹ்! பலனுள்ள மழையையைத் தருவாயாக” எனக் கூறுவார்கள்
ஆறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) (நூல்:புகாரி)
முழையினால் நன்மை ஏற்பட வேண்டும் தீங்கு எற்பட்டு விடக் கூடாது நபி(ஸல்) அவர்கள் கேட்கக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.
மழை தொடராக பெய்யும்போது
اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
“யா அல்லாஹ்! எங்களைச் சுற்றியுள்ள இடங்களுக்கு மழையை அனுப்பிவிடு. மரங்கள் முளைக்கும் இடங்களிலும் ஓடைகளிலும் மணற் குன்றுகளிலும் மழையை பெய்யச் செய். எங்களுக்குப் பாதகமாக மழையை ஆக்கி விடாதே” என பிரார்த்திப்பார்கள். (நூல்: புகாரி).
எனவே இந்த அம்சங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கு அல்லது இயற்கை அழிவு என்று சொல்லப் படக் கூடிய சோதனைகளி லிருந்து படிப்பினை பெற்று அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி நல்லமல்கள் புரிந்து நாம் வாழும் வீட்டையும் கிராமத்தையும் தக்வாவுள்ள இடமாக மாற்றியமைப் போமாக.
இரண்டாவது சோதனையை பெறுத்தவரை இறை நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் மறுமைக்கானவெற்றியாகவும் அமைந்துள்ளது.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங் கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர் களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக. அவர்கள் யாரெனில், தமக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்போது “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நாம் அவனிடமே திரும்பச் செல்பவர்கள் என்று கூறுவார்கள்.
அத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிட மிருந்து அருள்களும் கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்றவர்கள். (2: 155-157)
நிச்சயமாக மனிதன் அல்லாஹ்வின் சோதனைக ளுக்கு ஆளாகுபவனாக இருக்கிறான் என்ற செய்தியை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சோதனைகளைத் தாண்டாமல் மனிதன் வாழ முடியாது. சோதனைகள் அவனை பண் படுத்துகிறது. பக்குவப்படுத்துகிறது. அவனது வாழ்வின் யதார்த்தத்தை புரியவைக்கிறது. அவன் அடைய வேண்டிய இலக்கை காட்டிக் கொடுக்கிறது.
ஒரு இறை விசுவாசியை பொறுத்த வரையில் துன்பங்களைக் கண்டு துவண்டு விட மாட்டான். சோதனைகளுக்கு அஞ்சி அழுது புலம்ப மாட்டான். அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தவனாக பொறுமை காப்பான்.
வாழ்வின் யதார்த்தத்தை புரிய வைத்து வறுமை-செழிப்பு என்கிற சமநிலையில் வாழ வைக்கும் சக்கரத்தை அவ்வாஹ் சுழற்றுகிறான். பலர் இந்த யதார்த்தத்தை புரியாமல் இயல்பு வாழ்வை அறியாமல் சோதனைகளின் போது தங்களையே மாய்த்துக் கொள்கிறார்கள். நொந்து கொள்கிறார்கள். மற்றும் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களை பொறுத்த வரை இன்பத்தை மட்டுமே ருசிக்க விரும்புகிறார் கள். துன்பத்தையும் தோல்வியையும் ஏற்க மறுக்கிறார்கள். “சமநிலை வாழ்வை” அறியாததே இதற்குக்காரணம்
அல்லாஹ் மனிதர்களுக்கு துன்பத்தைக் கொடுத்து அதனூடாக பெற்றுக் கொள்ளும் பாடத்தையும் படிப்பினையாகக் கொடுக்கின் றான். அத்துன்பத்திலிருந்து மீள்கின்ற வழிகளை யும் காண்பிக்கிறான். மனதை அலை பாய விடாமல் அமைதிப்படுத்தும் பயிற்சியையும் கொடுக் கிறான்.
“இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று சொல்லும் வார்த்தையை கற்றுத் தந்துள்ளான். அடிக்கடி உச்சரிக்கப்படும் இவ்வார்த்தையால் மனம் சாந்தி பெற்று நிம்மதி மூச்சை சுவாசிக்கச் செய்கிறது.
“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம், அவரது காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை உட்பட அனைத்தின் மூலமும் அவரது பாவங் களை அல்லாஹ் அழித்து விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)
இறை விசுவாசிகளுக்கான சோதனைகள், அவர்களது பாவங்கள் அழிக்கப் படுவதற்கான வாய்ப்பாகவும் உறுதி யான பொறுமைக்குரிய வழியாகவும் ஈமானை பலப் படுத்து வதற்கான செயற்பாடாகவும் அமைந்து விடுகிறன.
சோதனைகள், இழப்புகள், நெருக்கீடுகள் மற்றும் வாழ்வில் ஏற்படும் இடைவெளிகளின் போது கையாளவேண்டிய அணுகு முறையை அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் இதன் மூலம் காட்டித் தந்துள்ளார்கள். துன்பங்களை சந்தித்தே ஆக வேண்டும். சோதனைகளை எதிர்கொண்டே வாழ வேண்டும். இதுவே வாழ்வின் யதார்த்தம், இந்த யதார்தத்தை குர்ஆன் உறுதியாகவே விசுவாசிகளுக்கு போதிக்கிறது.
எனவே ஒரு முஸ்லிம் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்து ஆன்மீகத்துடன் இணையும் போது அவனது வாழ்வு வெற்றி பெறுகிறது, ஈமான் பலம் பெறுகிறது என்பதைப் புரிந்து வாழ்வோமாக!
உங்கள் கருத்துக்களை அறிவிக்க;
tamil@muslimhouse.com