மக்கள் பாவங்கள், அட்டூழியங்கள், அக்கிரமங்களில் மூழ்கும் போது அல்லாஹ் அவர்களை சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க நாடுகிறான். இதன் மூலம் பாவங்களில் உழன்று வாழ்பவர்களை திருத்தி படிப்பினை கொடுக்க நாடுகிறான்.
சோதனைகள் தரும் படிப்பினைகள் - (தமிழ்)
இஸ்லாத்தில் பாதுகாப்பை கண்டேன் - (தமிழ்)
இருண்ட பாதையில் பயணம் செய்திருக்கிறேன், அனுபவித்தும் இருக்கிறேன். சீர்குழைந்த சமூகத்தின் இரு பக்கங்களையும் எனது சொந்த அனுபவத்தில் கண்டேன். சமூகத்தின் இருண்ட பக்கம் எப்படியிருக்கிறது என்பதை நன்கு அறிவேன். ஆகையால் தெளிவோடு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தேன்.
விசுவாசிகளின் அன்னையர் - (தமிழ்)
விசுவாசிகளின் அன்னையர் பற்றிய சிறப்புக்கள் மற்றும் அவர்கள் பற்றிய இறைவசனங்களும் நபிமொழிகளும் .
சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம் - (தமிழ்)
முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.
உலகின் அற்ப இன்பங்களை அடைந்து கொள்வதற்காக ஒருவருக்கொருவர் பேராசைக் கொண்டு போட்டிப் போட்டுக் கொள்வதால், பொறாமை உணர்வு வளர ஆரம்பிக்கின்றது. இதனால் வெறுப்புணர்வு தூண்டப்பட்டு சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கின்றன. இதன் விளைவால் அழிவும், நாசமும் ஏற்படுமே தவிர எந்த வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ மக்கள் அடைந்து கொள்ள முடியாது.
1 லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு கொடுத்த உபதேசம் காலத்தின் வரம்பை தாண்டி என்றென்றும் எல்லா பெற்றோருக்கும் பயன் தரக்கூடியதாகும். 3 லுக்மான் (ரஹ்) அவர்களும் “எனது பார்வயை தாழ்த்தி, நாவை கவனமாக பாதுகாத்து, ஹலாலானவைகளை மாத்திரம் சாப்பிட்டு, எனது கற்பை பாதுகாத்து, கொடுத்த வாக்குறுதிளை நிறைவேற்றி, எனது பொறுப்புகளை சரிவர செய்து, விருந்தாளிகளுக்கு சங்கை செய்து, அண்டை அயலவர்களுக்கு மரியாதை செய்து, எனக்கு சம்பந்தமற்றவைகளில் இருந்து நீங்கி எனது....
எமக்கு அருளப்பட்ட மாபெரும் கிருபை அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாம் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் எத்தனை பேர்? அல்லாஹ்வுக்கு அதற்கான நன்றிக் கடனை செலுத்துவது எப்படி?
அதிகாரிகளுக்கோர் அறிவுரை - (தமிழ்)
உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அப்பாஸிய சாம்ராஜ்யத்தின் கலீபாக்களில் ஒருவர் ஆவார். இவர் ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவரிடம், மேலும் தனது அரசை நெறிப்படுத்துவதற்காக நேர்மையான ஆட்சித் தலைவரின் பண்புகளை வினவினார். அக்கடிதத்தின் தமிழ் வடிவம் பின்வருமாறு அமைந்துள்ளது:
பொதுவாக நல்ல காரியங்கள் என உறுதியாக தெளிவான விடயங்களை தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் இஸ்லாம், சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப் படுவதை தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப் பிடித்து சாணக்கியத்துடன் காரியமாற்றுவதை வலியுறுத்துகிறது.
யார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்? - (தமிழ்)
ஹூதி இயக்கம் தோற்றம் பெற்றது முதல் “ஷீஆ” சிந்தனையை பிரதான கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என யெமன் அரசை இவர்கள் கோரி வந்தனர். இதனை யெமன் அரசு மறுத்து வந்தது. இதுவே இவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எதிர் காலத்தில் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது எனலாம்.
இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும் - (தமிழ்)
ஆலோசனை பெறுவது என்ற விடயம் மனித வாழ்வில் சாதாரணமான ஒன்றாகும். ஒருவரது அறிவு, அனுபவம் என்பன வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான கருமத்தில் முடிவெடுக்கு முன்னர் அல்லது ஈடுபடு முன்னர் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது அக்காரியம் ஏறத்தாழ முழுமையடையும் என்பதுடன் பல தவறுகளைத் தவிர்க்க முடியும்
மறுமையில் உலக பிரபலங்களின் நிலை - (தமிழ்)
இறைவனின் திருப்தியை மாத்திரம் நோக்காகக் கொண்டு தமது காரியங்களையும் அமைத்துக் கொள்ளும் இறை நேசர்கள் இருக்கின்றனர். எந்த அற்ப காரியமானாலும் அதனை பிறருக்கு காட்ட வேண்டும், அவர்கள் அதனை புகழ வேண்டும் என எதிர்பார்க்கும் புகழ் விரும்பிகளும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். தனக்காக எந்த அற்ப காரியத்தை செய்தாலும் அதற்காக அபரிமிதமான அருட் கொடைகளையும், நன்மைகளையும் இறைவன் வழங்குகின்றான். ஆனால் புகழுக்காக அல்லது உலகின் அற்ப பொருளுக்காக எந்த நல்லறத்தை....

API
