றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்
மொழிபெயர்க்கப்பட்ட விடயங்கள்
பிரிவுகள்
மூலாதாரங்கள்
Full Description
றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும்
தலைப்பு
زواج المتعة والرد على من يبيحه من الروافض
< தமிழ் -تاميلية >
எழுத்தாசிரியர்
அஷ் ஷெய்க் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்
اسم المؤلف
الشيخ محمد صالح المنجد
மொழிபெயர்த்தவர்
A.J.M.மக்தூம்
மீளாய்வு செய்தவர்
நிஷாத் நகீப் /முஹம்மத் அமீன்
ترجمة:
محمد مخدوم عبد الجبار
مراجعة:
نشاد نقيب/ محمد أمين
றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும், அதற்கான மறுப்பும்
கேள்வி :
இஸ்லாத்தில் தற்காலிக திருமணம் என்ற பிரயோகம் உள்ளதா?
எனது நண்பர் ஒருவர், பேராசிரியர் அபுல் காசிம் ஜோர்ஜி எழுதியுள்ள நூல் ஒன்றை வாசித்துள்ளார். அதில் நூலாசிரியர் இஸ்லாத்தில் தவணை முறைத் திருமணம் (முத்ஆ) அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் தாக்கம் பெற்ற நண்பர் என்னிடம், ஒரு பெண்ணை நீ விரும்பினால் சிறிது காலத்துக்கு அவளை திருமணம் முடித்திக் கொள்வதில் தவறில்லை, இதுவே இஸ்லாம் கூறும் தவணை முறை திருமணம் (முத்ஆ) என விளக்கம் கூறினார்.
இவ்வாறு இஸ்லாம் அனுமதிப்பதாக தெரிவிக்கப் படும் “முத்ஆ" எனப் படும் தவணை முறை திருமணம் தொடர்ப்பில் தெளிவு படுத்த முடியுமா? எந்த மத்ஹப் இக் கருத்தை ஆதரிக்கின்றது ? அல் குர்ஆன் , சுன்னாவில் இருந்து இதற்கான ஆதாரங்களை தெளிவாக எடுத்துக் கூறுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில் :
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் சொந்தம் ,
“முத்ஆ" அல்லது தவணை முறைத் திருமணம் என்பது, ஒருவர் ஒரு பெண்ணை குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கி, குறிப்பிட்ட கால வரையறையிட்டு திருமணம் முடிப்பதாகும்.
பொதுவாக திருமணம் என்பது திருமணம் முடிக்கும் பெண்ணுடன் நிரந்தரமாக வாழ்வதனையே குறிக்கும்.
“முத்ஆ" எனப் படும் தவணை முறை திருமணம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் பின்னர் அச் சட்டம் நீக்கப் பட்டதுடன், மறுமை நாள் வரை அந்த சட்டம் நிரந்தரமாவே தடைசெய்யப்பட்டது.
عن علي رضي الله عنه : " أن رسول الله صلى الله وسلم نهى عن نكاح المتعة وعن لحوم الحمر الأهلية زمن خيبر ." وفي رواية : " نهى عن متعة النساء يوم خيبر وعن لحوم الحمر الإنسية ."رواه البخاري ( 3979 ) ومسلم ( 1407 ) .
கைபர் போர் இடம் பெற்ற காலப் பகுதியில், இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் “முத்ஆ" எனப் படும் தவணை முறை திருமணத்தையும், கழுதை இறைச்சி உண்ணுவதையும் எமக்கு தடை செய்தார்கள் என அலி (ரழி எல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் புகாரி (3979) , முஸ்லிம் (1407).
இன்னுமொரு ரிவாயத்தில், கைபர் போர் இடம் பெற்ற நாளில், இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் “முத்ஆ" எனப் படும் தவணை முறைத் திருமணத்தையும், கழுதை இறைச்சி உண்ணுவதையும் எமக்கு தடை செய்தார்கள் என அலி (ரழி அல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள் என வந்திருக்கின்றது.
عن الربيع بن سبرة الجهني أن أباه حدثه أنه كان مع رسول الله صلى الله عليه وسلم فقال : " يا أيها الناس إني قد كنت أذنت لكم في الاستمتاع من النساء وإن الله قد حرم ذلك إلى يوم القيامة فمن كان عنده منهن شيء فليخل سبيله ولا تأخذوا مما آتيتموهن شيئاً " .
رواه مسلم ( 1406 ) .
அர்-ரபீஃ பின் சப்ரா அல் ஜூஹனி பின்வருமாறு அறிவித்தார், எனது தந்தை சப்ரா பின் மஅபத் அல் ஜுஹனீ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
நான் (மக்கா வெற்றியின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் "முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி அளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத் திருமணத்திற்கு மறுமை நாள் வரைத் தடை விதித்து விட்டான். எனவே, "முத்ஆ" திருமணம் செய்த பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அவளை அவளது வழியில் விட்டு விடட்டும். அவளுக்கு நீங்கள் (மஹர் / மணக் கொடையாகக்) கொடுத்திருந்த எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ள வேண்டாம்" எனக் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 1406)
இறைவன் திருமணத்தை நமக்கு சிந்திப்பதற்க்காகவும், உணர்வு பெறத் தூண்டும் அவனது அத்தாட்சிகளில் ஒன்றாக அமைத்துள்ளான். திருமணத்தின் மூலம் கணவன், மனைவி மத்தியில் அன்பையும், அருளையும் ஏற்படுத்தினான். மனைவியினை கணவன் அமைதி பெரும் இடமாகவும் ஆக்கினான். திருமணத்தின் மூலம் அதிக குழந்தைச் செல்வங்ளை பெற்றெடுக்கும் படியும் கட்டளை இட்டிருக்கின்றான். மனைவிக்கு செலவு செய்யும் பொறுப்பை கணவன் மீது சுமத்தியதுடன், அவளுக்கு வாரிசு உரிமையையும் சட்டமாக்கினான். இது இப்படி இருக்க தடை செய்யப் பட்டுள்ள தவணை முறைத் திருமணத்தில் இவற்றை காண முடியாது.
ஷீஆக்கள் (றாபிழாக்கள்) அனுமதிக்கும் தவணை முறைத் திருமணம் மூலம் மணக்கப்படும் பெண் மனைவியாகவோ, வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணாகவோ கருதப்பட மாட்டாள். இறைவன் தனது அருள் மறையில் பின் வருமாறு குறிப்பிடுகிறான்.
} والذين هم لفروجهم حافظون . إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين } المؤمنين / 5 – 7 .
இன்னும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வதைக் கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப் பட மாட்டார்கள். (அல் குர்ஆன் , 23 : 5,6)
ஏற்றுக் கொள்ள முடியாத ஆதாரங்களை அடிப்படையாக் கொண்டே றாபிழாக்கள் தவணை முறைத் திருமணத்தை (முத்ஆ) அனுமதித்து இருக்கின்றார்கள் என்பதனை கீழ்வருகின்ற ஆதாரங்களின் மூலம் நோக்கலாம். அவையாவன :
1- பின் வரும் இறை வசனத்தில் :
{ فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة } النساء / 24 .
இன்னும் (போரில் பிடி பட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மண முடிப்பது விலக்கப் பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, ஏனைய பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப் பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப் பட்ட மஹர்) தொகையைக் கடமையான கூலியாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை (க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (அல் குர்ஆன் , 4 : 24)
(பமஸ்ததஃதும் பிஹி) “பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால்" எனும் சொற்களுக்கு “முத்ஆ" (தவணை முறைத் திருமணம்) என அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
இது தவறான கருத்தாகும். ஏனெனில் இறைவன் இந்த குர்ஆன் வசனத்தின் ஆரம்பத்தில் திருமணம் முடிக்கத் தடை செய்யப் பட்டுள்ள பெண்கள் பற்றி குறிப்பிட்டு விட்டு , திருமணம் முடிக்க அனுமதிக்கப் பட்டுள்ள பெண்கள் பற்றியும் குறிப்பிடுகிறான். அவ்வாறு மணக்கப் படும் பெண்களுக்கு விதிக்கப் படும் மஹர் தொகையை வழங்குமாறும் பணித்துள்ளான்.
அவ்வாறான திருமணத்தின் மூலம் அனுபவிக்கும் இன்பத்தையே “பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால்" என இறைவன் வர்ணித்திருக்கின்றான்.
இந்த ஆயத்தைப் போன்றே பின்வரும் ஹதீஸும் அமைந்திருக்கின்றது.
أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : " المرأة كالضِّلَع إن أقمتَها كسرتَها ، وإن استمتعتَ بها استمتعتَ بها وفيها عوج " رواه البخاري ( 4889 ) ومسلم ( 1468. (
பெண்கள் வளைந்த விழா எலும்பைப் போன்றவர்கள், அதனை நீர் நேர் படுத்த முனைந்தால் உடைத்து விடுவீர்கள். அவர்களிடம் சுகம் அனுபவித்தாலும் அவர்களில் வளைவு உள்ள நிலையிலேயே நீங்கள் சுகம் அனுபவிப்பீர்கள் என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம், புகாரி 4889, முஸ்லிம் 1468)
அதே போல் விதிக்கப் பட்ட மஹர் தொகைக்கே இறைவனின் கூலி (அஜ்ர்) என கீழ்வரும் ஆயத்தும் கூறுகின்றது. (ஷீஆக்கள் கூறுவது போன்று) முத்ஆ எனப் படும் தவணை முறைத் திருமண பந்தத்தில் நுழைபவர் வழங்கும் கூலிப் பணத்தை இங்கே குறிப்பிட வில்லை.
பின் வரும் ஆயத்திலும் மஹருக்கு அஜ்ர் என்ற வார்த்தையே பயன் படுத்தப் பட்டுள்ளது.
} يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن } ،
நபியே! யாருக்கு நீர் அவர்களுடைய மஹரை (அஜ்ரை) கொடுத்து விட்டீரோ அம் மனைவியரை நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; (அல் குர்ஆன் , 33 : 50)
எனவே அவர்கள் ஆதாரமாக காட்டும் அந்த ஆயத்தில் முத்ஆ எனப் படும் தவணை முறைத் திருமணம் ஹலால் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது.
ஒரு வாதத்துக்காக அவர்கள் கூறுவது போன்று முத்ஆ எனப் படும் தவணை முறைத் திருமணம் தான் என இவ் ஆயத்தில் மறைமுகமாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளதாக ஏற்றுக் கொண்டாலும், கியாமத் நாள் வரை முத்ஆ ஹராம் ஆக்கப் பட்டுள்ளதை உறுதிப் படுத்தும் ஆதர பூர்வமான ஹதீஸ்கள் மூலம் அச் சட்டம் நீக்கப் பட்டு விட்டது என்று கூறலாம்.
2- இப்னு அப்பாஸ் (ரழி யல்லா ஹு அன்ஹு) உட்பட சில சஹாபாக்கள் தவணை முறைத் திருமணத்தை அனுமதித்தமை.
றாபிழாக்கள் சஹாபாக்களை காபிர்களாக கருதுகின்ற போதிலும் இது போன்ற பல்வேறு சந்தர்பங்களில் அவர்களின் மனோ இச்சைக்கு ஏற்ப சஹாபாக்களின் கூற்றை ஆதாரமாக கொள்வது ஆச்சரியமானதாகும்.
தவணை முறைத் திருமணம் ஹராமாக்கப் பட்ட செய்தி அவர்களிடம் வந்தடையாமையே சில சஹாபாக்கள் அதனை அனுமதித்தமைக்கான காரணமாகும். அலி பின் அபூ தாலிப், அப்துல்லாஹ் பின் சுபைர் (ரழி யல்லா ஹு அன்ஹுமா) உள்ளிட்ட சில சஹாபாக்கள் இப்னு அப்பாஸ் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் முத்ஆ ஹலால் என குறிப்பிட்டுள்ளமைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
عن علي أنه سمع ابن عباس يليِّن في متعة النساء فقال : مهلا يا ابن عباس فإن رسول الله صلى الله عليه وسلم نهى عنها يوم خيبر وعن لحوم الحمر الإنسية .رواه مسلم ( 1407 ) .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் தொடர்பாக நெகிழ்ச்சியான தீர்ப்பு வழங்குவதைச் செவியுற்ற (என் தந்தை) அலீ (ரலி) அவர்கள், "இப்னு அப்பாஸே! நிதானத்தை கடைப்பிடியுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் போர் தினத்தில் அதற்கும் ("அல்முத்ஆ"), நாட்டுக் கழுதையின் இறைச்சியை உண்பதற்கும் தடை விதித்து விட்டார்கள்" என்றார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 1407)