நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை அடைந்து விட்டது. எனவே ராமலானின் ஒழுங்கு மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு சுருக்கமான கையேட்டை இங்கு முன்வைக்கிறேன்.
நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் - (தமிழ்)
இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமா கும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.
படைப்பினங்களில் மிகவும் சிறந்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தோழர்களை விமர்சிப்பது, குறை கூறுவது, வெறுப்பது என்பன மிகப் பெரும் ஏமாற்றத்தையும், தோல்வியையும் ஏற்படுத்தி, இறையருளை விட்டும் தூர தள்ளி விடும் குற்ற செயலாக விளங்குகிறது
பத்ர் யுத்தத்தின் பின்னணியும் யுத்தத்தின் விளைவுகளும்.. ரமதானில் நடைபெற்ற பத்ர் யுத்தத்தில் அல்லாஹ் அருளிய உதவியின் பிரதிபலனாக இஸ்லாம் உலகெங்கும் பரவியது.
லைலத்துல் கத்ர் ஒரு நோக்கு - (தமிழ்)
1.இந்த இரவு ரமழான் மாத்தில்தான் தோன்றுகின்றது. 2.லைலத்துல் கத்ர் என்றால் புனித இரவு என்று பொருள் படும். இவ்விரவின் சிறப்புக்கு அல் குர்ஆனும் ஹதீஸ் களும் சாட்சி பகர்கின்றன. 3. லைலதுல் கத்ர் என்ற புனித இரவுக்கென்று தனிப்பட்ட விஷேசமான துஆக்கள் எதுவும் இல்லை
ஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம் - (தமிழ்)
பெருநாள் தினத்தின் உணவுக்குத் தேவையான ஆகாரத்தை விட மேலதிக வசதி உள்ளவர்களின் மீது இது கடமையாகும். தன்னுடைய பராமரிப்பின் கீழுள்ள சகலரின் ஸகாதுல் பித்ராவையும் நிறைவேற்றுவது, அவர்களின் பராமரிப்பாளனின் மீது கடமையாகும். இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.
நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவு ரமழானின் இறுதிப் பத்தின் உள்ளன. நபியவர்கள் இக்கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். ஸகாதுல் பித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) பெருநாள் தொழுகை
முஸ்லிம்கள் பரீட்சிக்கப் படுகிறார்களா? நாம் வரம்பு மீறி வாழும் போது அல்லாஹ் எமக்கு தண்டனையாக சோதனைகளை அனுப்புவான். நாம் பொறுமையுடன் சோதனைகளை சகித்து கொண்டால் எமது பாவங்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், சுவர்க்கத்தில் எமது நிலையை உயர்த்தவும் இவை காரணங்களாக இருக்கவும் கூடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.
நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் இஸ்லாமிய அடிப்படையில் அதற்கான தீர்வுகளும் - ஜும்ஆ குத்பா - (தமிழ்)
உலகமெங்களும் முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். இவற்றுக்கு முக்கியமான காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையும், முஸ்லிம்களின் பிளவை காபிர்களுக்கு காட்டிக் கொடுக்கும் முஸ்லிம்களும், அவற்றுக்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகளும்
மரணத்தின் பின்? - (தமிழ்)
புதைகுழி தான் மறு உலகின் தங்குமிடங்களில் முதலாவது தங்குமிடம். எனவே அது அவனின் நரகப் படுகுழியாகவோ, சுவர்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகவோதான் இருக்கும். மலக்குகள் வருவார்கள். உயிர் கைப்பற்றப்படவுள்ள மனிதன் நல்லவராக இருப்பின் மலக்குகள் அவனின் ஆத்மாவிடம், நல்ல உடலில் இருந்த நல்லாத்மாவே! வெளியேறுவாயாக. புகழுடன் வெளியேறுவாயாக. நீ மகிழ்ச்சியாக இரு. உணக்கு மகிழ்ச்சியும், நல் வாழ்வும் உண்டு. கோபம் எதுவுமின்றி பூரண திருப்தியுடன் எத்தனையோ பேர் உன் வருகையை....
ஹஜ், உம்ரா செயல் விளக்கம் - (தமிழ்)
1. ஹஜ் உம்ரா செய்யும் முலைகள், ஹஜ்ஜின் வகைகள், இஹ்ராம், மீகாத் நிலைகள், தல்பியா,தவாப், ஸஈ செய்தல், தலை முடியை வெட்டல். 2. ஹஜ்ஜின் கடமைகள், 8ம், 9ம், 10 நாட்கள்செய்ய வேண்டிய கடமைகள். 3. உம்ராவின் வாஜிபாத் கடமைகள், ஹஜ் உம்ராவின் சுன்னத்துகள், இஹ்ராத்தில் தடுக்கப்பட்டவைகள, இஹ்ராத்தில் தடையானவற்றை செய்தால் அவற்றுக்கு பரிகாரம் என்பன.
நேர்ச்சை - (தமிழ்)
மனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் நேர்ச்சை ஆகும். இது அடியானுக்கு எந்த ஒரு நன்மையையும் கொண்டு வராது, அதற்கு கலா கத்ரை மாற்றும் சக்தியும் இல்லை. நாம் நேர்ச்சை வைத்தோமோ இல்லையோ அல்லாஹ் தான் நாடியதை செய்வான். அல்லாஹ் அவனது படைப்புக்களில் எந்தத் தேவையும் அற்றவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் செய்த நேர்ச்சையை நிரைவேற்றாத போது....

API



