அல்லாஹ்விடத்தில் அன்பை அருளையும் பெற்றுக்கொள்வதற்கான இபாதத்துக்களில், நாட்களில் மிகச் சிறந்த நாளையும், இபாதத்தையும் கொண்ட மாதமே துல் ஹஜ்ஜாகும். அல்குர்ஆனில் அல்லாஹ் சத்தியம் செய்து இந்த மாதத்தை சிறப்பாக்கி இருக்கின்றான். காரணம் இபாதத்துகளில் அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதாலாகும்.இந் நாட்களில் மாத்திரம் தான் தொழுகை, நோன்பு,ஸதகா, ஹஜ் என அல்லாஹ் விதித்திருக்கும் கடமைகளில் அனைத்தையும் செய்ய வாய்ப்பிருக்கின்றது. அப்படியாக அறபா, ஹஜ்ஜின் தனித் தன்மைகள் இங்கு விளக்கப்படுகின்றன.
ஹஜ்ஜின் சிறப்புகள் - (தமிழ்)
ஒவ்வொரு இபாதத்துக்குமான வெகுமதிகளை அல்லாஹுதஆலா தந்திருக்கின்றான்.அவ்வெகுமதிகளில் மிகப்பெருமதியான வெகுமதியனை தருவதாக ஒப்புக் கொண்ட இபாதத் ஹஜ்ஜாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜை அடைய்ய இல்லற வாழ்வில் தவிர்ந்திருப்பது மட்டுமல்ல தீய காரியங்களிலிருந்து தவிர்ந்திருப்பதும் அவசியம். ஹஜ்ஜில் பொறுமை, அர்ப்பணம், தியாகம் கொண்டு நிறைவு செய்பவருக்கான கூலி சுவனமாகும் என்பதனையும் தெளிவபடுத்துகிறது.
ஹஜ் வணக்கங்கள் ஒரு சுருக்க அறிமுகம் - (தமிழ்)
வணக்கங்களில் மிக இலகுவான வணக்கம் ஹஜ்ஜாகும். ஆனால் இன்று கஷ்டமாக நினைத்துக் கொண்டிருக்கும் வணக்கமும் அதுவே.நபிகளார் அன்றிருந்த மக்களுக்கு அடி முதல் நுனி வரை ஹஜ்ஜை கற்றுக்கொடுக்க வில்லை, ஏனெனில் ஹஜ் நபி (ஸல்) வருகைக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது.எனவே ஏலவே இருந்த ஹஜ்ஜை நெறிப்படுத்தினார்கள். அந்த வகையில் ஹஜ் ஒரு சுருக்க அறிமுகமாக இங்கு தரப்படுகின்றது.
ஹஜ் ஏற்படுத்தும் சமய சமூக மாற்றங்கள் - (தமிழ்)
அனைத்து இபாதத்துக்களும் சமூகம் வோண்டி நிற்கின்ற மாற்றங்களை தாங்கி நிற்பவை.ஐக்கியம்,சகோதரத்துவம்,ஒருமைப்பாடு,நோர முகாமைத்துவம் அவற்றில் சிலவாகும். அது தொழுகை தொடக்கம் ஹஜ் வரையிலான அனைத்து இபாதத்துகளிளும் பொதிந்து காணப்படுகிறது. இந்த மார்க்கம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ள ஐந்து தூண்களில் ஹஜ்ஜும் ஒன்று. ஹஜ் உடலியல்,உளவியல்,நடத்தை ரீதியான மாற்றங்ளை தரும். அவ்வாறான மாற்றங்ளை இவ்உரை தொட்டுப் போசுவதாக அமைந்திருக்கின்றது.
ஹஜ் போதிக்கும் சமத்துவம் - (தமிழ்)
சமத்துவத்தை அடிப்டையாகக் கொண்டு உலக சமாதானத்தை பறை சாற்றும் வணக்கமே ஹஜ்ஜாகும். நிற, மத,மொழி வேறு பாடற்று ஒரே ஆடையில், ஒரே வசனத்தை மொழிந்தவர்களாக உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இந்த சமத்துவம் அல்லாஹ்வை ரப்பாகக் கொண்டவர்களுக்கு மாத்திரம் உரித்துடையதே தவிர இதனை இதர கொள்கைகளாளோ, சித்தாந்தங்களாளோ உருவாக்கி விட முடியாது. இஸ்லாம் தக்வாவை மாத்திரம் வைத்தே எடை போடும் என உரை....
தஜ்வீத் சட்டங்கள் - (தமிழ்)
அல் குர்ஆனை ஓதும் போது பிழையின்ற அழகிய முறையில் ஓதவேண்டும். தஜ்வீத் முறைப்படி ஓதும் சட்டங்கள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.
ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் - (தமிழ்)
நபி(ஸல்) க்கு எதிராகவும், அவர்களது தஃவாக் கெதிரான நெருக்குவாரங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. ஒரு முறை ஸைத் ப்னு ஹாரிஸா(ரழி) பார்க்கின்ற போது செருப்புகள் இரத்தத்தால் நனைகின்ற அளவு வருத்தம் கொடுக்கின்றனர்.அத்தோடு தஃவாப் பணியை தடுக்க முழு அளவிலான செயற்பாடுகள் ஆரம்பித்த போது ஹிஜ்ரத் தயாரானது. ஹிஜ்ரத் அழைப்புப் பணி எப்பொழுதும் எதிர்க்கப்படும் என்ற செய்தியினையும், மார்க்கத்தில் உறுதி, அல்லாஹ்வின் மீது பரம்சாட்டுதல்,திட்டமிடலின் அவசியம்,ஸஹாபாக்களின் நேசம் போன்ற படிப்பினைகள் இங்கு பேசப்படுகின்றது
ஹிஜ்ரத் ஓர் இறைதிருப்தியாகக் கொண்ட பயணம் - (தமிழ்)
தொழுகை,நோன்பை இபாதத்தாக பார்ப்பதைப் போன்று ஹிஜ்ரத்தை யாரும் ஓர் இபாதத்தாக பார்ப்பது கிடையாது. உள்ளத்தால் நிறை வேற்றப்பட வேண்டிய சோதனையே ஹிஜ்ரதாகும். தான் விரும்பிய அத்தனையும் அல்லாஹ்வின் விருப்பத்திற்காக விட்டுக்கொடுப்பதைக் குறிக்கும். அப்படியான ஒன்றுதான் நபிகளாரின் ஹிஜ்ரத். எப்போதும் ஒரு முஸ்லிம் போக விரும்பும் பூமியை விட்டும், அப் போதிருந்த வியாபார பூமி, வாழ் நாளுக்காய் சோர்த்த அத்தனையும் விட்டுச் சென்றார்கள்.அத்துடன் ஹிஜ்ரத்தின் இன்னும் சில வடிவங்களை இவ்உரை பேசுகின்றது.
ஹஜ்ஜதுல் விதாவும் ஓரிறைக் கொள்கையும் - (தமிழ்)
ஹஜ்ஜதுல் விதாஃ போதிக்கும் ஈமானிய அம்சங்களும் அதனுடன் தொடர்பான சில சம்பவங்களும்
அர்-ரபீஃ பின் சப்ரா அல் ஜூஹனி பின்வருமாறு அறிவித்தார், எனது தந்தை சப்ரா பின் மஅபத் அல் ஜுஹனீ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நான் (மக்கா வெற்றியின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் "முத்ஆ" திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி அளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத் திருமணத்திற்கு மறுமை நாள் வரைத்....
ஸஹாபாக்கள் இறைத் தூதரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளவில்லை எனும் ஷீஆக்களின் பொய்யான வாதமும், அதற்கான பதிலும்
படைக்கப்பட்ட மாதங்களில் சிலதை அல்லாஹ் சிறப்புக் குறிய மாதங்களாக ஆக்கி இருக்கின்றான். அவ்வாறு மாதங்களாக இருப்பினும் சரி, இடங்களாக இருப்பினும் சரி அவற்றை மனிதன் தானாக தீர்மானித்து விட முடியாது. அதனடியே இஸ்லாம் மாதங்களில் முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்தப்பட்ட மாதமாக மாற்றி இருக்கின்றது. இது இஸ்லாமிய மாதத்தில் முதல் மாதமாகும், ஹிஜ்ரத், கர்பலா போன்ற நிகழ்வு நடைபெற்ற மாதமாகும், ஆஷுரா,தாஸுஆ எனும் ரமழானுக்குப் பிந்திய சிறப்பு மிகு நோன்பைக் கொண்ட....

API


